Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓபிஎஸ்ஸுக்கு போகும் "தாமரை".. ஆபரேஷன் 10 ஆமே?.. பாஜகவின் பகிரங்க பிளான்.. அப்போ எடப்பாடி நிலை?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் பாஜக நாடாளுமன்ற பணிகளை தொடங்கிவிட்டது. முதல் கட்சியாக நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தையும் தொடங்கிவிட்டது. பாஜகவின் இந்த பிரச்சாரத்திற்கு பின் என்ன திட்டம் இருக்கிறது.. பாஜக எதை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது என்று கட்சி வட்டாரத்தில் விசாரித்தோம். அவர்கள் நம்மிடம் சில முக்கிய தகவல்களை பகிர்ந்தனர்.

பாஜகவில் உட்கட்சி விவகாரங்களுக்கு இடையில்தான் நட்டா கோயம்புத்தூர் வந்தார். கோவையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய நட்டா கோவை மற்றும் நீலகிரி நாடாளுமன்ற தொகுதி பிரச்சாரங்களை தொடங்கி வைத்து பேசினார். அதில், தமிழ்நாட்டில் தாமரை மலரும். தமிழத்தில் உட்கட்டமைப்பு வசதி சரியாக இல்லை. மக்களுக்கு வேலை இல்லை.

இங்கே உட்கட்டமைப்பு வசதியை ஏற்படுத்த வேண்டும் என்றால் பாஜக தேவை. அதற்கு தமிழ்நாட்டில் தாமரை மலர்ந்தே ஆக வேண்டும். இதுதான் இப்போது நமது நோக்கமாக இருக்க வேண்டும். மக்கள் திமுக மீது அதிருப்தியில் இருக்கிறார்கள். திமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மீது அதிருப்தியில் இருக்கிறார்கள்.

25 தொகுதிகள்

25 தொகுதிகள்

வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக மாபெரும் வெற்றிபெறும். அதேபோல் நாடாளுமன்ற தேர்தல் மட்டுமின்றி சட்டமன்ற தேர்தலிலும் தமிழ்நாட்டில் பெரிய மாற்றம் வரப்போகிறது என்றார்.
இந்த கூட்டத்திற்கு முன்பாகவும், பின்பாகவும் பாஜக டாப் நிர்வாகிகளிடம் நட்டா பேசி இருக்கிறார். கொங்கு மண்டலத்தில் உள்ள எம்பி தொகுதிகள் அனைத்தையும் நாம் கைப்பற்ற வேண்டும். கொங்கு மண்டலத்தில் இருந்து 5 எம்பிகளாவது வெற்றிபெற வேண்டும். குறைந்தது 1 மத்திய அமைச்சராவது கொங்கு மண்டலத்தில் இருந்து வர வேண்டும் என்பதை உறுதி செய்யுங்கள். அதன்பின் ஊடகங்களை சந்தித்த அண்ணாமலை தமிழ்நாட்டில் பாஜக 25 லோக்சபா தொகுதிகளை வெல்லும் என்று தீர்க்கமாக தெரிவித்தார்.

பாஜக வட்டாரம் - 10 இடங்கள்

பாஜக வட்டாரம் - 10 இடங்கள்

இந்த கூட்டம் மூலம் தமிழ்நாட்டில் பாஜக நாடாளுமன்ற பணிகளை தொடங்கிவிட்டது. பாஜகவின் இந்த பிரச்சாரத்திற்கு பின் என்ன திட்டம் இருக்கிறது.. பாஜக எதை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது என்று கட்சி வட்டாரத்தில் விசாரித்தோம். நம்மிடம் பேசிய பாஜக நிர்வாகிகள் சிலர்.. தமிழ்நாட்டில் பாஜக கடந்த லோக்சபா தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. இதனால் இந்த முறை அப்படி நடக்க கூடாது என்று சர்வே எடுத்து இருக்கிறோம். பாஜக வெற்றிபெற வாய்ப்பு உள்ள இடங்களை சர்வே எடுத்து இருக்கிறோம். மொத்தம் 10 இடங்களை சர்வே எடுத்து கண்டுபிடித்து உள்ளோம்.

என்னென்ன தொகுதிகள்

என்னென்ன தொகுதிகள்

20 + இடங்களில் போட்டியிட திட்டமிட்டு இருக்கிறோம். அதில் 10 இடங்களிலாவது வெற்றிபெறுவோம். இதற்காக பாஜக உட்கட்சி சர்வே செய்துள்ளது. அதில் கோவை ,நீலகிரி ,ஈரோடு, சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, சேலம் , ஈரோடு, சென்னையில், டெல்டாவில் பெரும்பாலும் மயிலாடுதுறை ஆகிய 10 தொகுதிகளில் வெற்றிபெற பாஜக சார்பாக திட்டம் போட்டு இருக்கிறோம். இந்த தொகுதிகள் எங்களுக்கு சாதகமாக இருக்கிறது. அதனால் இங்கே பணிகளை தொடங்க உள்ளோம். கோவை, நீலகிரி கூட்டங்களை போல இங்கேயும் கூட்டங்களை வரும் நாட்களில் நடத்துவோம்.

 மத்திய அமைச்சர்கள் வந்தது

மத்திய அமைச்சர்கள் வந்தது

கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டை நோக்கி மத்திய அமைச்சர்கள் படையெடுத்து வருகிறார்கள். 30 நாட்களில் 76 மத்திய அமைச்சர்கள் தமிழ்நாடு வர உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்து இருந்தார். தமிழ்நாட்டில் ஆய்வு செய்யவும், மத்திய அரசின் நலத் திட்டம் மக்களுக்கு செல்கிறதா என்பதை அறிந்து கொள்வதற்காகவும் அவர்கள் தமிழ்நாடு வருவதாக அண்ணாமலை குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து தமிழ்நாடு வந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தமிழகத்தில் வழங்கப்படும் ரேசன் அரிசி தரம் குறித்து கடுமையாக விமர்சித்தார். மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், இணை அமைச்சர்கள் ராமேஸ்வர் டெலி ஆகியோர் தமிழ்நாட்டில் வந்து ஆய்வுகளை செய்தனர். இது எல்லாம் இந்த சர்வே அடிப்படையில் செய்யப்பட்ட விசிட் என்று கூறப்படுகிறது.

அதிமுக கூட்டணியில் இடங்களை வாங்குவார்கள்

அதிமுக கூட்டணியில் இடங்களை வாங்குவார்கள்

கண்டிப்பாக அதிமுக கூட்டணியில் பாஜக தொடரும். அதிமுக கூட்டணியில் பாஜக இருந்து கொண்டே இத்தனை இடங்களை வாங்கும். அதிமுக வலுவாக இல்லை என்று கூறி, அவர்களுக்கு பிரஷர் கொடுத்து, அவர்களிடம் கட்சி சர்வே முடிவுகளை காட்டி இந்த இடங்களை பாஜக கண்டிப்பாக வாங்கும் என்று பாஜக தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் அதிமுகவில் இரண்டு அணியும் சேர்க்க வேண்டும் என்று பாஜக அழுத்தம் கொடுக்கும். அதாவது எடப்பாடிக்கு பாஜக அழுத்தம் கொடுக்கும். எடப்பாடி ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் பிரஷர் கொடுக்கப்படும் என்று கூறியுள்ளனர். இதனால் எடப்பாடி நிலை என்ன ஆகும் என்று கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை எடப்பாடியிடம் அழுத்தம் பலிக்கவில்லை என்றால், தனி கட்சிகளாக ஓபிஎஸ், தினகரன் ஆகியோரை போட்டியிட வைத்து, அவர்களை எடப்பாடியின் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வைப்பார்கள்.

 ஓபிஎஸ் அணிக்கு தாமரை

ஓபிஎஸ் அணிக்கு தாமரை

அதோடு ஓ பன்னீர்செல்வத்திற்கு இவர்கள் தாமரை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றும் அழுத்தம் கொடுப்பார்கள் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. அதாவது ஓ பன்னீர்செல்வம் அணியில் இருந்து போட்டியிடும் வேட்பாளர்கள் பாஜக சின்னத்தில் போட்டியிட வைக்கப்படுவார்கள் என்று பாஜக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதான் பாஜகவின் ஆபரேஷன் 10 என்றும் கூறப்படுகிறது. சமீபத்தில் தமிழ்நாடு வந்த நட்டா, கூட்டணியில் இடம் கிடைக்குமா என்றெல்லாம் நீங்கள் கவலைப்பட வேண்டாம். அதை மேலிடம் பார்த்துக்கொள்ளுங்கள். கூட்டணி பற்றி நாங்கள் முடிவு எடுத்துக்கொள்வோம். நீங்கள் நாடாளுமன்ற தேர்தலில் கொங்கு மண்டலத்தில் வெல்வதை பற்றி யோசியுங்கள். கொங்கு மண்டலத்தில் பாஜகவின் பூத் கமிட்டியை வலுப்படுத்துங்கள். ஒவ்வொரு பூத்திற்கும் குறைந்தது 10 ஆட்களாவது இருக்க வேண்டும். ஒவ்வொரு பூத்திலும் இருக்கும் வாக்குகளில் 50 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகள் பாஜகவிற்கு வர வேண்டும். இதற்கான பணிகளை தீவிரமாக செய்யுங்கள் என்று நட்டா உத்தரவிட்டு சென்றுள்ளார் என்று கூறப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கான அதிகாரபூர்வ பிரச்சாரத்தை நேற்றே பாஜக தொடங்கிவிட்டது. இனி வரும் நாட்களில் கொங்கு மண்டலத்தில் அந்த கட்சி தீவிர கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+