Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நீங்க கணக்குல புலியா?.. அப்ப படத்துல 16 புலிகள் இருக்கு.. 40 செகண்ட்ல கவுண்ட் செய்து சொல்லுங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்றைய ஆப்டிக்கல் இல்யூஷன் படத்தில் 16 புலிகளை தேடி கண்டுபிடியுங்கள். அதுவும் 40 வினாடிகளுக்குள்! என்ன முடியுமா?

அப்படி கண்டுபிடித்துவிட்டால் நீங்கள்தான் பாஸ், கில்லாடி! என்ன இந்த சவாலை எதிர்கொள்ள நீங்கள் தயாரா? ஓய்வு நேரத்தை அரட்டை அடித்து வெட்டி கதை பேசி வீணாக்குவதைவிட்டுவிட்டு தினமும் இது போல் ஏதாவது மூளைக்கு வேலை கொடுக்கும் விளையாட்டுகளை விளையாடினால் மூளை சுறுசுறுப்பாக இயங்கும்.

Optical Illusion spot the 16 tigers in this image in just 40 seconds

அந்த நாளும் புத்துணர்ச்சியாக இருக்கும். புதிரை கண்டுபிடிக்கும் முன்பு ஆப்டிக்கல் இல்யூஷன் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்வோம். ஆப்டிக்கல் இல்யூஷன் என்பது கண்கட்டி வித்தை. சுருக்கமாக சொல்ல போனால் திருப்பதியில் மொட்டை அடித்த உயரமான சிகப்பு நிற சர்ட் அணிந்தவரை கண்டுபிடிப்பது போன்றது. இது நடக்கிற காரியமா?

திருப்பதி என்றாலே மொட்டைதான். அதில் பெரும்பாலும் உயரமாகவும் எல்லோருக்கும் எளிதில் கிடைக்கும் சிவப்பு நிற சட்டையை அணியத்தான் செய்வார்கள். அப்படி இருக்கும் போது எப்படி கண்டுபிடிப்பது. அது போல் மேகக் கூட்டங்களுக்கு இடையே நட்சத்திரங்களை கண்டுபிடிக்கச் சொன்னால் எப்படி?

அது போல்தான் குழப்பங்கள் நிறைந்தது. கண்களை ஏமாற்றும், அறிவை தூண்டும், மூளைக்கு வேலை கொடுக்கும் விளையாட்டுத்தான் இந்த ஆப்டிக்கல் இல்யூஷன் ஆகும். ஒரு முறை விளையாடி பார்த்தால் போதும். அதன் பிறகு இதை விடவே மாட்டீர்கள். அந்த அளவுக்கு ஆர்வத்தை தூண்டிவிடும். தற்போது சமூகவலைதளங்களில் இந்த ஆப்டிக்கல் இல்யூஷன்கள் தான் உலா வருகின்றன.

நிறைய நண்பர்கள், உறவினர்களின் வாட்ஸ் ஆப் குரூப்புகளில் ஆப்டிக்கல் இல்யூஷன் , பசில்கள் இல்லாமல் நாளே முடியாது. கடைசியில் விடை சொல்லும் போதுதான் அய்யோ இது கண்டுபிடிக்க முடியாமல் போய்விட்டதே என எண்ணுவோம். அப்படிப்பட்ட நிலையில் தற்போது நாங்கள் ஒரு படத்தை காட்டுகிறோம்.

இந்த சவாலை இதுவரை சந்தித்த நபர்களிலேயே 1 சதவீதம் பேர் தான் கண்டுபிடித்துள்ளார்கள். சிலர் படத்தில் 16 புலியெல்லாம் இல்லை, 2 பெரிய புலிகள், 2 புலிகுட்டிகள்தான் இருக்கின்றன என சாதித்தார்கள். ஆனால் அதுதான் ஒளியின் மாயை என்கிறோம். நீங்கள் கண்களை மூடி, 70 சதவீதம் திறந்து, லென்ஸ் வைத்து, பைனாகுலர் வைத்து எப்படியாயினும் செக் செய்யுங்கள்.

நாங்கள் எந்த தடையும் இல்லை. என்ன கண்டுபிடித்துவிட்டீர்களா. பார்ப்பதற்கு 1 முதல் 5 வரை மட்டுமே புலிகள் இருப்பதாக தெரியும். ஆனால் உற்று பார்த்தால்தான் பொந்துகளில் மரங்களில் புலிகளுக்கு கீழே அமர்ந்திருப்பது போன்றவை தெரியும். மரக்கிளைகளை பாருங்கள், வானத்தை பாருங்கள், தரையை பாருங்கள். புலி போன்ற தோற்றத்தில் இருப்பதை கண்டுபிடியுங்கள். இல்லாவிட்டால் நாங்களே சொல்கிறோம். படத்தில் வட்டமிட்டதை கவுன்ட் செய்யுங்கள், புலிகள் 16 வரும். வராவிட்டால் கேளுங்கள்.

Optical Illusion spot the 16 tigers in this image in just 40 seconds
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+