ஓபிஎஸ் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு.. ஆவணங்கள் ஒப்படைப்பு.. விசாரணையை ஒத்திவைத்து ஐகோர்ட் உத்தரவு!
சென்னை: ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையை நவம்பர் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது சென்னை ஐகோர்ட்.
2001 முதல் 2006 வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அவரது மனைவி விஜயலட்சுமி, மகன்கள் ஓபி ரவீந்திரநாத், ஜெயபிரதீப், மகள் கவிதா பானு மற்றும் சகோதரர்கள் பெயரில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துகளைச் சேர்த்ததாக தேனி மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறை கடந்த 2006ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்திருந்தது.

வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.72 கோடி சொத்து சேர்த்ததாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த சிவகங்கை நீதிமன்றம், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை கடந்த 2012ஆம் ஆண்டு இந்த வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவிட்டது.
இந்நிலையில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து (சூ-மோட்டோ) வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.
ஓ.பன்னீர்செல்வம், அவரது குடும்பத்தினர் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு வழக்கு ஆவணங்கள் வழங்கப்பட்டன. ஆவணங்கள் வழங்கப்பட்டதை அடுத்து விசாரணையை நவம்பர் 23ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை?












Click it and Unblock the Notifications