சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முந்துகிறது அதிமுக.. ஒரே மேடையில் இபிஎஸ் – ஓபிஎஸ்.. சென்னையில் இன்று தேர்தல் பிரச்சார பொது கூட்டம்

சென்னையில் நாளை அதிமுக பிரச்சாரம் தொடங்குகிறது

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு சென்னையில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் ஒரே மேடையில் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கின்றனர்.. இருவரும் ஒரே மேடையில் சிறப்புரையாற்றவும் உள்ளனர்.

தமிழக சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் வர உள்ளது.. இதனால் அனைத்து கட்சிகளும் ஜரூர் வேலையில் இறங்கி உள்ளன.. அவர்களின் தேர்தல் அறிக்கைகளும் தயாராகி வருகின்றன.

அதுபோலவே, அதிமுகவும் தேர்தல் பணிகளில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டது. இந்த தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறி்விக்கப்பட்டுள்ளார்.

"கருணாநிதியிசம்".. தேர்தலில் தோல்வியையே தழுவாத.. மாஜி மத்திய அமைச்சர் கடம்பூர் ஜனார்த்தனம் காலமானார்

வேகம்

வேகம்

இதற்காக, சட்டப்பரேவை தேர்தலை ஒருங்கிணைக்க வழிகாட்டுக்குழுவும், மண்டல வாரியாக பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் வேலைகள் வேகம் எடுத்து வருகின்றன. மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்களின் ஆலோசனையைக் கேட்டு, அதை அடிப்படையாக வைத்து, அவர்களை ஈர்க்கும் வகையில், தேர்தல் அறிக்கையில் பல்வேறு அம்சங்களும் இடம் பெறும் வகையில் தயராகி வருகின்றன..

எடப்பாடி

எடப்பாடி

இதனிடையே, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த தொகுதியான எடப்பாடியில் பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு கடந்த 19-ம் தேதி தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்டார். இதன் அடுத்த கட்டமாக சென்னையில் இன்று எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஒரே மேடையில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைக்க உள்ளனர்.

சிறப்புரை

சிறப்புரை

இதற்காக சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம் காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது... இந்த கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 2 பேரும் பிரசாரத்தை தொடங்கி வைக்க உள்ளனர்... இருவருமே சிறப்புரையாற்ற உள்ளனர்.

 சென்னை

சென்னை

வரும் தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெற நிகழ்த்த இருக்கும் போர் முழக்கம்தான் இந்த பிரச்சார பொதுக்கூட்டம் என்று ஓபிஎஸ்- ஈபிஎஸ் இருவரும் ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.அந்த வகையில் இந்த கூட்டம் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.. அதுமட்டுமில்லை, சென்னையில் நடத்தும் முதல் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் என்பதாலும் அதிக அளவு கவனத்தை நாளைய கூட்டம் பெற்றுள்ளது

உத்வேகம்

உத்வேகம்

இது எல்லாவற்றிற்கும் மேலாக, கடந்த சில நாட்களாகவே, ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே ஏதோ மனக்கசப்பு என்றும் சலசலக்கப்பட்டது.. திடீரென்று தேர்தல் பிரச்சாரத்தை எடப்பாடியார் தொடங்கியதால், ஓபிஎஸ் தரப்பு அப்செட் என்றும் ஒருவேளை மறுபடியும் ஒரு தர்மயுத்தத்திற்கு தயாராகிறாரா? என்ற சந்தேகங்களும் எழுந்தன.. ஆனால், அத்தனை யூகங்கள், சர்ச்சைகளையும் தவிடுபொடியாக்கிவிட்டு, ஓபிஎஸ்-ஈபிஎஸ் இருவரும் ஒரே மேடையில் இன்று பிரச்சாரத்தை துவக்க உள்ளது தொண்டர்களுக்கு புதிய உத்வேகத்தினை ஏற்படுத்தி வருகிறது.

English summary
OPS and EPS on the same platform and Election Campaign in Chennai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X