சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பிரேமலதா விஜயகாந்த் சொல்வதுதான் சரி.. வாசகர்கள் அதிரடி!

Google Oneindia Tamil News

சென்னை: பெண்கள் நெருப்பாக இருந்தால் மீ டூ எப்படி வரும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கருத்தை வாசகர்களும் ஆமோதித்துள்ளனர்.

நாடு முழுவதும் பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகள் குறித்து மீ டூ என்ற இயக்கம் மூலம் அம்பலப்படுத்தி வருகின்றனர். இதில் பிரபலங்களும் தப்பவில்லை.

அண்மையில் தேமுதிகவின் பொருளாளராக பொறுப்பேற்ற பிரேமலதாவிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் கூறுகையில் பெண்கள் நெருப்பாக இருந்தால் மீ டூ எப்படி வரும் என கேள்வி எழுப்பியிருந்தார்.

[விதம் விதமான ஹேர்ஸ்டைல்.. அசரடிக்கும் மேக்கப்.. ஆனால் அனிதாவின் வேலை என்ன தெரியுமா!]

நமது வாசகர்கள்

நமது வாசகர்கள்

இந்த கருத்தும் சரியாகவே இருக்கிறது. பாலியல் துன்புறுத்தல் செய்வோரிடம் பெண்கள் கடுமையாக நடந்து கொள்ள வேண்டும். இதுகுறித்து நமது வாசகர்களிடம் கருத்து கணிப்பு கேட்கப்பட்டது.

நோ கமெண்ட்ஸ்

நோ கமெண்ட்ஸ்

இதில் மூன்று ஆப்ஷன் கொடுக்கப்பட்டது. ஒன்று சபாஷ் சரியான பேச்சு, தவறான பேச்சு, நோ கமெண்ட்ஸ் ஆகியவை ஆகும். மீ டூ குறித்து பிரேமலதா எந்த கருத்து கூறினால் எனக்கென்ன கூறாவிட்டால் எனக்கென்ன, அதாவது நோ கமெண்ட்ஸுக்கு 6.26 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.

தவறான பேச்சு

தவறான பேச்சு

அடுத்தபடியாக அது எப்படி பெண்ணாக இருந்து கொண்டு பிரேமலதா இப்படி பேசலாம். அதையெல்லாம் ஒத்துக் கொள்ள முடியாது, அதாவது தவறான பேச்சு என்ற ஆப்ஷனை 8.22 சதவீதம் பேர் தேர்வு செய்துள்ளனர்.

பிரேமலதா பேசியது சரியே

பிரேமலதா பேசியது சரியே

பாலியல் ரீதியாக ஒரு ஆண் அணுகுகிறான் என்றால் அந்த பெண் உடனுக்குடன் தனது எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும். அப்போது சும்மா இருந்து விட்டு பல ஆண்டுகள் கழித்து குறை கூறுவதில் யாருக்கு என்ன பயன், அதாவது பிரேமலதாவின் கருத்து சரிதானே என்று 85.51 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.

English summary
One India readers says that Premalatha Vijayakanth's comment on Me too movement is right one.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X