Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் ஓமிக்ரான் பரவலுக்கு இடையே.. நம்பிக்கை தரும் "சின்ன ஒளிக்கீற்று"- வல்லுனர் பகிர்ந்த டேட்டா

Subscribe to Oneindia Tamil

சென்னையில் ஓமிக்ரான் பரவலுக்கு இடையே.. நம்பிக்கை தரும் "சின்ன ஒளிக்கீற்று"- வல்லுனர் பகிர்ந்த டேட்டா

சென்னை: சென்னையில் கொரோனா கேஸ்கள் வேகமாக அதிகரித்து வருகிறது. ஆனால் கொரோனா கேஸ்களை ஆராயும் வல்லுனர் ஒருவர் நம்பிக்கை அளிக்கும் செய்தி ஒன்றை பகிர்ந்து உள்ளார்.

இந்தியாவில் கொரோனா கேஸ்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 161,505 கொரோனா கேஸ்கள் பதிவானது. இந்தியாவில் தற்போது வரை 35,869,947 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் தற்போது 830,462 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். 483,936 பேர் இதுவரை இந்தியாவில் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.

ஆதிக்கம் மிக்க வகை

ஆதிக்கம் மிக்க வகை

இப்போது இந்தியாவில் ஏற்படும் கொரோனா கேஸ்கள் அனைத்திற்கும் ஜீன் சோதனை செய்யப்படுவது இல்லை. வெகு சில சாம்பிள்கள் மட்டுமே எடுக்கப்பட்ட அது என்ன வகையான கொரோனா என்ற சோதனைகள் செய்யப்படுகிறது. இருப்பினும் இந்தியாவில் பதிவாகும் பெரும்பாலான கேஸ்கள் ஓமிக்ரானாக இருக்கும் என்றே கருதப்படுகிறது. தற்போது ஓமிக்ரான்தான் இந்தியாவில் ஆதிக்கம் மிக்க கொரோன வைரஸ் வகை. இதில் நல்ல விஷயம் என்றால் ஓமிக்ரான் காரணமாக ஏற்படும் பெரும்பாலான கேஸ்கள் மைல்ட் கேஸ்களாகவே உள்ளது.

மைல்ட்

மைல்ட்

ஆம் பலருக்கும் காய்ச்சல் ஏற்படுவது போன்ற சாதாரண அறிகுறிகள், லேசான பாதிப்புகள் மட்டுமே ஏற்படுகிறது. 2ம் அலையில் ஏற்பட்டது போன்ற மோசமான பாதிப்புகள் இந்த அலையில் ஏற்படவில்லை. சென்னையிலும் இதே நிலைமைதான் தற்போது உள்ளது. சென்னையில் ஓமிக்ரான் ஏற்பட்டு இருக்கும் பலருக்கு லேசான, காய்ச்சல் அறிகுறிகள் மட்டுமே உள்ளன. இதனால் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது இல்லை. பலர் வீட்டிலேயே சிகிச்சை பெற்றுக்கொள்கிறார்கள்.

சென்னை

சென்னை

தமிழ்நாட்டில் தற்போது தினசரி கேஸ்கள் 13 ஆயிரத்தை தாண்டி உள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 13,990 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கையும் 62,767 ஆக உயர்ந்து இருக்கிறது. இதுவரை தமிழ்நாட்டில் 27,14,643 பேர் கொரோனாவில் இருந்து முற்றிலுமாக குணமடைந்துள்ளனர். சென்னையில்தான் கொரோன கேஸ்கள் அதிகமாக பதிவாகி வருகிறது. தமிழ்நாட்டில் பதிவாகும் மொத்த கேஸ்களில் பாதிக்கும் மேல் சென்னையில் பதிவாகி வருகிறது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 6190 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

சென்னை கொரோனா பாதிப்பு

சென்னை கொரோனா பாதிப்பு

பாசிட்டிவ் விகிதம் அடிப்படையில் பார்த்தால் சென்னையில் மொத்தமாக டெஸ்ட் எடுக்கப்படும் நபர்களில் 17.4 சதவிகிதம் பேர் பாசிட்டிவ் என்று வருகிறார்கள். சென்னையில் இப்போது 30843 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். கடந்த வருடம் இரண்டாம் அலையின் போது மே மாதத்தில் இதே அளவு ஆக்டிவ் கேஸ்கள் இருந்தன. ஆனால் அப்போது சென்னையில் மக்கள் பெட் கிடைக்காமல் கஷ்டப்பட்டு கொண்டு இருந்தனர். மருத்துவமனையில் இடம் கிடைக்காமல் பலர் சாலையில், ஆம்புலன்சில் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டது.

