திமுக மாவட்டச் செயலாளர்கள் ஒன் டூ ஒன் மோதல்! நேரு முன்னிலையில் காரசாரம்! அதிர்ந்த அண்ணா அறிவாலயம்!
சென்னை: அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் இருவரிடையே நடந்த ஒன் டு ஒன் மோதலால் பஞ்சாயத்து செய்த டீமே சற்று அதிர்ந்து போய்விட்டதாம்.
நிலைமை கைமீறிச் சென்றதால், நீங்க இரண்டு பேரும் தலைவரையே பாருங்க என ஸ்டாலினிடம் அழைத்துச் சென்று விட்டிருக்கிறார் அன்பகம் கலை.

தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருப்பவர் கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ.. அதே போல் தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளராக இருப்பவர் தங்க தமிழ்ச்செல்வன். இவர்கள் இருவருக்கும் இடையேதான் அண்ணா அறிவாலயத்தில் நேற்று முன் தினம் வியாழக்கிழமை பஞ்சாயத்து நடந்துகொண்டிருக்கும் போதே மோதல் வெடித்திருக்கிறது.
ஆர்.எஸ்.பாரதி, அன்பகம் கலை, அமைச்சர் நேரு ஆகியோர் முன்னிலையிலேயே இருவரும் சரமாரியாக ஒருவரை ஒருவர் தாக்கி பேசியிருக்கின்றனர். இந்த பஞ்சாயத்திற்கு காரணமே கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தான் எனத் தெரிவிக்கப்படுகிறது. தங்க தமிழ்ச்செல்வன் தேனி தெற்கு மாவட்ட திமுக நிர்வாகத்திற்குட்பட்ட கம்பத்தில் அலுவலகம் அமைத்து குழப்பம் ஏற்படுத்துவதாக தலைமைக்கு புகாரை தட்டிவிட்டார்.
அதோடு மாவட்டம் விட்டு மாவட்டம் அரசியல் செய்து தொண்டர்கள் மத்தியில் கோஷ்டியை வளர்க்கிறார் என கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ. புகார் தெரிவித்திருந்திருக்கிறார். இது தொடர்பாக இருவரையும் அழைத்து பஞ்சாயத்து பேசிய இடத்தில் தான் வார்த்தைகள் முற்றி ஒன் டு ஒன் சரமாரியாக இருவரும் திட்டிக்கொண்டனர்.

இதற்கு மேல் இவர்களை அமர வைத்து பேசினால் நமக்கு மரியாதை இருக்காது எனக் கருதிய அன்பகம் கலை, நீங்க இரண்டு பேரும் தலைவரை பாருங்க என ஸ்டாலினிடம் அழைத்துச் சென்றார். அவரோ இருவருக்கும் அறிவுரைகள் வழங்கியதுடன் உங்கள் இரண்டு பேரின் சீனியாரிட்டிக்கும் இது போல் செய்வது அழகா எனவும் வினவி பஞ்சாயத்தை முடித்துவைத்திருக்கிறார்.
இருப்பினும் தங்க தமிழ்செல்வன், கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ. இடையே இன்னும் பனிப்போர் ஓய்ந்தபாடில்லை. தேனி மாவட்ட திமுகவில் இதே நிலை நீடித்தால் சில அதிரடி ஆக்ஷனை எடுக்கவும் திமுக தலைமை தயாராகிவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications