சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

50%.. 2 அல்டிமேட் பிளான்.. மோப்பம் பிடித்த உளவுத்துறை.. "பரமபதத்தில்" சறுக்கிய எடப்பாடி.. அடேங்கப்பா

எடப்பாடி பழனிசாமியை பலவீனப்படுத்த புது முயற்சி எடுத்துள்ளாராம் ஓபிஎஸ்

Google Oneindia Tamil News

சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கான சறுக்கல்கள் மெல்ல துவங்கி உள்ளநிலையில், ஓபிஎஸ் டீமின் அரசியல் வேகமெடுத்து வருகிறது..

ஒவ்வொரு கோர்ட் உத்தரவு முடிவுகளும் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாகவே வந்துகொண்டிருந்த நிலையில், இன்றைய தினம் சுப்ரீம்கோர்ட் உத்தரவானது, எடப்பாடிக்கு பின்னடைவை தந்துள்ளது.

கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு குறித்து விளக்கமளிக்க அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது...

உறுதியா? எடப்பாடி தரப்பிடம் கேட்ட நீதிபதி.. நிம்மதி பெருமூச்சு விட்ட ஓபிஎஸ்! ஆனா.. அங்கேதான் சிக்கலே உறுதியா? எடப்பாடி தரப்பிடம் கேட்ட நீதிபதி.. நிம்மதி பெருமூச்சு விட்ட ஓபிஎஸ்! ஆனா.. அங்கேதான் சிக்கலே

 டைம் ஓவர்

டைம் ஓவர்

முக்கியமாக, வைத்து, தன் பலத்தை நிரூபித்து விடலாம் என்பதே எடப்பாடியின் பிளானாக இருந்து வந்தது.. ஆனால், யாருக்கு மெஜாரிட்டி என்பதை ஆய்வுசெய்ய போவதில்லை என்பதை உச்சநீதிமன்றம் இன்று திட்டவட்டமாக கூறியுள்ளது. இது எடப்பாடிக்கு சறுக்கலாகவும், ஓபிஎஸ் தரப்புக்கு கிடைத்த வெற்றியாகவும் பார்க்கப்பட்டு வருகிறது.. நீதிமன்றம் இன்று சொன்ன இதே கருத்தைதான், ஒரு மாதங்களுக்கு முன்பு இங்குள்ள, தமிழகத்தின் அரசியல் வல்லுநர்களும் நமக்கு பிரத்யேகமாக அளித்த பேட்டிகளில் தங்கள் கருத்தாக சொல்லியிருந்தார்கள்..

கிறுகிறுப்பு

கிறுகிறுப்பு

அதாவது, "மெஜாரிட்டி ஆதரவாளர்கள் மட்டுமே எடப்பாடி பழனிசாமியின் ஒரே பலமாக இப்போதுவரை இருந்து வரும் நிலையில், எவ்வளவு ஆதரவாளர்கள் எடப்பாடி பக்கம் இருக்கிறார்கள் என்பதை நீதிமன்றம் ஒருபோதும் கணக்கில் எடுத்துக் கொள்ளாது.. சட்டத்துக்கு தேவை விதிமுறைகள்தான்.. அந்த விதிமுறைகள் சரியாக இல்லாத பட்சத்தில், நடவடிக்கைகள், உத்தரவுகள் பாயும்.. அவ்வளவுதான்.. எனவே, மெஜாரிட்டி என்ற ஒரு பலமும் எடப்பாடி தரப்புக்கு நீதிமன்றத்தில் சறுக்கலையே ஏற்படுத்திவிடும்.. அந்த மெஜாரிட்டி என்ற பலத்தை குறைக்கவே, ஓபிஎஸ் டீம் களவாடி வருகிறது.." என்று கூறியிருந்தனர்.

 லிஸ்ட் போச்சா

லிஸ்ட் போச்சா

அந்த கூற்று இன்று உண்மையாகி உள்ளது.. இன்னொரு சறுக்கலும் எடப்பாடிக்கு எழுந்துள்ளது.. கடந்த வாரம், எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றபோது, பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்ட லிஸ்ட்டை தேர்தல் சமர்ப்பித்த நிலையில், அது ஏற்றுக்கொள்ளப்படவில்லையாம்.. காரணம், இதுவரை அதிமுக வரலாற்றில், பொதுக்குழு குறித்த விதிமுறைகள் எல்லாம் புத்தகமாக அச்சிடப்பட்டு, ஏற்கனவே தேர்தல் ஆணையத்திடம் உள்ள நிலையில், எந்த நடைமுறையையும் எடப்பாடி தரப்பு பின்பற்றவில்லை என்பதால், அந்த லிஸ்ட்டை இதுவரை பெற்றுக்கொள்ளவில்லை என்று தகவல்களும் வெளியாகின.

கையெழுத்து

கையெழுத்து

எனினும், தன்னுடன் இருக்கும் பொதுக்குழு உறுப்பினர்கள், மெஜாரிட்டி ஆதரவாளர்களை வைத்து, தன் பலத்தை நிரூபித்து விடலாம் என்பதே எடப்பாடியின் பிளானாக இருந்து வந்தது.. ஆனால், யாருக்கு மெஜாரிட்டி என்பதை ஆய்வுசெய்ய போவதில்லை என உச்சநீதிமன்றம் தற்போது கூறிவிட்டதால், சட்டத்தின் அடிப்படையிலேயே எடப்பாடி நடத்திய பொதுக்குழு கூட்டம் அணுக போவதால், அவருக்கான சிக்கல்கள் கூடிநிற்பதாகவே கூறப்படுகிறது.. ஒருபக்கம் சுப்ரீம்கோர்ட், இன்னொருபக்கம் தேர்தல் ஆணையம் என இரட்டை சிக்கலில் சிக்கி உள்ளார் எடப்பாடி பழனிசாமி. இதுவே தங்களுக்கு 50 சதவீத வெற்றியாக கருதும் ஓபிஎஸ் டீம், முழுமையான வெற்றியாக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது.

 சைலண்ட் கேம்

சைலண்ட் கேம்

இன்னொரு ஹைலைட்டும் உள்ளது.. சட்டரீதியான அணுகுமுறைகளை ஓபிஎஸ் ஒருபக்கம் எடுத்துக் கொண்டிருந்தாலும், தனக்கு கை கொடுக்கும் வகையில், மெகா அஸ்திரம் ஒன்றை கையில் எடுக்க போகிறாராம்.. அதாவது, துணை முதல்வராக இருந்தபோது, தனக்கு ஆதரவான உளவுத்துறை அதிகாரிகளின் உதவியுடன், அப்போதைய முதல்வராக இருந்த எடப்பாடி மற்றும் அவரது ஆதரவாளர்களின் ஊழல் விபரங்களை, சேகரித்து வைத்திருக்கிறாராம்.. அதைதான் அடுத்தக்கட்டமாக எடப்பாடி டீம் பக்கம் ஏவிவிட போவதாக தெரிகிறது.. ஓபிஎஸ் சைலண்ட்டாக இருக்கிறாரே என்று பலர் முணுமுணுத்துக் கொண்டிருந்தால், வேற லெவலில் இறங்கி யோசிக்கிறார் ஓபிஎஸ் என்று பூரிக்கிறார்கள் தென்மண்டல நிர்வாகிகள்...!

ஸ்தம்பிப்பு

ஸ்தம்பிப்பு

இன்றைய தினம், கோர்ட்உத்தரவால் எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பின்னடைவாகவே உள்ளதாக அரசியல் நோக்கர்களும் சொல்கிறார்கள்.. உச்சநீதிமன்றத்திலே ஒரு விஷயம் நிலுவையில் உள்ளபோது, தேர்தலுக்கு அவசரப்படுத்தியது ஏன்? என்ற கேள்வியையும் முன்வைக்கிறார்கள்.. உடனடியாக இது தொடர்பான தீர்ப்பு வராவிட்டால் கட்சி பணி ஸ்தம்பித்து விடும் என்றும் கோர்ட்டில் எடப்பாடி தரப்பில் கோர முடியாது.. காரணம், இடைக்கால பொதுச்செயலாளராக ஒருவர் பொறுப்பில் இருக்கும்போது, கட்சி பணி பாதிப்பதாக சொல்ல முடியாது.. அந்தவகையில், எடப்பாடிக்கு ஒரே ஒரு சான்ஸ்தான் இருக்கிறதாம்.. இனிமேல் இந்த தடையை அவர் விலக்க வேண்டும்.. ஆனால், இது அவ்வளவு எளிது கிடையாது.. பதில் மனுக்களை ஓபிஎஸ் தரப்பிலும் தாக்கல் செய்து, வாதங்கள் நடக்கும்.. அதனால், நாட்கள் பிடிக்குமாம்.. எப்படி பார்த்தாலும், எடப்பாடி பழனிசாமிக்கு இது பெருத்த மைனஸாகவே அமைந்துவிட்டது என்றும் சொல்கிறார்கள்.

English summary
OPS is planning a mega strategy against Edappadi Palanisamy and whats happening in AIADMK
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X