சென்னை முதல் கன்னியாகுமரி வரை.. இன்று முதல் எங்கிருந்தும் ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இதனால் தமிழகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் சரி ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.

நாடு முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளையும் கணினிமயப்படுத்தி ஒரே மையத்தின் கீழ் கொண்டு வந்து, எந்த இடத்திலிருக்கும் ரேஷன் கடைகளிலும் நாட்டின் எந்த மூலையிலிருக்கும் ரேஷன் அட்டைதாரரும் பொருட்களை வாங்கிக் கொள்வதே ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டமாகும்.

One Nation One Ration scheme is implemented from today in Tamilnadu

மத்திய அரசு கொண்டு வந்த இந்த திட்டத்திற்கு தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. எனினும் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இந்த திட்டம் இந்தியாவில் அமலானது.

அந்த வகையில் தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி ஆகிய இரு மாவட்டங்களில் சோதனை முயற்சியாக இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதில் வெற்றி கிடைக்கவே, இன்று முதல் தமிழகத்தின் 32 மாவட்டங்களில் இந்த திட்டம் அமல்படுத்தப்படுகிறது.

இன்று காலை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை செயலகத்தில் இருந்து இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். தமிழகத்தில் 2.09 கோடி பேருக்கு ரேஷன் கார்டுகள் உள்ளன. இவர் 34 ஆயிரம் கடைகள் மூலம் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்கிறார்கள்.

அந்த 2.09 கோடியில் ஒன்றரை கோடி ரேஷன் அட்டைதாரர் மட்டுமே பொருட்களை வாங்குகிறார்கள். ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்திற்காக விரல் ரேகையை பதிவு செய்யும் கருவி பொருத்தும் பணிகள் 32 மாவட்டங்களில் முழுமையாக நடந்தன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+