சென்னையில் வாடகைக்கு குடியிருந்தவரால் 35 லட்சம் ஏமாந்த வீட்டின் உரிமையாளர்.. இப்படியும் நடக்கலாம்
சென்னை: சென்னை போரூர், மங்களா நகரைச் சேர்ந்தவர் சிவகுமார். இவருக்கு சொந்தமான வீட்டின் கீழ் தளத்தில் வெங்கடேசன் என்பவர் வாடகைக்கு வசித்து வருகிறார். இவர், கடந்த சில மாதங்களாக வாடகை செலுத்தவில்லை என தெரிகிறது. இதனால் துபாயில் உள்ள வெங்கட ஆச்சாரியா என்ற வக்கீல் மூலம் கோர்ட்டில் வழக்கு தொடர வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். ஆனால் யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்டாக வாடகைக்கு வசிப்பவர் புகார் அளித்துள்ளதாக கூறி வீட்டின் உரிமையாளரை மிரட்டி ரூ.35 லட்சம் பறிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வாடகைக்கு வீடு விடும் உரிமையாளர்களை ஏமாற்றி பணம் பறிப்பது நடக்கிறது. வாடகைக்கு வீடு விடும் உரிமையாளர்கள், லீசுக்கு வீட்டை விடும் உரிமையாளர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். தனியார் நிறுவனங்கள் அல்லது தனி நபர்களிடம் ஒப்பந்தம் போடுவதற்கு முன்பு கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் கற்பனையே செய்ய முடியாத அளவிற்கு ஏமாற்றங்கள் அவ்வப்போது நிகழ்த்தப்படுகின்றன. வீட்டை அபகரிக்கும் நோக்கில் சிலர் செயல்படுகிறார்கள். சிலர் வீட்டில் வாடகையே செலுத்தாமல் இருக்கிறார்கள். பணம் கேட்டால் பொய்யான வழக்குகள் போடுவதும், சில நேரங்களில் மிரட்டுவதும் நடக்கிறது.

சென்னை போரூர், மங்களா நகரைச் சேர்ந்தவர் சிவகுமார். இவருக்கு சொந்தமான வீட்டின் கீழ் தளத்தில் வெங்கடேசன் என்பவர் வாடகைக்கு வசித்து வருகிறார். இவர், கடந்த சில மாதங்களாக வாடகை செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனால் துபாயில் உள்ள வெங்கட ஆச்சாரியா என்ற வழக்கறிஞர் மூலம் கோர்ட்டில் வழக்கு தொடர வெங்கடேசனுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.
இந்தநிலையில் சிவகுமாரை தொடர்பு கொண்ட வக்கீல் வெங்கட ஆச்சாரியா, "உங்கள் மீது வெங்கடேசன், தனது மகளிடம் தவறாக நடந்து கொண்டதாக போக்சோ வழக்கு தொடர்ந்து இருக்கிறார். அந்த வழக்கை முடித்து வைக்க பணம் தேவைப்படுவதாக கூறியிருக்கிறார். இப்படி சென்னையில் உள்ள நண்பர் மூலம் சிவகுமாரிடம் இருந்து ரூ.35 லட்சம் வரை பெற்றதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் அந்த வழக்கை வாபஸ் பெற வெங்கடேசன் ரூ.4 கோடி கேட்பதாகவும், எனவே நீங்கள் குடியிருக்கும் வீட்டை விற்று ரூ.2 கோடி தரவேண்டும் எனவும் சிவகுமாரை வக்கீல் வெங்கட ஆச்சாரியா மிரட்டியிருந்ததாக கூறப்பபடுகிறது.. இதனால் பயந்துபோன சிவகுமார், இதுபற்றி உறவினர்களிடம் கூறி விசாரித்தபோது அதுபோல் வெங்கடேசன் வழக்கு எதுவும் தொடரவில்லை என்பதும், வக்கீல் தான் ஏமாற்றி பணம் மோசடி செய்ததும் விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து சிவகுமார் அளித்த புகாரின் பேரில் போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவகுமாரிடம் இருந்து பணத்தை பெற்ற ஞானசேகர் என்பவரை கைது செய்தார்கள். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள துபாய் வக்கீல் வெங்கட ஆச்சாரியா, டானியல், லட்சுமி ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications