புத்தாண்டையொட்டி அண்ணா, கருணாநிதி நினைவிடங்களின் முதல்வர் ஸ்டாலின் மரியாதை

Subscribe to Oneindia Tamil

சென்னை: புத்தாண்டு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

2021 புத்தாண்டு உலகம் முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கட்டுப்பாடுகளுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக முதலமைச்சராக பதவியேற்ற பின் முதல் புத்தாண்டை கொண்டாடும் திமுக தலைவர் ஸ்டாலின் இன்று புத்தாண்டையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அண்ணா ஆகியோரது நினைவிடங்களை மரியாதை செலுத்தினார்.

On New Years Day Chief Minister MK Stalin paid homage at the memorials of Anna Karunanidhi

இதனையொட்டி மெரினாவில் அமைந்துள்ள கலைஞர் கருணாநிதியின் நினைவிடம் வண்ண மலர்களால் மயில் தோகை விரித்தது போல மிக சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது அங்கு சென்ற முதல்வர் முக ஸ்டாலின் முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா கருணாநிதி நினைவிடங்களை மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்திய போது அமைச்சர்கள் துரைமுருகன் கே.என்.நேரு, எ.வ.வேலு, சக்கரபாணி, சேகர்பாபு உள்ளிட்ட பலரும் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி கலைஞர் மற்றும் அண்ணா ஆகியோரது நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+