வாசுகி வந்துட்டாங்க.. "இந்தியா கூட்டணி"யால் நிஜமாகவே பாஜக கலங்கிடுச்சு.. ஒரே போடாக போட்ட சிபிஎம்
சென்னை: மத்திய அரசை கண்டித்து, வருகிற 1-ம் தேதி முதல் செப்டம்பர் 7-ம் தேதி வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் பிரச்சாரம் செய்ய போவதாக அறிவித்துள்ளது.. இதற்கு என்ன காரணம்?
எம்பி தேர்தல் மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்காக, "ஒரே நாடு, ஒரே தேர்தல்" திட்டத்தையும் கொண்டு வர முனைப்பு காட்டி வருகிறது.

இந்த திட்டத்துக்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால், இந்த திட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றன. இது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது என்றும், இரு அவைகளிலும் மட்டும் மசோதா நிறைவேற்றினால் போதாது, அது மாநில சட்டமன்றங்களாலும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் கருத்துக்கள் எழுந்து வருகின்றன.
கடும் எதிர்ப்பு: அந்தவகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன.. இந்தியா கூட்டணியால் அச்சத்தில் இருக்கும் பாஜக, இதிலிருந்து மக்களை திசை திருப்பவே இந்த திட்டத்தை கையில் எடுத்திருப்பதாகவும், ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்துக்காக குழு அமைத்திருப்பது ஜனநாயகத்துக்கு எதிரானது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சாடியுள்ளது.
அதுமட்டுமல்ல, இந்தியாவை ஜனநாயகத்தின் தாய் என்று பிரதமர் எப்போதுமே சொல்லி வரும்நிலையில், பிற அரசியல் கட்சிகளை கலந்து ஆலோசிக்காமல் இது தொடர்பாக எப்படி முடிவு எடுக்க முடியும்? என்றும் அக்கட்சி கேள்வி எழுப்பி வருகிறது.
சர்வாதிகார போக்கு: இந்நிலையில், ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மோடி அரசின் சர்வாதிகாரப் போக்கு என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகியும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய வாசுகி, வருகிற 1-ம் தேதி முதல் செப்டம்பர் 7-ம் தேதி வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் பிரச்சாரம் நடைபெறுகிறது.. "மோடி அரசே வேலை கொடு, விலையைகுறை' என்ற கோரிக்கையை முன்வைத்து, இந்த மக்கள் சந்திப்பு பிரச்சாரத்தை முன்னெடுக்க போகிறோம்.. மத்திய அரசு அலுவலகங்களில் 10 லட்சம் காலி பணியிடங்கள் உள்ளன..
பிம்பம்: அதேபோல, அவுட் சோர்சிங், ஒப்பந்த அடிப்படையிலான வேலைகளை மாற்றி, சமூக பாதுகாப்புடன் கூடிய வேலையை வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய மோடி அரசை கண்டித்து செப்டம்பர் 7-ம்தேதி தமிழகத்தில் மாநிலம் தழுவிய அளவில் மறியல் போராட்டம் நடத்தப்பட உள்ளது... பிரதமர் மோடி, தான் ஊழலுக்கு அப்பாற்பட்டவர் என்ற பிம்பத்தை உருவாக்கும் வகையில் பேசி வருகிறார்.
ஆனால், சமீபத்தில் வெளியிடப்பட்ட சிஏஜி அறிக்கையில், மத்தியஅரசின் பல்வேறு திட்டங்களில் ரூ.7.5 லட்சம் கோடிக்கு ஊழல் நடந்திருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.. அதானியின் மோசடி குறித்து ஒரு அமெரிக்க நிறுவனம் அறிக்கை வெளியிட்டு இருந்தது... ஆனால் இது குறித்து விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்க மத்திய அரசு மறுத்து வருகிறது. சனாதனம் பற்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சொன்ன கருத்துகளை, அமித்ஷாஉள்ளிட்ட பாஜக தலைவர்கள் திரித்து கூறுவது அவசியமற்றது...
தோல்விபயம்: கடலூர் மாவட்டத்தில் தண்ணீர் இல்லாமல் சம்பா பயிர்கள் கருகும் நிலையில் உள்ளது. அதனால், கர்நாடக அரசு காவிரியில் இருந்து உடனடியாக தண்ணீர் திறந்து விட வேண்டும். ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மோடி அரசின் சர்வாதிகாரப்போக்கு. இது அவர்களின் தோல்வி பயத்தையே காட்டுகிறது. இந்திய கூட்டணி மத்திய அரசுக்கு, நிஜமாகவே ஒரு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது" என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
வைகோ வருத்தப்பட போறாரு.. நிர்வாகிகளை தட்டித் தூக்கும் திமுக! ஆர்டர் போட்ட ஸ்டாலின்! துரை தான் பாவம்! -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால் -
உள்ளாட்சி தேர்தலில் வாங்க பார்த்துக்கிறோம்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு சவால் விட்ட அனிதா ராதாகிருஷ்ணன் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
SC/ST நிதி வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டதா? அது வெறும் அவதூறு.. அமைச்சர் வன்னி அரசு விளக்கம்! -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்!












Click it and Unblock the Notifications