கரெக்ட்டா 1.15 மணி.. 2 நாட்கள்.. 2 மணி நேரம்.. "மிஸ்ஸாயிடுச்சோ" ஓபிஎஸ்ஸூக்கு? பரபரக்கும் அதிமுக
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பதவி தேர்வை எதிர்த்தும், கட்சியிலிருந்து நீக்கம் செய்ததை எதிர்த்தும் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்த வழக்கில், வரும் 20, 21-ம் தேதிகளில் இறுதி விசாரணை நடைபெறும் என்று சென்னை ஹைகோர்ட் தெரிவித்துள்ளது.. இன்று கோர்ட்டில் என்ன நடந்தது?
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும், பொதுச் செயலாளர் தேர்தல் அறிவிப்பை எதிர்த்தும் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தாக்கல் செய்த இடைக்கால மனுக்களை நீதிபதி குமரேஷ்பாபு தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து ஓபிஎஸ் உள்ளிட்டோர் ஹைகோர்ட்டில் உடனடியாக மேல்முறையீடு செய்தனர்.. அதன்படி 2 நாட்களுக்கு முன்பு, ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு மனுக்கள் மீதான விசாரணை 2 நீதிபதிகள் முன்னிலையில் தொடங்கி நடந்தது.

வாதங்கள்
அப்போது, ஓபிஎஸ் தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ள வாதங்கள் மிகுந்த முக்கியத்துவத்தை பெற்றது.. "கட்சியில் நீக்கம் தவறு என்று கூறிய தனிநீதிபதி, தீர்மானத்தை ரத்து செய்யவில்லை. அதனால், குறைந்தபட்சம் இடைக்காலமாக மீண்டும் கட்சியின் சேர்க்க உத்தரவிட்டிருக்க வேண்டும்.. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதாக, உயர்நீதிமன்றமோ, உச்சநீதிமன்றமோ கூறவில்லை. எனவே, அந்த பதவிகள் காலாவதியாகவில்லை" என்கின்ற வாதங்களும் முன்வைக்கப்பட்டன.. இதையடுத்து நீதிபதிகள், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டது தொடர்பாக, சம்பந்தப்பட்ட அதிகாரியை ஏன் அணுகவில்லை என்று கேட்டதுடன், குறித்த காலத்திற்குள் இந்த வழக்கை முடிக்கலாம் என்று தெரிவித்தனர்.

நோ ஆதரவு
இதற்கு ஓபிஎஸ் தரப்பில், "குறித்த காலத்திற்குள் முடிப்பதாக இருந்தாலும், எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக நீடித்தால் தன்னுடைய நிலை என்ன?"என்று கேள்வி எழுப்பினர்.. பின்னர் நேரடியாக இறுதி விசாரணை நடத்துவது குறித்து இரு தரப்பிடமும் ஆலோசிக்கப்பட்டது. நேரடி இறுதி விசாரணைக்கு ஓபிஎஸ் - எடப்பாடி பழனிசாமி இரு தரப்பினரும் ஒப்புக் கொண்ட நிலையில், இரு தரப்புகளும் அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், வழக்கின் விசாரணையை ஏப்ரல் 3ம் தேதிக்கு அதாவது இன்றைய தேதிக்கு ஒத்திவைத்து சென்னை டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டிருந்தது..

இடைக்கால நிவாரணம்?
இன்றையதினம் இறுதி விசாரணையா? இடைக்கால நிவாரணமா? என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.. அந்தவகையில், இடைக்கால நிவாரண கேட்டு ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுவில் இறுதி விசாரணை தொடங்கியது காலையில் துவங்கியது.. மறுபடியும் நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷபீக் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வக்கீல் குரு கிருஷ்ணகுமார் வாதாட தொடங்கினார்.. அப்போது, "புதிய உறுப்பினர்கள் சேர்க்கையின்போது எங்கள் ஆதரவாளர்கள் நீக்கப்படலாம். அதனால், இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்" என்று வாதாடினார்.

இடியாப்ப சிக்கல்
அப்போது உங்களுக்கு வாதாட எவ்வளவு நேரம் தேவை? என்று நீதிபதிகள் கேட்டனர். அதற்கு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் "தலா 2 மணி நேரம் வேண்டும்" என்றனர். அதற்கு நீதிபதிகள், "இந்த வழக்கில் உங்களுக்கு வாதாட வருகிற 20 மற்றும் 21-ந் தேதிகளில் மதியம் 1.15 மணிக்கு தலா 2 மணி நேரம் ஒதுக்குகிறோம். அப்போது உங்களின் வாதங்களை முன் வையுங்கள். அந்த 2 நாட்களிலும் இறுதி விசாரணை நடத்தி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவையும் கருத்தில்கொண்டு அதிமுகவில் உள்ள அனைத்து பிரச்சினைகள், கேள்விகள், சிக்கல்களை தீர்த்து வைக்கிறோம் என்றனர்.

புதிய சிக்கல்
இதைக்கேட்ட ஓபிஎஸ் தரப்பு மூத்த வழக்கறிஞர் பிஎஸ் ராமன், இப்போது அதிமுகவில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. இந்த நேரத்தில் எங்கள் தரப்பு உறுப்பினர்களுக்கு சிக்கல் ஏற்படலாம்... அதனால், உறுப்பினர்களின் பாதுகாப்பு கருதி ஒரு இடைக்கால உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்றார்.. ஆனால், இதை ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்..

நிராகரிப்பு
"தனி நீதிபதி உத்தரவுக்கு எதிரான இந்த அப்பீல் வழக்கில் இப்போது இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது. இடைக்கால உத்தரவு பிறப்பித்தால் அது சிக்கலை ஏற்படுத்தும்.. குழப்பத்தையும் ஏற்படுத்தும்.. அனைத்து கோரிக்கைகளையும் 20, 21-ம் தேதிகளில் நடைபெறும் பிரதான வழக்கு விசாரணையின்போது முடிவு செய்வோம்" என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.. இதன் மூலம் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்ற ஓபிஎஸ் தரப்பினரின் கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்ததுடன், அப்பீல் வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்து கூறியுள்ளது, ஓபிஎஸ் தரப்புக்கு ஏமாற்றத்தையும், எடப்பாடி தரப்புக்கு "தற்சமய" நிம்மதியையும் தந்து வருகிறது.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications