ஆப்டிகல் இல்யூஷன் படம்: 'லப் டப்.. லப் டப்' இதயம் எங்க இருக்கு?.. 15 செகண்ட்.. கண்டுபிடிங்க பாஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் யானைக்கூட்டங்கள் போன்ற வரைபடத்துக்கு மத்தியில் ஒரு இதயம் உள்ளது. 15 செகண்டில் இதயத்தை கண்டுபிடித்தால் நீங்க கிரேட் பாஸ்.

பரபரப்பான வாழ்க்கைக்கு மத்தியில் சற்று இளைப்பாற இணைய பக்கம் திரும்புவது பலருக்கு இன்று அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறிவிட்டது.

அப்படிபட்ட சமயத்தில் ஆப்டிகல் இல்யூஷன் எனப்படும் ஒளி மாயை படங்களையும் பலரும் தற்போது பகிர்ந்து வருகின்றனர். இதனால், இப்போதெல்லாம் நெட்டிசன்கள் மத்தியில் இல்யூஷன் படங்களுக்கு தனி வரவேற்பு இருக்கிறது.

கண்களை குழப்பும் படம்

கண்களை குழப்பும் படம்

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சவால் மிக்கதாக உள்ளதால், பலரும் தங்கள் நண்பர்கள், உறவினர்கள் குழுவிற்குள் பகிர்ந்து அவர்களுக்கு சவால் விடுப்பது, அது தொடர்பான அரட்டைகளில் ஈடுபடுகின்றனர். நமது கண்களை குழப்புவதோடு முதலில் நாம் பார்ப்பது ஒன்றாகவும் உற்று பார்த்தால் வேறு மாதிரியாகவும் இருக்கும் இல்யூஷன் படங்கள் நமது புத்திக்கூர்மையும் சோதிப்பவை. இதனால், பலரும் யார் புத்திசாலி என்ற போட்டியில் இல்யூஷன் படங்களை தீவிரமாக அலசி ஆராயத் தொடங்கியிருக்கின்றனர்.

டிரெண்டிங் படம்

டிரெண்டிங் படம்

இதனால், இணையத்தில் எப்படியும் இல்யூஷன் படங்கள் டிரெண்ட் ஆகாத நாளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு ஆக்கிரமித்து வருகிறது. அப்படித்தான் தற்போது இணையத்தில் ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படம் டிரெண்டிங்கில் உள்ளது. அந்த படம் தான் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இங்கே காட்டப்பட்டு இருக்கும் படத்தில் யானைக்கூட்டங்கள் நிற்பது போன்ற வரைபடம் உள்ளது. இந்த யானைக்கூட்டங்களுக்கு மத்தியில் ஒரு இதயத்தின் வரைபடமும் ஒளிந்து இருக்கிறது.

இதயம் எங்க இருக்குது

இதயம் எங்க இருக்குது

அதை கண்டுபிடிப்பதே உங்களுக்கான இன்றைய சவால். அதுவும் 15 நொடிகளில் கண்டுபிடிக்க வேண்டும்... என்ன சவாலுக்கு ரெடியா இருக்கீங்களா.. முதலில் படத்தை உற்று பாருங்கள்.. இதயம் தெரிகிறதா.. இல்லை பாஸ் வெறும் யானைக்கூட்டங்கள் தான் தெரிகிறது என்கிறீர்களா.. நோ பிராப்ளம்.. நாங்கள் சில டிப்ஸ் தர்றோம் அதை வச்சு ஈசியா கண்டுபிடிச்சிடலாம். இந்த கூட்டத்தில் இருக்கும் யானையின் துதிக்கையில் வாழைப்பழம் இருக்கு... அதை கண்டுபிடிங்க..உங்களுக்கு இதயம் எங்க இருக்குன்னு ஈசியா கண்டுபிடிச்சிடலாம்.. டைம் ஆகிட்டே இருக்கு.. கண்டுபிடிச்சீட்டிங்களா...

இங்கே தான் இருக்கிறது

இங்கே தான் இருக்கிறது

எல்லாரும் கண்டுபிடிச்சிருப்பீங்கன்னே நினைக்கிறோம். கண்டுபிடிக்காதவங்க கவலைப்பட வேண்டாம். நாங்களே விடையை சொல்லிடுறோம்.. எந்த யானையின் பக்கம் இதயம் இருக்கிறது என்பது வட்டம் போட்டு காட்டப்பட்டுள்ளது. ச்சை... இதை பார்க்காம விட்டுட்டோம்னு பலரும் ஃபீல் பண்ணுறீங்களா...

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+