ஆன்லைனில் சிலம்பம் பயிற்சி...அசத்திய 7 வயது சிறுவன்
சென்னை : கொரோனா பரவலால் கடந்த 2 ஆண்டுகளாக உலகமே முடங்கி போய் உள்ளது. கொரோனாவுக்கு லட்சக்கணக்கான உயிர்களை பலி கொடுத்ததுடன், லாக்டவுனால் வீடுகளிலேயே மக்கள் முடங்கி உள்ளனர்.
Recommended Video
இதனால் சர்வதேச கருத்தரங்கம், கூட்டங்கள், விழாக்கள் என அழைத்தும் ஆன்லைனிலேயே நடத்தப்படுகின்றன. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டதால் மாணவர்களுக்கு ஆன்லைனிலேயே வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

ஆன்லைனில் சிலம்பம் பயிற்சி
அப்படி ஆன்லைனிலேயே கராத்தே மற்றும் சிலம்பம் பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. கராத்தேவுடன் பாரம்பரிய தற்காப்பு கலையான சிலம்பமும் கற்பிக்கப்படுவதால் மாணவர்கள் ஆர்வமுடன் பயின்று வருகின்றனர்.

சாம்பியன்ஷிப் போட்டிகள்
மலேசிய கராத்தே கூட்டமைப்பும், இந்திய கராத்தே கழகமும் இணைந்து The Legend Martial Arts Association of India என்ற தற்காப்பு கலை அமைப்பை நடத்தி வருகின்றன. இந்த அமைப்பின் மூலம் தேசிய அளவில் ஆன்லைனிலேயே கராத்தே மற்றும் சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.

7 வயது சிறுவன் அசத்தல்
இந்த போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன. ஸ்ரீசாய் நிகிலேஷ் என்ற 7 வயது சிறுவன் சிலம்பம் போட்டியில் இரண்டாவது நிலையில் 2 ம் பரிசினை பெற்றுள்ளார். இவரை பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் சான்றிதழ்
தமிழகத்தை சேர்ந்த பல மாணவர்கள் இந்த ஆன்லைன் வகுப்பில் பயிற்சி பெற்று வருகின்றனர். தேசிய அளவில் நடத்தப்பட்ட இந்த போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications