ஜெயலலிதாவின் சாதிப்பெயரை சொல்லி கொச்சையா பேசினார்.. கே.பி.முனுசாமி மீது ‘பகீர்’ குற்றச்சாட்டு!
சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சரும் ஈபிஎஸ் ஆதரவாளருமான கே.பி.முனுசாமி, ஜெயலலிதாவின் சாதி பற்றி கொச்சையாகப் பேசியதாக 'பகீர்' குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி.
முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி நேற்று ஓ.பன்னீர்செல்வத்தை கடுமையாகச் சாடிப் பேசியிருந்தார். ஓபிஎஸ் அரசியலில் இருப்பதற்கே தகுதி அற்றவர் என விமர்சித்திருந்தார்.
முனுசாமியின் இந்தப் பேச்சு ஓபிஎஸ் ஆதரவாளர்களை கொதிக்கச் செய்தது. தொடர்ந்து, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் புகழேந்தி, கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முனுசாமி பற்றி குற்றம்சாட்டி வருகின்றனர்.
ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது கே.பி.முனுசாமி பற்றி கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

சுயநலவாதி முனுசாமி
செய்தியாளர்களிடம் பேசிய கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, சுயநலவாதி கே.பி.முனுசாமிக்கு எம்.பி சீட் கொடுத்தார்கள். ஜெயிக்க முடியவில்லை. அதோடு விட்டிருக்கலாம். ராஜ்யசபா சீட் வாங்கினார். அப்போதும் போதாமல், எம்.எல்.ஏ சீட்டும் பெறுகிறார். எம்.எல்.ஏ ஆனால் அமைச்சராகி விடலாம் என்று நினைத்தார். ஆட்சி பறிபோனதும், எம்.எல்.ஏவா, எம்.பியா எனக் கேள்வி எழுந்தபோது எம்.பி சீட்டை ராஜினாமா செய்தார். உயர்ந்த பதவியை வீணடித்துவிட்டார். அவர் ஓபிஎஸ் பற்றி விமர்சிக்க தகுதியே இல்லை.

அடையாளம் காட்டிய ஓபிஎஸ்
கே.பி.முனுசாமி நல்லவரே கிடையாது. வாயில் ஒன்று பேசுவார். செயலில் வேறொன்றைச் செய்வார். அதனால் தான் இவரை ஜெயலலிதா ஒதுக்கி வைத்தார். ஜெயலலிதாவிற்குப் பிறகு முனுசாமியை அடையாளம் காட்டியதே ஓபிஎஸ் தான். இன்று கட்சியில் கே.பி.முனுசாமி இருக்கிறார் என்றால் அதற்கு ஓ.பன்னீர்செல்வம் தான் காரணம். அவரை துணை ஒருங்கிணைப்பாளராக நியமிக்க கடும் எதிர்ப்பு இருந்தது. அதையும் மீறி போராடி பதவி பெற்றுக் கொடுத்தார்.

நம்பி மோசம் போய்டாதீங்க
ஜெயலலிதா இருந்த பதவி வேறு யாருக்கும் இல்லை எனக் கூறிவிட்டு இன்று துணை பொதுச் செயலாளர் பதவியில் இருக்கிறார். அடுத்து எடப்பாடி பழனிசாமியை ஓரங்கட்டிவிட்டு அவர் இடத்திற்கும் வருவார். எடப்பாடி பழனிசாமி முனுசாமி பற்றி புரிந்துகொள்ளவேண்டும். அவர் நேரில் பேசுவதை நம்பி, வீணாகிவிடாதீர்கள். கே.பி.முனுசாமியின் சுயரூபம் அனைவருக்கும் தெரிய வேண்டும்.
|
ஜெயலலிதா சாதி பற்றி பேசினார்
ஜெ.தீபா கட்சிக்கு வந்தபோது, ஏற்கனவே ஒரு பாப்பாத்தி இப்போது இன்னொரு பாப்பாத்தியா கட்சியை கெடுக்குறதுக்கு என கே.பி.முனுசாமி ஜெயலலிதாவின் சாதிப்பெயரை சொல்லி மிகவும் கொச்சையாக என்னிடம் பேசினார். இதை அதிமுக தொண்டன் கேட்டால் என்ன ஆகும்? ஆனால் இதுவரை கட்சியின் நலன் கருதி அதை நான் சொல்லாமல் இருந்தேன். தற்போது எடப்பாடி அவர் ஓபிஎஸ் குறித்து அநாகரிகமாக பேசிவிட்டார். அதனால்தான் இதையெல்லாம் நான் கூறுகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
-
எங்களை தொட்டுருக்கவே கூடாது குழந்தை.. தவெகவுக்கு அதிமுக பைனல் வார்னிங் -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
அதிமுக என்னும் மாபெரும் மதில் இடியும் போதும்.. மௌனம் காக்கும் எடப்பாடி.. ஒரு வார்த்தை பேசலையாமே! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ்












Click it and Unblock the Notifications