பாஜக கூட்டணி முறிவு-கேபி முனுசாமி அறிவித்த போது கைதட்டாத’ 2’ தலைகள் ஓகே.. இவருமா? அதிமுக அக்கப்போர்!
சென்னை: பாஜகவுடனான கூட்டணியை அதிமுக முறித்துக் கொண்டதாக அறிவித்த கையோடு இரு கட்சிகளின் 'தலை'களும் பெரும் அமைதியாக இருந்து வருகின்றனர். ஆனாலும் அதிமுகவில் 'துரோகிகள்' குறித்த விவாதம் ஓயாமல் நடந்து வருகிறதாம்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்த கட்சிகள் எதுவும் முழுமையாக திரும்பியதில்லை. என்னதான் கூட்டணியில் இருந்தாலும் பாஜகவால் தயவு தாட்சண்யம் பார்க்காமல் சிதைக்கப்படாத கட்சியே இல்லை எனலாம்.

சிதைந்து போன சிவசேனா: அப்படி இருக்கும் போது பாஜகவை முறைத்துக் கொண்டு கூட்டணியே வேண்டாம் என் முடிவெடுத்த கட்சிகள் நிலைமையை சொல்ல வேண்டியது இல்லை. மகாராஷ்டிராவில் சிவசேனா என்ற கட்சியையே அதிருப்தி கோஷ்டி கபளீகரம் செய்யும் அளவுக்கு கொண்டு போய்விட்டது நிலைமைதான். உத்தவ் தாக்கரே தந்தை தொடங்கிய கட்சி அவருக்கே சொந்தமில்லை என்கிற நிலைமை உருவாக்கப்பட்டது.
பாஜக பிடியில் அதிமுக: தமிழ்நாட்டிலும் பாஜக கூட்டணியில் சேர்ந்த அதிமுகவின் ஒட்டுமொத்த பிடியும் டெல்லியிடம்தான் சிக்கி இருந்தது. இதனை திமுக உள்ளிட்ட கட்சிகள் மிக கடுமையான வார்த்தைகளால் விமர்சித்திருந்தன. தமிழ்நாட்டில் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்தித்தால் உள்ளதும் போய்விடும் என்பதை அதிமுக உணர்ந்திருந்தும் சில பல காரணங்களால் டெல்லியிடம் சிக்கிக் கொண்டது.
அதிமுகவை உடைக்க சதி: லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் அதிமுகவை மெல்ல அழிக்கும் நகர்வுகளை கச்சிதமாக டெல்லி தொடங்கி இருந்தது. டெல்லி பிடியில் சிக்கிய 2 அதிமுக தலைகள்தான் இந்த அசைன்மெண்ட்டின் லீடர்கள். அவர்களை வைத்து அதிமுகவை உடைப்பது என்பது டெல்லியின் திட்டம். இதனை ஒவ்வொரு கட்டமாக முறியடித்துக் கொண்டே வந்தார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அந்த இரு தலைகளும் தமக்கு தெரியாமல் டெல்லி சென்று சதித் திட்டத்தை நிறைவேற்றப் போகிறார்களோ என்கிற அச்சத்தில் அவர்களது முயற்சியையும் முறியடித்தார்.
ஆவேசம் காட்டாத எடப்பாடி பழனிசாமி: இன்னும் சும்மா இருக்க முடியாது என்பதற்காக நேற்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டி, பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக தீர்மானம் நிறைவேற்றிவிட்டார் எடப்பாடி பழனிசாமி. இது தொடர்பாக அந்தக் கூட்டத்தில் கருத்து கேட்கப்பட்ட போது கூட அனைவரது பார்வையும் அந்த இரு தலைகளின் மீதுதான் இருந்ததாம். அந்த இரு தலைகளும் கூட்டத்தில் இருந்ததாலேயே எடப்பாடி பழனிசாமியும் பாஜகவுக்கு எதிரான ஆவேசத்தை உக்கிரமாக காட்டவும் இல்லையாம்.

ஈயாடாத அந்த இரு தலைகள்: இந்த தீர்மானத்தை செய்தியாளர்களிடம் மூத்த அதிமுக தலைவர் கேபி முனுசாமி வாசித்த போது, உடன் இருந்த 2 தலைகள் முகத்திலும் ஈயாடாமல், எந்த ஒரு ரியாக்சனும் காட்டாமல் நாங்களும் இங்கதான் இருக்கிறோம் என நின்றிருந்தனர். அதனாலேயே ஒரு செய்தியாளர், இத்தீர்மானத்துக்கு யாருமே எதிர்ப்பு தெரிவிக்கவில்லையா? என செய்தியாளர் குறும்பாக கேட்க, ஆளைவிட்டால் போதும் என தெறித்து ஓடினர் அதிமுக தலைகள்.
இன்னொரு 'தலையும்' பாஜக ஆதரவு நிலை?: இதில் விஷயமே என்னவென்றால், கேபி முனுசாமி, பாஜகவுடனான கூட்டணி முறிந்தது என தீர்மானத்தை வாசித்த போது தாங்கள் முன்னாள் அமைச்சர்கள் என்பதையும் மறந்து பொதுவெளியில் சிலர் கை தட்டி ஆராவரம் செய்தனர். ஆனால் அந்த சர்ச்சைக்குரிய 2 தலைகளும் அமைதியாக இருந்தனர். அதேநேரத்தில் அவர்களுக்குப் போட்டியாக இன்னொரு அதிமுக தலையும் அப்படி ஒரு இறுக்கமான முகத்தில் இருந்ததுதான் அதிமுக வட்டாரத்தில் இப்போது ஹைலைட் விவாதம். இது தொடர்பாக அதிமுக வட்டாரங்களில் விசாரித்த போது, ஜெயலலிதாவிடமே சிக்கி ஒடுக்கி வைக்கப்பட்டவர்தான் அந்த தலை. அவருக்கும் தலைக்கு மேல் கத்தி தொங்குது. அவரும் அந்த 2 பேருடன் நெருங்கிய டீலிங்கில் உள்ளவர்தான். அவருக்கும் உதறல் இருக்கத்தானே செய்யும். அதான் அந்த இறுக்கம் என கமுக்கமாகவே சிரிக்கின்றனர்.
-
மீண்டும் திமுக தான்.. விஜய்யின் தவெகவால் ஸ்டாலினுக்கு ‘ஜாக்பாட்’.. அதிமுகவிற்கு ஷாக்! டேட்டா பாருங்க -
பழைய நியூஸ் பேப்பரை காட்டி பிரச்சாரம் செய்யும் எடப்பாடி பழனிசாமி.. உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி -
மீஞ்சூரில் சூறையாடப்பட்ட மாணவி.. வாய் திறப்பாரா ஸ்டாலின்? உச்சகட்ட கோபத்தில் எடப்பாடி பழனிசாமி! -
பச்சைத் துண்டு எடப்பாடி பழனிசாமி ஒரே போடு.. நிலமே இல்லாமல் விவாதமாகும் அசையா சொத்து விவரம் -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவோம்.. பாஜக வாக்குறுதியை சொல்லி வாக்கு சேகரித்த ராஜன் செல்லப்பா! -
அசைக்க முடியாத அதிமுகவின் எஃகு கோட்டை..50 ஆண்டுகளாக திமுக வெல்லாத நிலக்கோட்டை! மல்லிகை ஊர் யாருக்கு? -
ஜெயலலிதா இருந்தவரை வாலை சுருட்டி இருந்தாங்க.. நான் இருந்திருந்தால்.. கண் சிவந்த சசிகலா -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா












Click it and Unblock the Notifications