மருத்துவனை பெட் வீதம்

மருத்துவனை பெட் வீதம்

சென்னை மட்டுமின்றி நாடு முழுக்க இதே நிலைதான் இருந்தது. ஆனால் இந்த முறை ஓமிக்ரான் பரவலுக்கு இடையே சின்ன நம்பிக்கை ஒளிக்கீற்று ஒன்று பரவ தொடங்கி உள்ளது. சென்னையில் ஓமிக்ரான் கொரோனா பரவல் அதிகம் இருந்தாலும் பெட்கள் மிக குறைவாகவே நிரம்பி உள்ளது. இது தொடர்பாக கொரோனா டேட்டா வல்லுனர் விஜய் ஆனந்த் வெளியிட்டுள்ள தகவலில், சென்னையில் இந்த வருடமும் கடந்த வருடம் மே மாதமும் கிட்டத்தட்ட ஒரே அளவு கேஸ்கள்தான் இருந்துள்ளது.

ஒரே அளவு கேஸ்கள்

ஒரே அளவு கேஸ்கள்

சென்னையில் கடந்த வருடம் மே மாதம் 7ம் தேதி 33068 ஆக்டிவ் கேஸ்கள் இருந்தன. நேற்று கணக்குப்படி சென்னையில் 30843 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன. ஆனால் ஒப்பீட்டு அளவில் சென்னையில் மிக குறைவான பெட்களே நிரம்பி உள்ளது. இந்த முறை சென்னையில் 1234 ஆக்சிஜன் பெட்கள் நிரம்பி உள்ளன. கடந்த வருடம் இது 5591 ஆக இருந்தது. அதேபோல் இந்த வருடம் சென்னையில் 1380 ஆக்சிஜன் இல்லாத பெட்கள் நிரம்பி உள்ளன. கடந்த வருடம் இது 3030 ஆக இருந்தது. இந்த வருடம் சென்னையில் 222 ஐசியூ பெட்கள் நிரம்பி உள்ளன. கடந்த வருடம் இது 1723 ஆக இருந்தது.

குறைந்தது

குறைந்தது

அதாவது கடந்த வருடம் மே மாதத்தோடு ஒப்பிட்டால் சென்னையில் என்னதான் ஒரே அளவு ஆக்டிவ் கேஸ்கள் இருந்தாலும், மக்கள் அதிகமாக மருத்துவமனையில் சேரவில்லை. இதன் அர்த்தம் ஓமிக்ரான் கேஸ்கள் மைல்டாக இருக்கிறது என்பதுதான். அதாவது மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவிற்கு ஓமிக்ரான் கேஸ்கள் மோசமாக இல்லை. மக்கள் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகிறார்கள். பலருக்கு மிக மிக லேசான காய்ச்சல் போன்ற அறிகுறிகளே உள்ளன. இது ஒரு வகையில் நம்பிக்கை அளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது

Recommended Video

    Omicron 5 New Symptoms | AIIMS Delhi | Oneindia Tamil
    தீவிரமாக

    தீவிரமாக

    விஜய் ஆனந்த் வெளியிட்டுள்ள டேட்டா படி சென்னையில் ஆக்சிஜன் பெட்கள் கடந்த அலையை விட 78 சதவிகிதம் குறைவாக நிரம்பி உள்ளது. அதேபோல் சென்னையில் ஐசிடி பெட்கள் கடந்த அலையை விட 87 சதவிகிதம் குறைவாக நிரம்பி உள்ளது. இதன் காரணமாக மக்களுக்கு தீவிர பாதிப்பு ஏற்படவில்லை என்பது உறுதியாகி இருக்கிறது. ஓமிக்ரான் வகை தீவிரம் குறைவாக இருப்பதும், மக்கள் பலர் இரண்டு டோஸ்கள் போட்டதாலும், ஏற்கனவே பலருக்கு கொரோனா வந்து ஆண்டிபாடி உடலில் இருப்பதாலும் இந்த முறை தீவிர பாதிப்பு ஏற்படவில்லை என்றே மருத்துவ வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+