சென்னை ஈசிஆரில் உள்ள பிரபல நட்சத்திர விடுதிக்கு எதிராக பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: கிழக்கு கடற்கரையில் விதிகளை மீறி, மாமல்லபுரம் ரேடிசன் புளூ ஓட்டல் நிர்வாகம் கட்டியுள்ள 1100 சதுர கட்டிடத்தை இடிக்க தென் இந்திய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ரேடிசன் புளூ ஓட்டல் நிர்வாகம் இந்த விதிமீறலுக்காக 10 கோடி அபராதத்தை செலுத்த வேண்டும் என்றும் பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது.

Recommended Video

    #BREAKING ரேடிசன் ப்ளூ ஹோட்டலை இடிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!

    சென்னையில் உள்ள தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் சென்னையை சேர்ந்த மீனவர் நலச்சங்க தலைவர் கே.ஆர்.செல்வராஜ் குமார், ரேடிசன் புளூ ரிசார்டுக்கு எதிராக மனு தாக்கல் செய்திருந்தார்.

    அவர்கள் தாக்கல் செய்த மனுவில். செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கடற்கரை அருகே ரேடிசன் புளூ ஓட்டல் மற்றும் ரிசார்ட் அமைந்திருக்கிறது. கடலோர ஒழுங்குமுறை ஆணைய விதிகள்படி கடற்கரையில் இருந்து 500 மீட்டருக்கு அப்பால் தான் கட்டிடங்கள் கட்டப்பட்டிருத்தல் வேண்டும்.

    கடலோர ஒழுங்குமுறை ஆணையம்

    கடலோர ஒழுங்குமுறை ஆணையம்

    ஒருவேளை விதியில் சில திருத்தங்கள் கொண்டு வந்து கடற்கரையில் இருந்து 200 மீட்டருக்கு அப்பால் கட்டிடங்கள் கட்டப்பட்டு இருந்தால் அவற்றுக்கு கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தில் முறையான அனுமதி பெற வேண்டும்.

    ரேடிசன் புளூ ரிசார்ட்

    ரேடிசன் புளூ ரிசார்ட்

    ஆனால் இந்த விதிகளுக்கு புறம்பாக ரேடிசன் புளூ நிர்வாகம் மாமல்லபுரத்தில் ரிசார்ட் கட்டிடம் உள்ளது. எனவே அந்த கட்டிடத்தை இடிக்க உத்தரவிட வேண்டும், சுற்றுச்சூழல் தாக்கத்தை ஏற்படுத்தியதற்காக அபராதம் விதிக்க வேண்டும் என்று வலியுத்தி இருந்தார்.

    10 கோடி ரூபாய் அபராதம்

    10 கோடி ரூபாய் அபராதம்

    இந்த மனு நீதிபதி கே.ராமகிருஷ்ணன், உறுப்பினர் சாய்பால்தாஸ் குப்தா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த ஆணையம், கடற்கரையில் இருந்து 200 மீட்டர் தொலைவுக்குள் கட்டப்பட்டுள்ள 1,100 சதுர மீட்டர் கட்டிடத்தை 2 மாதத்துக்குள் இடிக்க வேண்டும். சுற்றுச்சூழல் தாக்கத்துக்காக ஓட்டல் நிர்வாகம் மாநில கடலோர ஒழுங்கு மண்டல ஆணையத்துக்கு ரூ.10 கோடி இழப்பீடாக வழங்க வேண்டும்.

    இல்லாவிட்டால் இடிக்கணும்

    இல்லாவிட்டால் இடிக்கணும்

    கடற்கரையில் இருந்து 200 மீட்டர் முதல் 500 மீட்டர் தொலைவுக்குள் உள்ள கட்டிடத்துக்கு மாநில கடலோர ஒழுங்கு மண்டல ஆணையத்தில் ஓட்டல் நிர்வாகம் 3 மாதத்துக்குள் உரிய அனுமதி பெற வேண்டும். அப்படி அனுமதி வாங்காத பட்சத்தில் அந்த கட்டிடத்தையும் இடிக்க வேண்டும். இந்த விதிமீறலை ஆணையத்தின் கவனத்துக்கு கொண்டு வந்த மனுதாரருக்கு ரேடிசன் புளூ ஓட்டல் நிர்வாகம் ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும்" இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+