குடும்பத்திற்கு ரூ.1 கோடி, பொருளாதார ரீதியில் இடஒதுக்கீடு.. இந்து மக்கள் கட்சி அதிரடி தேர்தல்அறிக்கை
சென்னை: குடும்பத்திற்கு ரூ. 1 கோடி கொடுத்து அனைவரையும் கோடீஸ்வரர் ஆக்குவோம் என்றும் பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என்றும் இந்து மக்கள் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் அனைத்துக் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
இந்தத் தேர்தலில் திமுக, அதிமுக என இரு கட்சிகளும் வலுவான கூட்டணியை அமைத்துள்ளது. இதுதவிர மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், அமமுக உள்ளிட்ட கட்சிகளும் களமிறங்குகின்றன.

தனித்துப் போட்டி
இந்த சட்டசபை தேர்தலில் அர்ஜுன் சம்பத்தின் இந்து மக்கள் கட்சி அதிமுக - பாஜக கூட்டணியிலேயே இடம் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், சில காரணங்களால் இந்த கூட்டணி அமையவில்லை. அதைத்தொடர்ந்து இந்து மக்கள் கட்சி சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் அறிவித்தார். அதன்படி 71 இடங்களில் இந்து மக்கள் கட்சி போட்டியிடுகிறது.

இந்து மக்கள் கட்சி தேர்தல் அறிக்கை
இந்து மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையை நேற்று அக்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் வெளியிட்டார். அதில், இந்து மக்கள் கட்சி ஆட்சி அமைக்கும் சூழலில், தமிழ்நாட்டில் இந்து சமய, சனாதன தர்மத்தின் முறைப்படி ஆட்சி நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், மாநிலம் முழுவதும் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்றும் பசுவதைத் தடைச் சட்டம் அமல்படுத்தப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய்
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் 1 கோடி ரூபாய் வழங்கி மக்கள் அனைவரையும் கோடீஸ்வரர் ஆக்குவோம். அனைத்து இலவசத் திட்டங்களும் ரத்து செய்யப்படும். 18 வயது பூா்த்தியடைந்த பின் ஓராண்டு ராணுவப் பயிற்சி கட்டாயமாக்கப்படும். இந்து கோயில் நிர்வாகத்தை அறங்காவலர் சபை உருவாக்கி ஒப்படைக்கப்படும்.

பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு
ஜாதி, மத அடிப்படையிலான அனைத்து சலுகைகளும் ரத்து செய்யப்படும். மேலும், பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்படும். திருவண்ணாமலை, அறுபடை வீடுகள் அமைந்த நகரங்கள், ராமேஸ்வரம் போன்றவை புனித நகரங்களாக அறிவிக்கப்படும். அங்கு மது, மாமிசம், தடை செய்யப்படும். மேலும், மத மாற்ற தடை சட்டம் உள்ளிட்ட 64 வாக்குறுதிகள் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்தன.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications