ஒரே நாள்.. ஒரே மாதம்.. பெரியார், பிரதமர் மோடி பிறந்த நாளிலேயே பிறந்த ஓபிஎஸ் மனைவி.. துயர மரணம்
பெரியார், மோடி பிறந்த நாளில்தான் ஓபிஎஸ் மனைவியும் பிறந்துள்ளார்
சென்னை: பிரதமர் மோடி, தந்தை பெரியார் பிறந்தநாளில்தான், ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமியும் பிறந்துள்ளார்.. பிறந்த மாதத்திலேயே உயிரிழந்துள்ள நிலையில், அவரது மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமி, கடந்த இரு வாரங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார்.
இந்நிலையில் சென்னை, பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், பலனின்றி இன்று மாரடைப்பால் உயிரிழந்தார்.

மரணம்
தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள விஜயலட்சுமியின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்... அப்போது, அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, உதயநிதி எம்எல்ஏ உள்ளிட்டோரும் சென்றிருந்தனர்.. ஓபிஎஸ் மற்றும் அவருடைய மகன் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் ஆகியோருக்கு முதல்வர் உள்ளிட்டோர் ஆறுதல் தெரிவித்தனர்.

தந்தை பெரியார்
இந்நிலையில், தந்தை பெரியார், பிரதமர் மோடி பிறந்தநாளில்தான் ஓபிஎஸ் மனைவியும் பிறந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.. செப்டம்பர் 17ம் தேதி, தமிழ் சமூகத்தில் மாபெரும் மாற்றங்கள் உருவாக வித்திட்ட பகுத்தறிவு பகலவன் பெரியார் என்று எல்லோராலும் போற்றப்பட்ட ஈ.வெ.ராமசாமியும் பிறந்துள்ளார்.. அதேபோல, 2 முறை நம்மை ஆண்டு வரும் பாரத பிரதமர் நரேந்திர மோடியும் பிறந்துள்ளார்..

சோகம்
இவர்கள் இருவருமே இருவேறு துருவங்கள் என்பதால்தான் இந்த பிறந்தநாள் விசித்திரமாக பார்க்கப்படுகிறது. இவர்கள் பிறந்தநாளான செப்டம்பர் 17-ம்தேதிதான் ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமியும் பிறந்துள்ளார்.. 17.9.54-ம் ஆண்டு பிறந்துள்ளார்.. இந்த வருடம் பிறந்தநாளை கொண்டாடுவதற்கு முன்பேயே, பிறந்த மாதத்தில் விஜயலட்சுமி இறந்துள்ளது குடும்பத்தாரிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அஞ்சலி
ஓபிஎஸ்க்கும் விஜயலட்சுமிக்கும் 14.11.1977 அன்று திருமணம் நடைபெற்றது.. இவர்களுக்கு கவிதா பானு என்ற மகளும் தேனி எம்பி ரவீந்திரநாத் மற்றும் ஜெயபிரதீப் என்ற 2 மகன்களும் உள்ளனர். அவர்களது உடல் பெரியகுளத்தில் உள்ள தென்கரை தெற்கு அக்ரஹாரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு மதியம் 3 மணிமுதல் 4 மணிக்குள் உடலை கொண்டு வர உள்ள நிலையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக முன்னேற்பாடுகளை அவரது குடும்பத்தார் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications