Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓபிஎஸ் சந்திப்பில் அமித்ஷா கொடுத்த வாக்குறுதி என்ன? பத்திரிக்கையாளர் எஸ்பி லட்சுமணன் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

அமித் ஷாவை சந்தித்தது ஏன் என்ற கேள்விக்கு, "பிரிந்தவர்கள் இணைய வேண்டும் என்பதற்காகத்தான்" என்று ஓபிஎஸ் கூறியது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்த சந்திப்பின் பின்னணியில் என்ன அரசியல் நகர்வுகள் நடந்தன என்பதை மூத்த பத்திரிகையாளர் எஸ்பி லட்சுமணன் அவர்கள் நம்மிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.

தேர்தலில் சின்னம் முக்கியம் என்பதற்காகவே கட்சி ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டது. ஓபிஎஸ் ஆதரவாளர்களின் எண்ணப்படியே அவர் செயல்படுகிறார் என்றும் அவர் கூறுகிறார்.

நான்கு வருடங்களாக அமித்ஷா அப்பாயின்ட்மென்ட் கொடுக்காத நிலையில், இப்போது அழைப்பு விடுத்தது ஏன் என்ற கேள்வி எழுகிறது. பீகார் தேர்தல் முடிந்ததும், பாஜகவிற்கு தமிழ்நாடு ஞாபகம் வந்திருக்கிறது. ஓபிஎஸ் கொடுத்த 20 பக்க அறிக்கையில், கூட்டணி இப்படியே இருந்தால் அதிமுக, 20% வாக்குகள் கூட பெற முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

எடப்பாடி பிடிவாதமாக இருந்தால் திமுகவே ஆட்சியில் அமரும் என அமித் ஷாவும் ஓபிஎஸ்-ஸிடம் தெரிவித்துள்ளார் என்று லட்சுமணன் தெரிவிக்கிறார். பாஜகவினரும் அதிமுகவினரும் ஜெயிக்க வழி தேடாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். செங்கோட்டையனை 4 முறை பாஜக அழைத்துப் பேசியும் எந்த பயனும் இல்லை. செங்கோட்டையன் தவெக போய்விட்டார். அதையும் பாஜக வேடிக்கைதான் பார்த்தது.

நம்பி வந்தவர்களை கைவிடும் கொள்கையை பாஜக கடைபிடிக்கிறது. டிடிவி தினகரன் இந்த விஷயங்களை முன்கூட்டியே அறிந்து பாஜக பிடியிலிருந்து விலகிவிட்டார். ஓபிஎஸ் சந்தித்தபோதும், அமித்ஷா பெரிய வாக்குறுதிகள் எதுவும் ஓபிஎஸ்க்கு கொடுக்கவில்லை. நீங்க கவலைப்படாம இருங்கன்னு சொல்லிட்டு கிளம்ப சொன்னாரு. எந்த முடிவும் எடுக்காதீங்கன்னு எந்த நிபந்தனையும் விதிக்கல.

கேட்டபோதெல்லாம் அப்பாயின்மென்ட் தராத அமித்ஷா திடீரென கூப்பிட்டாரே என்று மரியாதைக்காக ஓபிஎஸ் டெல்லிக்கு போனார். மற்றபடி அமித்ஷா எந்த வாக்குறுதியும் தர மாட்டார் என்பதும் ஓபிஎஸ்சுக்கு தெரியும்.

செங்கோட்டையன் தவெக இணைந்ததற்கு முன்பு, திமுக vs தவெக என்பது டிடிவி தினகரனின் குரலாக இருந்தது. ஆனால் இப்போது ஒரு புது அணி உருவாகலாம் என்று தினகரன் கூறுகிறார்.

விஜய், எம்ஜிஆரை தலைவராக குறிப்பிட்டது அதிமுக தொண்டர்களை கவரும் முயற்சி. அதிமுக தொண்டர்களை குறிவைப்பதை விஜய் நிறுத்தவில்லை என்பதற்கான உதாரணம் தான் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தியது. நீங்க யார தெய்வமாக மதிக்கிறீங்களோ, அவங்கள நாங்களும் மதிப்போம்னு காட்டுறது ஒரு அரசியல் கணக்கு தான்.

விஜய் கட்சி நிர்வாகிகளிடம் பணம் வாங்கி உட்கார சீட் கொடுப்பதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. இது லஞ்ச லாவண்யம் தொடங்கும் இடமா? முறைகேடு எல்லா இடத்திலும் ஒழிக்கப்பட வேண்டும். ஆனால் ஊழல்வாதியை சேர்த்துக் கொண்டதால் விஜய் புனிதமாகிவிட்டாரா என்று கேட்கிறார்கள். அரசியலில் யாருமே புனிதர் இல்லை.

கட்சி தொடங்கி இரண்டு வருடம் ஆகியும் விஜய் பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லை. ஏன் கட்சி ஆரம்பித்தேன், என் கொள்கை என்ன என்று அவர் சொல்லவில்லை. பவுன்சர் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும். அது தமிழ்நாட்டுக்கு ஒவ்வாத கலாச்சாரம்.

தங்கமணி குறித்த வதந்திகளைப் பற்றி பேச வேண்டாம். இரண்டு அமைச்சர்கள் எங்கள் இயக்கத்திற்கு வருவார்கள் என்று ஆதவ் அர்ஜுன் சொன்னார். தமிழ்நாட்டு நலனுக்காக பாடுபட்ட பாமகவை இரண்டாக உடைத்தது அந்த இயக்கத்துக்கு செய்த துரோகம்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்றங்களும் கட்டுப்பாட்டை இழந்துவிட்டன. ஜி.ஆர்.சுவாமிநாதன் சட்டத்தையே மீறுகிறார் என்று விமர்சனங்கள் வருகின்றன. அரசியல் அபிலாஷைகளுக்காக ஆகம விதிகளையே மீறுவது இந்து மத உணர்வுகளை புண்படுத்தாதா?

வேற மாநிலத்தில வச்சுக்கோங்க அல்லது இந்தியால எங்கேயுமே வச்சுக்காதீங்க. தமிழ்நாட்டில அறவே நினைச்சு பார்க்காதீங்க. ஏனென்றால், தமிழ்நாட்டு மக்கள் அரசியல் தெளிவு படைத்தவர்கள். உணர்வுகளுக்கு ஆட்பட்ட இன்னொருத்தன் கஷ்டப்பட்டா நாமளே கஷ்டப்பட்ட மாதிரி ஃபீல் பண்ற மக்கள் நிறைந்த இந்த தமிழ்நாடு. இவ்வாறு லட்சுமணன் தெரிவித்துள்ளார். இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் இதை நீங்கள் காணலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+