Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆட்சியை இழக்கும் 17 மாநிலங்கள்.. பாஜக திட்டம் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரே நாடு ஒரே தேர்தல் ஏன் சாத்தியமற்றது என்பது பற்றி மூத்த வழக்கறிஞர் மிக விரிவாக விளக்கம் அளித்திருக்கிறார். அதை நடைமுறைப் படுத்துவதில் உள்ள குழப்பங்கள் என்ன என்பது பற்றியும் அவர் கூறியுள்ளார்.

ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு ஒரே நாடு ஒரே தேர்தலைச் செயல்படுத்துவதற்காக 18 ஆயிரத்து 626 பக்கங்கள் கொண்ட அறிக்கையைக் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடம் தாக்கல் செய்துள்ளது. இதற்கு உடனடியாக மோடி தலைமையிலான அமைச்சரவையும் ஒப்புதல் அளித்துள்ளது. இது செயல்வடிவம் பெற்றால் மத்திய அரசு சட்டம் இயற்றினால் மாநில அரசுகளின் ஒப்புதலைப் பெறத் தேவை இருக்காது என்றும் சொல்லப்படுகிறது. மற்றொரு பக்கம் இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு வந்தால் 17 மாநிலங்களை ஆட்சி செய்து வரும் கட்சிகள் தங்களின் ஆட்சியை இழக்கும் அபாயம் உள்ளதாகவும் ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது.

election commission of india pm modi

மத்திய அரசின் இந்தத் திட்டம் குறித்து இன்று தனது எக்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், "ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறை சாத்தியமில்லாதது. இது தேசிய கட்சிகளுக்குச் சாதகமான ஒரு நடைமுறை" என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்துப் பேசிய வைகோ, "இந்தியாவை நாசப்படுத்தும் திட்டம். இதனால் இந்தியா துண்டு துண்டாக உடையும்" என்று கூறியிருக்கிறார்.

ஏறக்குறைய 'இந்தியா' கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை ஆரம்பம் முதலே எதிர்த்து வருகின்றன. இத்திட்டம் சரியா? நடைமுறைக்கு ஒத்துவருமா? அது பற்றிப் பேசிய மூத்த வழக்கறிஞர் விஜயன், "மாநில அரசை 356 சட்டப்பிரிவைப் பயன்படுத்தி மத்திய அரசு கலைப்பதற்காக உரிமையை இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கி இருக்கிறது. அதே நேரத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற நடைமுறையும் கொண்டு வரப்படுகிறது. இதைச் செயல்படுத்துவதில் ஒரு சிக்கல் இருக்கிறது.

உதாரணமாக 2025இல் ஒரே நாடு ஒரே தேர்தல் என்று மத்திய அரசு நடைமுறைக்குக் கொண்டு வருகிறது என வைத்துக் கொள்வோம். அந்த ஆட்சி 5 ஆண்டு காலம் தொடரும். இடையில் திடீரென்று ஏதோ ஒரு மாநிலத்தில் 356 பிரிவைப் பயன்படுத்தி ஆட்சியைக் கலைத்துவிடுகிறார்கள். ஒரே நாடு ஒரே தேர்தலின்படி 5 ஆண்டுகள் கழித்துத்தான் தேர்தல் நடத்தப்படும். அப்படியானால் இடைப்பட்ட காலத்தில் ஆட்சிக் கலைக்கப்பட்ட மாநிலத்தில் மீண்டு தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு உள்ளதா? இல்லை எனில் ஆட்சிக் கலைக்கப்பட்ட மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி நடைபெறுமா? இது பற்றி ஒரு தெளிவு இல்லை.

அடுத்து மாநில அரசு சட்டம் இயற்றுவதற்கான அதிகாரம் என்பது தனியாக உள்ளது. மத்திய அரசு சட்டம் இயற்றத் தனி அதிகாரம் உள்ளது. ஒரு மாநிலத்தின் ஆட்சிக் கலைக்கப்பட்டால் அதன் உரிமையை யார் காப்பாற்றுவது? இடைப்பட்ட காலத்தில் ஆளுநர் ஆட்சி எப்படி மாநில உரிமைக்குச் சட்டம் இயற்ற முடியும்? அடுத்த 5 ஆண்டுகள் தேர்தல் வரும்வரை காத்திருந்தால், அது ஜனநாயக படி சரியாக? இதை மக்கள் நன்மைக்காகக் கொண்டுவருவதாக பாஜக அரசு சொல்கிறது.

ஆனால், மக்கள் இப்படி ஒரு திட்டம் தேவை என கோரிக்கை வைத்ததாகத் தெரியவில்லை. இப்போது நடந்த 2024 மக்களைவைத் தேர்தலை 6 கட்டங்களாக நடத்தினார்கள். ஏன் அதை ஒரே கட்டமாக நடத்த முடியவில்லை? ஒரே நேரத்தில் நடத்துவதற்காக உபகரணங்கள் இல்லை என்றும் அதற்கான ஊழியர்கள் இல்லை என்றும் தேர்தல் ஆணையம் பதிலளித்தது.

அப்படியான சூழலில் இந்தியா முழுமைக்கும் மத்திய, மாநில அரசு தேர்தலை ஒரே நேரத்தில் எப்படி நடத்த முடியும்? அப்போது மட்டும் ஊழியர்கள் எண்ணிக்கை போதும் படியாக உயர்த்த முடியும்? அது எப்படி சாத்தியம்? இதை எப்படி நடைமுறைப்படுத்தப் போகிறார்கள்? அப்படிச் செய்யும் போது காலாவதியாகாமல் உள்ள மாநில அரசின் ஆட்சிக்காலத்தை எப்படி அகற்றுவார்கள்? இதற்கு எல்லாம் சரியான பதில் வழங்கப்படவில்லை" என்கிறார்.

election commission of india pm modi

இது பற்றி விசிக எம்பி ரவிக்குமார் பேசுகையில், "மோடி தன் பிரதமர் பதவியைத் தக்கவைத்துக் கொள்வதற்காகச் செய்யும் முயற்சி இது. பாஜக 75 வயதுக்கு மேல் உள்ளவர்கள் பதவியில் இருக்கக் கூடாது என்ற விதிமுறையை வைத்துள்ளது. அதனால் மோடியை விலக்கிவிட்டு நித்தின் கட்கரியை அந்த இடத்திற்குக் கொண்டு வர பாஜக முயன்று வருகிறது. அதை மறைத்து தன்னை தக்க வைக்கவே மோடி இதைச் செயல்படுத்த முயல்கிறார். இது மசோதா சட்டமாவது கடினம்.

மாநிலங்களவையில் பலம் பாஜகவுக்கு இல்லை. அதைக் கொண்டு வர பாஜக போராடி வருகிறது. அதன்பின்னர் இதற்கு மாநில அரசுகளின் ஒப்புதலைப் பெற வேண்டும். அது எளிதான காரியம் இல்லை. வரும் 2026இல் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு செய்ய வேண்டி உள்ளது. அதற்கு இடையில் இதை நடைமுறைப் படுத்த முடியாது. இது பாஜக செய்கின்ற தந்திரம். வெற்றி பெறாது" என்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+