பாஜக கனவில் மண்ணை அள்ளிப் போட்ட விஜய்.. பனையூர் பக்கம் தாவும் 3 புள்ளிகள்! அவங்களும் போறாங்களா? பரபர
சென்னை: 2026-ல் ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென அதிமுக பாஜக கூட்டணி தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில் அதற்கு தடை போடும் விதமாக டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோர் கிட்டத்தட்ட வேறுபக்கம் தாவி விட்டனர். மேலும் பிரேமலதா விஜயகாந்த்தும் விஜயுடன் கூட்டணி அமைக்கலாம் என சொல்லப்படுகிறது. இதனால் அதிமுக பாஜக கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு தமிழ்நாடு தயாராகி வரும் நிலையில் தமிழகத்தில் ஆழமாக காலூன்ற வேண்டும் என பாஜக விரும்புகிறது. இதற்காக அதிமுகவுடன் கூட்டணியும் சேர்ந்து இருக்கிறது. கடந்த காலங்களில் இந்த கூட்டணி சேர்ந்த போதும் பெரிய அளவில் வெற்றி பெற முடியவில்லை. இந்த தேர்தலில் அதனை அந்த விமர்சனத்தை தவிடு பொடியாக்க வேண்டும் என பாஜக விரும்புகிறது.
மேலும் மிகப்பெரிய பலத்துடன் இருக்கும் திமுகவை வீழ்த்துவது அவ்வளவு எளிதில்லை என்பதை உணர்ந்துள்ளது பாஜக. இதற்காக அதிமுக பாஜக கூட்டணியை வலுவாக கட்டமைக்க முயன்று வருகிறது. ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக என்.டி.ஏ கூட்டணியில் இருந்த ஓபிஎஸ் டிடிவி தினகரன் ஆகியோர் வெளியேறிவிட்டனர்.

அதிமுக பாஜக கூட்டணி
மேலும் சில கட்சிகளை அழைத்து வர பேச்சுவார்த்தை நடந்துவரும் நிலையில் தமிழக அரசியலில் புதிய வரவான தமிழக வெற்றிக்கழகம் கூட்டணி பேரத்தை அதிகரித்து வருகிறது. கிட்டத்தட்ட ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோர் தமிழக வெற்றிக் கழக கூட்டணிக்கு சென்று விட்டதாகவே சொல்லப்படுகிறது. பிரேமலதா விஜயகாந்த் ஆறு சீட்டுகள் ஒதுக்கப்படும் என்ற தகவலால் கடும் அதிருப்தியில் இருக்கிறார். அவரும் விஜய் உடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது. இதனால் டெல்லி பாஜக கடும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக சொல்கின்றனர்.
பியூஷ் கோயல்
கடந்த சில நாட்களுக்கு முன் அதிமுகவுடன் பியூஷ் கோயல் தலைமையிலான பாஜக குழுவினர் சந்திப்பு முடிந்த பிறகு, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "தினகரன் மற்றும் ஓபிஎஸ்ஸை கூட்டணியில் சேர்ப்பது குறித்து இன்று எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை" என்று தெளிவாக கூறினார்.ஆனால் இதே நேரத்தில், தினகரன், பிரேமலதா மற்றும் ஓபிஎஸ்ஸுக்கு முறையே ஆறு, ஆறு மற்றும் மூன்று தொகுதிகள் வழங்கப்படலாம் என்ற செய்தி வெளிவந்தது. இந்த தகவல் அந்த மூவரையும் கடும் அதிருப்திக்குள்ளாக்கியதாக கூறப்படுகிறது.
ஓபிஎஸ், டிடிவி தினகரன்
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், அமமுகக்கு ஆறு இடங்கள் ஒதுக்கப்பட்டதாக சொல்லப்படுவது வெறும் வதந்தி தான். யாரை தோற்கடிக்கும் நோக்கத்தில் தான் அமமுக உருவாக்கப்பட்டது. அந்த வழியிலேயே நாங்கள் பயணம் தொடர்வோம் என்று தெரிவித்தார். அதேபோல், ஓபிஎஸ்ஸின் ஆதரவாளர்கள் நடைபெற்ற கூட்டத்தில் பலரும், பழனிசாமி தலைமையை ஏற்க முடியாது. வெறும் மூன்று தொகுதிகளுக்காக அந்த அணியில் சேரவும் கூடாது என்று வலியுறுத்தினர். இதற்கு ஒப்புதல் தெரிவிக்கும் வகையில் ஓபிஎஸ்ஸும் பேசியதாக தகவல் தெரிவிக்கிறது.
பிரேமலதா விஜயகாந்த்
அதிமுக கூட்டணியில் சேரும் வாய்ப்பு குறைந்த நிலையில், தினகரன் மற்றும் ஓபிஎஸ்ஸுக்கு அடுத்த விருப்பமாக திமுக அல்லது தமிழக வெற்றி கழகம் (தவெக) கூட்டணிதான் இருக்கலாம் என்ற தகவல் உலாவுகிறது. ஆரம்ப காலத்திலிருந்து விஜய்யின் தவெக குறித்து நேர்மறையாகவே பேசி வரும் தினகரன், தவெக தலைமையில் ஒரு பெரிய கூட்டணி அமைந்தால், அதிமுக மூன்றாவது இடத்துக்கு தள்ளப்படும் என்று கருத்து தெரிவித்திருந்தார். ஆனாலும் இதுவரை கூட்டணி தொடர்பாக தவெக தரப்பில் எந்த உறுதியும் வழங்கப்படவில்லை.
தவெக கூட்டணி
இந்நிலையில், தினகரனுடன் தவெக தரப்பில் கூட்டணி பற்றி மறைமுகமாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதோடு, ஓபிஎஸ்ஸும் தவெக அணிக்கு செல்லும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. இதை செங்கோட்டையன் உறுதிப்படுத்தியிருக்கிறார் என்பதும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இந்த சூழ்நிலையில், ஆறு தொகுதி விஷயத்தால் பிரேமலதாவும் கடும் கோபத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி, தினகரன் -ஓபிஎஸ்ஸ் - பிரேமலதா ஆகியோர் திமுக, அதிமுக மற்றும் தவெக என மூன்று அணிகளுக்கும் வாய்ப்பு திறந்தே வைத்துள்ளனர் என்று சொல்லப்படுகிறது. ஆனால் கடைசி நேரத்தில், மரியாதையான தொகுதிகள் கிடைத்தால், தவெக அணிக்கே செல்லும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications