தமிழகத்தில் 97.40 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்? மதியம் 2 மணிக்கு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
சென்னை: தமிழகத்தில் 97.40 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று மதியம் 2 மணிக்கு இறுதி வாக்காளர் பட்டியலை தமிழக தேர்தல் ஆணையம் வெளியிடுகிறது.

தமிழகத்தில் மொத்தம் 6.41 கோடி வாக்காளர்கள் உள்ளனர். தற்போது இந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தால் 97.40 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட வாய்ப்பிருக்கிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது கிட்டதட்ட 1 கோடி பேர் நீக்கப்பட வாய்ப்புள்ளது.
அந்த 97.40 லட்சத்தில், நிரந்தரமாக இடம் மாறி சென்றதாக 52.60 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படக் கூடும். அது போல் இரட்டை பதிவு எண் அடிப்படையில் 3.98 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படலாம்.
13.60 லட்சம் பேர் கண்டுபிடிக்கப்பட முடியாவர்கள் அல்லது ஆப்சென்ட் என்ற நிலையில் உள்ளனர். 97.40 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் என்பது கிட்டதட்ட 15.5 சதவீதம் பேராகும்.
காஞ்சிபுரம், ஈரோடு, திருவள்ளூர், திண்டுக்கல், வேலூர், நெல்லை ஆகிய மாவட்டங்களில் தலா 6 லட்சம் பேர் நீக்கப்படலாம். அரியலூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் தலா 10 சதவீதம் வீதம் 6 லட்சம் வாக்காளர் நீக்கப்படுவர்.
செங்கல்பட்டில் 7 லட்சம் பேரும் கோவையில் 6 லட்சம் பேரும் வடமாநில தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் திருப்பூரில் 5 லட்சம் வாக்காளர்களும் நீக்கப்படலாம். சென்னையில் 40.05 லட்சம் வாக்காளர்களில் 14.26 லட்சம் பேர் நீக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
ஒரு வேளை பெயர்கள் நீக்கப்பட்டுவிட்டால் என்ன செய்வது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். உங்களது பிஎல்ஓ அதிகாரியை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
-
அரசியல் என்ட்ரி? திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறாரா ராகவா லாரன்ஸ்! வெளியான முக்கிய அறிவிப்பு -
கரண்ட் பில் கட்ட கடைசி தேதி முடிஞ்சுடுச்சா? பதறாதீங்க.. இனிமேல் இப்படி ஒரு வசதி இருக்கு! -
அம்மா சென்டிமென்ட்.. அறுக்காதீங்க லாரன்ஸ்! கொந்தளித்த ப்ளூ சட்டை மாறன்! சரமாரி விமர்சனம் -
குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க என்ன நடவடிக்கை?.. தமிழக அரசுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
திருவள்ளூர் முட்புதரில் 3 வயது குழந்தை... ஒரே நாளில் 5 சிறுமிகளுக்கு கொடுமை! சிங்கப்பெண் படை எங்கே? -
ஓமன் அருகே கப்பலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. குளிர்ந்த நீரால் உடலை பாதுகாக்க போராடும் சக ஊழியர்கள் -
செங்கல்பட்டு-திண்டிவனம் 6 வழிச்சாலை விரிவாக்கம்: NHAI அதிரடி திட்டம் - போக்குவரத்து நெரிசல் ஓவர்! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications