Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ட்விஸ்ட்! ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை! பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை இன்னும் முடியவில்லை. இன்னும் தொடர்கிறது என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். அனைத்து கட்சி கூட்டத்தில் இந்த ஆபரேஷன் குறித்து பேசிய அவர்.. இந்த ஆபரேஷன் இன்னும் முடியவில்லை.

தேவைப்பட்டால் தாக்குவோம். ஆனால் இப்போதைக்கு அமைதி காக்கிறோம். பாகிஸ்தான் நம்மை தாக்கினால் மீண்டும் தாக்க தயாராக இருக்கிறோம். மோதலை பெரிதாக்க விரும்பவில்லை. ஆனால் பதற்றத்தை அதிகரிக்க பாகிஸ்தான் முயற்சித்தால் மீண்டும் பதிலடி கொடுக்கப்படும், எதிரிகளுக்கு தக்க பாடம் புகட்டுவோம், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பாகிஸ்தானில் 100 பயங்கரவாதிகள் பலியாகி உள்ளனர், என்று கூறினார். அதோடு அனைத்து கட்சி கூட்டம் முடிந்த பிறகு பேசிய அவர், 'என்ன நடக்கிறது என்பதை வெளிப்படையாக அறிவிக்க முடியாது' என்றும் தெரிவித்துள்ளார்.

pakistan pakisthan Jammu Kashmir

பெரும் பரபரப்பிற்கு இடையே டெல்லியில் இன்று நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டம் முடிவு பெற்றுள்ளது. 90 நிமிடங்கள் நீடித்த கூட்டத்தில், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக எதிர்க்கட்சிகளிடம் அரசு எடுத்துரைத்தது. அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு அளிக்கப்படும் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

மேலும் ஆபரேஷன் சிந்தூரில் பயங்கரவாதி அப்துல் ரவூப் அசார் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 1999ல் கந்தஹார் விமானக் கடத்தலில் மூளையாகச் செயல்பட்டவர் அப்துல் ரவூப் அசார் ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசாரின் சகோதரன் தான் அப்துல் ரவூப் அசார்.

நேற்று நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானின் 9 தீவிரவாத தளவாடங்கள் நீக்கப்பட்டு உள்ளன.

ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் தலைமையகங்கள் 'ஆபரேஷன் சிந்தூர்' இன் கீழ் குறிவைக்கப்பட்டன. இந்திய ஆயுதப்படைகள், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஒன்பது இடங்களைத் தாக்கியது.

முக்கியமாக பஹாவல்பூரில் உள்ள மர்காஸ் சுப்ஹான் அல்லா, தெஹ்ரா கலனில் உள்ள சர்ஜால், கோட்லியில் உள்ள மர்காஸ் அப்பாஸ் மற்றும் முசாஃபராபாத்தில் உள்ள சையத்னா பிலால் முகாம் ஆகிய முகாம்கள் தாக்கப்பட்டன. இதில் பஹாவல்பூரில் உள்ள மர்காஸ் சுப்ஹான் அல்லா மிக முக்கியமான இடங்கள் ஆகும்.

துல்லியமான ராணுவத் தாக்குதல்களில் தாக்கப்பட்ட இலக்குகளில் மேற்கண்ட இடங்கள் அடங்கும். இந்த முகாம்கள் அனைத்தும் தடைசெய்யப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதக் குழுவின் கீழ் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. பிப்ரவரி 14, 2019 அன்று புல்வாமா தாக்குதல் உட்பட பயங்கரவாதத் திட்டமிடலில் ஈடுபட்டுள்ள ஜெ.எம் இன் செயல்பாட்டுத் தலைமையகம் மர்காஸ் சுப்ஹான் அல்லா ஆகும். புல்வாமா தாக்குதல் நடத்தியவர்கள் இந்த முகாமில் பயிற்சி பெற்றது குறிப்பிடத்தக்கது. 17 வருடங்களுக்கு முன் மும்பை தீவிரவாத தாக்குதலில் கைது செய்யப்பட்டு பின்னர் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தீவிரவாதி அஜ்மல் கசாப் இங்குதான் பயிற்சி பெற்றார்.

போருக்கு தயார்

நாடு முழுக்க பாரா மிலிட்டரி ராணுவ வீரர்களின் விடுப்புகள் நீக்கப்பட்டு உள்ளன. புதிதாக விடுப்பு எடுக்க அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே விடுப்பு எடுத்தவர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது. அவரவர் போஸ்டுகளுக்கு உடனடியாக ரிப்போர்ட் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. பொதுவாக ஒரு நாடு போருக்கு போகும் முன் இது போல விடுப்புகளை நீக்கும். அதன்படியே நாடு முழுக்க பாரா மிலிட்டரி ராணுவ வீரர்களின் விடுப்புகள் நீக்கப்பட்டு உள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+