பழைய வண்டி ஓட்றீங்களா.. உங்களுக்கு கட்டணம் எவ்வளவு தெரியுமா? மத்திய அரசு அதிரடி உத்தரவு
டெல்லி: 20 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வாகனங்களின் புதுப்பித்தல் கட்டணத்தை மத்திய அரசு அதிகரித்துள்ளது. இருசக்கர வாகனங்களுக்கு ரூ.1,000-ல் இருந்து ரூ.2 ஆயிரமாகவும், மூன்று சக்கர வாகனங்களுக்கு ரூ.3,500-ல் இருந்து ரூ.5 ஆயிரமாகவும் அதிகரித்துள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட இருசக்கர மற்றும் 3 சக்கர வாகனங்களுக்கு பதிவு சான்றிதழ் புதுப்பிக்கும் கட்டணம் ரூ.20 ஆயிரமாகவும், இறக்குமதியான 4 சக்கரம் அல்லது அதற்கு மேல் சக்கரங்களை கொண்ட வாகனங்களுக்கான கட்டணம் ரூ.80 ஆயிரமாகவும் உயர்த்தியுள்ளது.
பிஎஸ்-2 மாசு உமிழ்வு விதிமுறைகள் நடைமுறைக்கு வருவதற்கு முன்பு தயாரிக்கப்பட்ட வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கு அதிக கேடு விளைவிப்பவை என மத்திய அரசு வரையறுத்துள்ளது. எனவே, இத்தகைய வாகனங்களை பயன்பாட்டில் இருந்து படிப்படியாக நீக்க மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டிருந்தது. இதற்காக ஒரு வரைவு அறிவிக்கையை வெளியிட்டது. இதன்படி, 20 ஆண்டுகளுக்கு மேல் பழமையான 2 சக்கர மற்றும் கார்களின் பதிவை புதுப்பிப்பதற்கான கட்டணம் முறையே ரூ.2 ஆயிரம் மற்றும் ரூ.10 ஆயிரமாக உயர்த்த திட்டடமிட்டது. இதற்கான வரைவு ஒன்றை மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்டது.

அந்த வரைவு அறிக்கையில். 15 ஆண்டுகளுக்கு மேல் பழமையான நடுத்தர வர்த்தக வாகனம் மற்றும் கனரக வாகன பதிவை புதுப்பிப்பதற்கான கட்டணம் முறையே ரூ.12 ஆயிரம் மற்றும் ரூ.18 ஆயிரமாக உயர்த்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதே வாகனங்கள் 20 ஆண்டுகள் பழமையானதாக இருந்தால் புதுப்பிப்பு கட்டணம் முறையே ரூ.24 ஆயிரம் மற்றும் ரூ.36 ஆயிரமாக உயர்த்தப்படும் என கூறப்பட்டிருந்தது.
மத்திய அரசு கொண்டு வந்த இந்த கட்டண உயர்வு தற்போது அமலுக்கு வந்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் வெளியிட்டிருந்தது. அதன்படி 20 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இலகு ரக வாகனங்களுக்கான பதிவு புதுப்பித்தல் கட்டணம் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்பட்டிருக்கிறது.
இருசக்கர வாகனங்களுக்கு ரூ.1,000-ல் இருந்து ரூ.2 ஆயிரமாகவும், மூன்று சக்கர வாகனங்களுக்கு ரூ.3,500-ல் இருந்து ரூ.5 ஆயிரமாகவும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட இருசக்கர மற்றும் 3 சக்கர வாகனங்களுக்கு பதிவு சான்றிதழ் புதுப்பிக்கும் கட்டணம் ரூ.20 ஆயிரமாகவும், இறக்குமதியான 4 சக்கரம் அல்லது அதற்கு மேல் சக்கரங்களை கொண்ட வாகனங்களுக்கான கட்டணம் ரூ.80 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டு உள்ளது. 20 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வாகனங்கள் பயன்படுத்துவதை குறைக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications