விலையை கேட்டாலே கண்ணீர் கொட்டுதே.. உச்சத்தில் வெங்காய விலை.. எப்போது தான் குறையும்! ஷாக் தகவல்
சென்னை: தமிழ்நாட்டில் திடீரென கடந்த சில நாட்களாக வெங்காய விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. நேற்றைய தினம் மாநிலத்தில் சில இடங்களில் வெங்காயம் விலை ரூ. 70+க்கு கூட விற்கப்பட்டது. வெங்காய விலை இந்தளவுக்கு அதிகரிக்க என்ன காரணம்.. இது எவ்வளவு காலம் நீடிக்கும்.. எப்போது விலை குறையத் தொடங்கும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
நமது நாட்டில் சமையலுக்கு முக்கியமாகத் தேவைப்படும் காய்கறி என்றால் அது வெங்காயம் தான். சாம்பார் முதல் பிரியாணி வரை கிட்டதட்ட எல்லா உணவுகளிலும் இருக்கும் முக்கிய காய்கறியாக வெங்காயம் இருக்கிறது.

வெங்காய விலை: கடந்த சில மாதங்களாகவே நாட்டில் வெங்காய விலை சீராகவே இருந்தது. ஆனால், இப்போது திடீரென வெங்காய விலை உச்சம் தொட்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் சில இடங்களில் நேற்றைய தினம் வெங்காய விலை ரூ. 90ஐ தாண்டியும் விற்பனையாகிறது. இன்று தரமான வெங்காயம் சென்னை கோயம்பேட்டில் ரூ.70-80க்கு விற்பனையாகிறது. இன்றைய தினம் வெங்காய விலை சற்று குறைந்து இருக்கிறது என்ற போதிலும் முழுமையாகச் சீராகவில்லை. இதற்கான என்ன காரணம்.. வெங்காய விலை எப்போது குறையும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
என்ன காரணம்: வெங்காய வரத்துக் குறைவாக இருப்பதால் இப்போது விலை அதிகரித்துள்ளதாகவும் இது தற்காலிகமான ஒன்றுதான் என்றும் நாட்டிலேயே அதிகளவில் வெங்காயம் விளையும் மாவட்டமான மகாராஷ்டிராவின் நாசிக் வெங்காய வியாபாரிகள் கூறுகிறார்கள். அவர்கள் மேலும் கூறுகையில், "கடந்த ஆண்டு ரபி பருவத்தில் இருந்து, இந்த மார்ச் வரை அறுவடை செய்யப்பட்ட வெங்காய இருப்பு கிட்டதட்ட முடிந்துவிட்டது.. அதேநேரம் புதிய வெங்காயம் இன்னும் சந்தைக்கு வரவில்லை. இதனால் தேவைக்கு ஏற்ப வரத்து இல்லை. இதுவே விலை உயர்வுக்கு காரணமாகும்" என்கிறார்கள்.
நாட்டிலேயே மிகப் பெரிய வெங்காய சந்தையான லாசல்கான் மொத்த விற்பனை சந்தைக்கு இப்போது தினசரி 200-250 டன் வெங்காயம் வருகிறது. கடந்தாண்டு இதே காலகட்டத்தில் அங்கு வெங்காய வரத்து 1,000 டன்னாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மழை தான் காரணம்: பொதுவாக வெங்காயம் என்பது ஆண்டுக்கு மூன்று முறை பயிரிடப்படுகிறது. விவசாயிகள் ஜூன்- ஜூலை மாதங்களில் காரிஃப் வெங்காயத்தை விதைத்து, அதை அக்டோபர் முதல் அறுவடை செய்வார்கள். ஆனால், இந்தாண்டு அக். மழை, தீபாவளி பண்டிகை உள்ளிட்ட காரணங்களால் இது தாமதமாகியிருக்கிறது. குறிப்பாக இந்த அக்டோபர் மழையால் காரீஃப் பயிர்களின் அறுவடை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவே வரத்து குறைய முக்கிய காரணமாகும்.
அதேநேரம் விவசாயிகள் இப்போது அறுவடையைத் தொடங்கிவிட்டார்கள்.. இதனால் அடுத்த 10 நாட்களில் அறுவடை முடிந்து, அதிகளவில் வெங்காயம் சந்தைக்கு வரும். இதன் மூலம் விலை சீராகும் என வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
தேர்தலில் எதிரொலிக்குமா: மகாராஷ்டிராவில் அடுத்த வாரம் தேர்தல் நடைபெறும் நிலையில், வெங்காய விலை அங்கு ஆளும் பாஜக கூட்டணிக்குத் தலைவலியைத் தரலாம்.. முன்னதாக கடந்த லோக்சபா தேர்தலில் அங்குள்ள வெங்காய பெல்டில் உள்ள ஆறு தொகுதிகளில் 5ல் பாஜக கூட்டணி தோல்வி அடைந்து இருந்தது குறிப்பிடத்தக்கது. நாட்டின் மொத்த வெங்காய உற்பத்தியில் சுமார் 34% இந்த வெங்காய பெல்ட்டில் இருந்து தான் வருவது குறிப்பிடத்தக்கது.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications