தாம்பரத்தில் பயங்கரம்.. ஓடும் பைக் தீப்பிடித்து எரிந்தது.. ஓட்டி வந்தவர் தீயில் கருகி பலி!
சென்னை: நடுரோட்டில் பைக்கில் தீ பிடித்ததால், அதை ஓட்டி கொண்டு வந்தவரும் அப்படியே நெருப்பில் பற்றிக் கொண்டு எரிந்து தீயில் கருகினார். நெடுஞ்சாலையில் நடந்த சம்பவம் சென்னை நகரையே உலுக்கி உள்ளது.
அரசு பல விழிப்புணர்வுகளை மேற்கொண்டு வந்தாலும், இன்னமும் சாலை விபத்துக்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. சென்னையில், தாம்பரம்- மதுரவாயல் புறவழிச்சாலையில் பைக்கில் இன்று மதியம் 2 நண்பர்கள் சென்று கொண்டிருந்தனர்.
நடுரோட்டில் பைக் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரெனை பைக் தீப்பற்றி குபுகுபுவென எரிய ஆரம்பித்தது. பைக்கில் இருந்தவர்களால் உடனடியாக நிறுத்தவும் முடியவில்லை, குதிக்கவும் முடியவில்லை. மொத்தமாக பற்றி கொண்டு எரிந்ததில், இருவருமே தீயில் சிக்கி கொண்டனர்.

அதிர்ச்சி
இதில், பைக்கில் பின்னால் உட்கார்ந்து கொண்டிருந்தவர் சுதாரித்து கொண்டு திடீரென கீழே குதித்து தப்பி விட்டார். ஆனால் வண்டியை ஓட்டி கொண்டிருந்தவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். நண்பன் தீயில் கருகி உயிரிழப்பதை அதிர்ச்சியுடன் பார்த்து கொண்டிருந்தார் தப்பித்த அந்த நபர்.

அதிர்ச்சி
அங்கிருந்த யாரிடமும் எதுவும் பேசவில்லை. உடல் முழுவதும் தீக்காயங்களுடன் பிரம்மை பிடித்தபடியே அதிர்ச்சியில் உறைந்து உட்கார்ந்து விட்டார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஆஸ்பத்திரிரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பொதுமக்கள்
முற்றிலுமாக எரிந்து முடிந்த பைக் பிதி சாம்பலாகிவிட்டது. சாலையில் சென்றவர்கள் அனைவருமே இந்த காட்சியை கண்டு பீதி அடைந்தனர். எதற்காக பைக்கில் தீ பிடித்தது என்பது உடனடியாக தெரியவில்லை.

போலீசார் ஆய்வு
அதேபோல் பைக்கில் வந்தவர்களின் விவரமும் தெரியவில்லை. இந்த விபத்து குறித்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications