ஓணம் பண்டிகை...சென்னைக்கு...வரும் ஆகஸ்ட் 31ல்...உள்ளூர் விடுமுறை!!
சென்னை: வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அதிகளவில் மலையாளிகள் வசிப்பதால், ஒவ்வொரு ஆண்டும், விடுமுறை வழங்கப்படுகிறது.
ஓணம் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தில் துவங்கி செப்டம்பர் மாதம் வரை பத்து நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் கடந்த 22ஆம் தேதி துவங்கி வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நடக்கிறது. உலகம் முழுவதும் இருக்கும் மலையாளிகளால் இந்தப் பண்டிகை மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுவாக மலையாளிகள் சிங்கம் மாதத்தில் ஓணம் பண்டிகையை கொண்டாடுகின்றனர்.

திருவோணம் நாளில் மகாபலி தங்களது வீடுகளுக்கு வருவதாக கேரள மக்கள் நம்புகின்றனர். தமிழகத்தில் எப்படி தீபாவளி கொண்டாடப்படுகிறதோ அதேபோல், கேரளாவில் ஓணம் கொண்டாடப்படுகிறது. புத்தாடை அணிந்து, பல வகைகளில் உணவுகள் தயாரித்து மகாபலிக்கு படைத்து கொண்டாடுகின்றனர். பத்து நாட்கள் வீட்டுக்கு முன்பு பூக்கோலம் போட்டு மகாபலியை வரவேற்கின்றனர்.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவை மாவட்டம், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாவட்டத்தில் விடுமுறை குறித்து அறிக்கை வெளியிட்டு இருக்கும் அந்த மாவட்டக் கலெக்டர் சீதாலட்சுமி, ''ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி திங்கள்கிழமை சென்னை மாவட்டத்திற்கு அரசு ஆணைப்படி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.
மேற்படி உள்ளூர் விடுமுறைக்கு பதில் செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி சனிக்கிழமை சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.
ஆயினும் உள்ளூர் விடுமுறை நாளான அன்று அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலகங்கள் குறிப்பிட்ட பணியாளர்களைக் கொண்டு செயல்படும்'' என்று தெரிவித்துள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications