புளியோதரையால் அசிங்கம்.. எடப்பாடியை ஒருமையில் சாடிய ஓபிஎஸ்! மதுரை மாநாட்டில் உணவு சரியில்லையாம்
சென்னை: மதுரை அதிமுக மாநாட்டில் நல்ல உணவை கூட தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமியால் கொடுக்க முடியவில்லை என ஓ பன்னீர்செல்வம் விமர்சித்து இருக்கிறார்.
மதுரையில் இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவின் பிரமாண்ட பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெற்ற அதே நாளில், முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் சென்னை வேப்பேரியில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டினார். இதில் தங்கள் தரப்பின் அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி ஆலோசிக்கப்பட்டது.

அந்த கூட்டத்தில் பேசிய ஓ பன்னீர்செல்வம், "2024 நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளர்களை அறிவித்து நாங்கள் போட்டியிடுவோம். இப்போது பாருங்கள் தொலைக்காட்சியில்.. அசிங்கப்பட்டு, அவமானப்பட்டு, தொண்டர்கள் புளியோதரை சாப்பிட்டு.. சாப்பிடல அப்படியே வாங்கி போட்டு பேட்டி கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்கள். இதான் நடந்தது.
ஆக, ஒரு கூட்டத்தை முறைப்படுத்தும் தன்மை இல்லாத, நிர்வாக திறன்கூட இல்லாதவர்கள் அங்கு குழுமி இருக்கிறார்கள் என்பதை இன்றைக்கு இந்த நாடு நன்றாக அறிந்து இருக்கும். எடப்பாடி இந்த பொறுப்புக்கு வந்ததில் இருண்டு அவர் சந்தித்த அனைத்து தேர்தல்களிலுமே தோல்வி.
அதற்கு பிறகு இந்த ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் வந்தது. அதில் என்ன நடந்தது? நம்மிடம் வேண்டிக்கொண்டார்கள். நீங்கள் பிரிந்து நின்றால் திமுக வந்துவிடும், எனவே வாபஸ் வாங்க சொன்னார்கள். இரட்டை இலை சின்னம் கொடுத்துவிட்டார்கள், தீர்ப்பு அளித்துவிட்டார்கள் நின்று பார்க்கட்டும் என நாமும் வாபஸ் வாங்கிவிட்டோம்.
டிடிவி தினகரனும் அங்கு சென்று வாபஸ் வாங்கிவிட்டார். ஜெயிக்க முடிந்ததா கொங்கு பெல்டில்? ஜா - ஜே என பிரிந்தபோது ஜெயலலிதா சேவலில் நின்று ஈரோடு மாவட்டத்தில் 5 தொகுதிகளில் வெற்றிபெற்றது. ஈரோடு மாவட்டம் ஜெயலலிதாவின் கோட்டையாக திகழ்ந்தது. இன்னைக்கு என்ன நிலைமை ஆகிவிட்டது.
66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வியை இரட்டை இலை சின்னத்துக்கு பெற்றுத் தந்தவர் எடப்பாடி பழனிசாமி. இவ்வளவு பெரிய இயக்கத்தை, 50 ஆண்டுகால சரித்திரம் கொண்ட இயக்கத்தை படு பாதாளத்தில் தள்ளிய.. வரலாறு படைத்த இயக்கத்தை, வரலாறு படைக்க உள்ள இயக்கத்தை.. இப்படி கொண்டுபோய் கீழே தள்ளிட்டியே எடப்பாடி பழனிசாமி.
உன்னை நாடு மன்னிக்குமா. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆன்மா மன்னிக்குமா? நீ குவித்து வைத்து இருக்கும் பணம் உன்னை காப்பாற்றாது. மாநாட்டுக்கு வந்தவர்களுக்கு நல்ல உணவு கூட கொடுக்க முடியாது நீ.. இந்த கட்சியை.. கிராமத்தில் இருப்பவர்கள் பேசுகிறார்கள். இதை நாம் வெளிப்படையாக பேச முடியாத கட்டத்தில் நிற்கிறோம். இதற்கு ஒரே தீர்வு மக்கள் மன்றம். எதிர்வரும் 2024 மக்களவைத் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தி நாம் வெற்றிபெறுவோம்.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications