பிளானே வேற.. "டெல்லி" பறக்கிறார் ஸ்டாலின்.. இருக்கு, 2ம் தேதி எல்லாருக்கும் இருக்கு.. அறிவாலயமே பிஸி
பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளை சந்திக்க போகிறார் ஸ்டாலின்
சென்னை: முதல்வர் ஸ்டாலின் பாஜகவுக்கு எதிரான அடுத்தக்கட்ட அதிரடியில் இறங்கிவிட்டார்.. இதனால், தமிழக அரசியல் களமே பரபரத்து காணப்படுகிறது.
10 வருடம் கழித்து ஆட்சியை பிடித்ததில் இருந்து, தொடர்ந்து பிரதான இடத்தை பெற்று வருவது, தமிழகத்தின் மீதான நம்பிக்கையையும், மதிப்பையும் முன்னேற்றத்தை தேசிய அரசியலில் திரும்பி பார்க்க வைத்து வருகிறார் முதல்வர் முக ஸ்டாலின்.
திமுக ஆட்சி பொறுப்பேற்ற 100 நாட்களில், நாட்டிலேயே மிகவும் பிரபலமான முதல்வர்கள் பட்டியலில் தமிழக முதல்வர் ஸ்டாலின் முதலிடம் பெற்றிருந்தார்..

பெஸ்ட் முதல்வர்
இதற்கு காரணம், ஆட்சிக்கு வந்த வெறும் 100 நாட்களில் கொரோனாவை சிறப்பாக கையாண்ட விதம், மக்களுக்கான நலத்திட்ட உதவிகள், அதேநேரத்தில் நிதி சுமையை சீரமைக்க எடுத்துக்கொண்ட சீரிய முயற்சிகள் இப்படி அனைத்து தரப்பினரிடமும் ஆதரவு முதல்வருக்கு பெருகியிருந்ததுதான்.. எல்லாவற்றிற்கும் மேலாக, வெளிப்படை தன்மையுடன் நிர்வாகமும் செம்மையாகவும், திறமையாகவும் கையாளப்பட்டதை இந்த நாடே உற்று கவனித்தது..

சமூக நீதி
அதேபோல, மாநில உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, முதல்சவர் ஸ்டாலின் நிறைய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.. குறிப்பாக, "எல்லாருக்கும் எல்லாம்' என்பதை அடிப்படையாய்க் கொண்டதுதான் சமூகநீதியாகும்... சமத்துவம், சுயமரியாதை மற்றும் சமூகநீதி ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டுள்ள நாம் அனைவரும் ஒன்றிணைந்தால்தான் இவற்றை எதிர்த்துப் போரிட முடியும், இது அரசியல் ஆதாயம் பற்றியதல்ல. மாறாக நமது குடியரசு அமையப் பாடுபட்டோர் காண விழைந்த அடையாளத்தை மீண்டும் நிலைநிறுத்துவது பற்றியது ஆகும்" என்று பாஜக ஆளும் மாநிலங்களைதவிர, மற்ற மாநில முதல்வர்களுக்கு அறைகூவல் விடுத்து வருகிறார்..

கொள்கைகள்
சொந்த மாநிலத்தில் காட்டிவரும் அக்கறை ஒருபக்கம், மாநில உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும் என்ற முயற்சி மறுபக்கம் என இரண்டு வழிகளில் முதல்வர் தன் கவனத்தை செலுத்தி வருவதற்கு, தேசிய தலைவர்களும் ஆதரவு தந்து வருகிறார்கள்.. திமுகவை பொறுத்தவரை தன்னுடைய கருத்தியலில் எப்போதுமே உறுதிப்பாட்டுடன் பயணித்தாலும், தன்னுடைய சித்தாந்தங்களையும், கொள்கைகளையும் யாருக்காக விட்டுக் கொடுத்ததில்லை.. அதேசமயம், தமிழக மக்களின் நலன்களை பெற்றுத்தர, மத்திய அரசுடன் இணக்கமான போக்கை கையாண்டு வருவதையும் மறுக்க முடியாது.

மம்தா பானர்ஜி
இப்படிப்பட்ட சூழலில்தான் புது தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.. டெல்லியில் கட்டப்பட்டிருக்கும் திமுக அலுவலகம் ஏப்ரல் 2-ல் திறக்கப்பட உள்ளது... இதற்காக டெல்லி செல்கிறார் முதல்வர் ஸ்டாலின். இந்த விழாவை தேசிய அளவில் பாஜகவுக்கு எதிரான ஒரு அணியை கட்டமைக்கும் வகையில் மாற்றியமைக்க ஸ்டாலின் விரும்புகிறார். இதற்காக, பாஜகவுக்கு எதிராக உள்ள மாநில கட்சிகளின் தலைவர்களை திறப்பு விழாவுக்கு அழைக்கும் திட்டம் தயாரிக்கப்பட்டு, அவர்களை அழைத்து வரும் பொறுப்பினை டி.ஆர்.பாலு, கனிமொழி, திருச்சி சிவா ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாம்.

கூட்டாட்சி
அவர்களும் தலைவர்களை தொடர்புகொண்டு பேசி வருகிறார்கள். அவர்களின் சம்மதம் கிடைக்கப்பெற்றதும் அழைப்பிதழ் அச்சிடுவது துவங்கும் என்கிறார்கள் அறிவாலயத்தார். இதற்கிடையே, மாநில உரிமைகள், கூட்டாட்சி தத்துவம் ஆகியவற்றிற்கு எதிராக இருக்கும் மத்திய அரசுக்கு பதிலடி தரும் வகையில் டெல்லி விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசுவார் என்றும் சொல்லப்படுகிறது... விரைவில் எம்பி தேர்தல் நடக்க உள்ள நிலையில், பாஜகவுக்கு எதிரான சக்திகளை ஒன்று திரட்ட மம்தா களமிறங்கி உள்ள நிலையில், ஸ்டாலினின் இந்த டெல்லி விசிட் அரசியல் களத்தில் மிகுந்த கவனத்தை பெறும் என்று தெரிகிறது.

ஸ்டாலின் சாய்ஸ்
அதுமட்டுமல்ல, ஏற்கனவே, பிரதமர் வேட்பாளர் பிரச்சனை மம்தா, ராகுல் தரப்பில் எழுந்து வருகிறது.. பிரதமர் வேட்பாளராக ராகுல்தான் ஸ்டாலினின் சாய்ஸ் ஆகவும் இருக்கும் என்று நம்பப்படுகிறது.. ஆனாலும், ஸ்டாலினும் பிரதமர் வேட்பாளர் பதவிக்கு தகுதியானவர்தான் என்பதை திமுகவினர் வலிய சொல்லி வருகிறார்கள்.. சில நாட்களுக்கு முன்பு, திமுகவின் ஆ.ராசா நீலகிரியில் பேசிய பேச்சையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டி உள்ளது..

ஆ.ராசா
"நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் வெற்றிக்கு காரணமே தமிழக முதல்வர் ஸ்டாலின்தான். ஸ்டாலினின் இந்த வெற்றி இந்தியாவுக்கே ஒரு செய்தியை சொல்வதாக அமைந்துள்ளது... திமுக தலைவர் ஸ்டாலின் அகில இந்திய அளவில் சிறந்து விளங்கி வருகிறார். தமிழக முதல்வராக உள்ள அவரை அடுத்த நிலைக்கு, தேசிய அளவிலான இடத்துக்கு கொண்டுச் செல்ல நீங்கள் பாடுபட வேண்டும்" என்று ஆ.ராசா கேட்டுக் கொண்டதையும் திமுக தொண்டர்கள் நினைவுகூர்கிறார்கள்.. எனவே, முதல்வரின் இந்த டெல்லி பயணம் தேசிய அளவில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்றே தெரிகிறது.. பார்ப்போம்..!
-
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
"கடிதத்தை வெளியிட்டதிலேயே குட்டு அம்பலமாகிவிட்டது".. நிர்மலா சீதாராமனை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின் -
என்னோட பேவரிட் தோனியை மிஸ் பண்ற பீலிங்கை அவாய்ட் பண்ண முடியல.. ஸ்டாலின் -
கடலூரில் நடந்தது என்ன.. திருமாவளவனிடம் மனம் விட்டு பேசிய பிரேமலதா.. பரபரப்பு பின்னணி -
“இனி அறுவடை தான்.. தோழமைக் கட்சியினருடன் இணைந்து வேலை செய்யுங்க”.. ஸ்டாலின் கொடுத்த மெசேஜ்! -
"சாக்கடைக்கு சமமாக வந்து விழுகிற எடப்பாடியின் வார்த்தைகளுக்கு பாடம் புகட்டுவோம்”.. கொதித்த ஸ்டாலின்! -
நெல் ஊக்கத்தொகை விவகாரம்.. கடிதத்தை வெளியிட்டு.. ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
திமுகவை தொட முடியுமா என்ன? விஜய்க்கு சிலுவை ஆசீர்வாதம்! அப்போ சிறுபான்மையினர் ஓட்டு யாருக்கு -
நெல் ஊக்கத்தொகை.. கடிதத்தை பொதுவெளியில் வெளியிட தயாரா.. நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு!












Click it and Unblock the Notifications