"வார் ரூம்" போட்டு கலக்கும் பினராயி.. "ஆக்சிஜன்" இருப்பு எவ்வளவு.. யாருக்கு தேவை.. அசத்தும் கேரளா!
கேரளாவில் ஆக்ஸிஜன் விநியோகிக்க வார் ரூம் திறக்கப்பட்டுள்ளது
சென்னை: இயல்பாகவே மக்களை அளவுக்கு அதிகமாக நேசித்து, அறிவியல் ரீதியாக சிந்திக்கும் எந்த அரசும் ரோல்மாடல் என்ற லிஸ்ட்டில் இடம்பெற்றுவிடும்.. நம் பக்கத்து மாநிலம் கேரளமும் அப்படித்தான்.. இந்த நெருக்கடி சமயத்தில், மக்களின் உயிர்களை காப்பதற்காகவும், ஆக்ஸிஜன் பற்றாக்குறையையும் நிவர்த்தி செய்வதற்காகவும் வார் ரூம் ஒன்றினை திறந்து வைத்துள்ளது..!
இன்று ஆக்ஸிஜன் மிகப்பெரிய பிரச்சனையாக நாட்டில் உருவெடுத்து வருகிறது.. ஆக்ஸிஜன் சிலிண்டர்களை எப்படியாவது வாங்க வேண்டும் என்று நோயாளிகளின் சொந்தக்காரர்கள் ஆஸ்பத்திரிகளில் தவித்து கொண்டிருக்கிறார்கள்..
இந்த மாதிரி நேரத்தில் ஆக்ஸிஜன் விலை பல மடங்கு உயர்ந்துவிட்டது... ஆக்ஸிஜனை ஏற்றிச்செல்லும் வண்டிகள் கடத்தி செல்லப்படுகிறது.. யாராவது ஆக்ஸிஜனை கடத்தினால், தூக்கில் போடுவோம் என்று சுப்ரீம் கோர்ட் வார்ன் செய்த பிறகுதான் இது ஓரளவு தீர்ந்துள்ளது.. அந்த அளவுக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை தேசத்தை உலுக்கி எடுத்து வருகிறது.

ஆக்ஸிஜன்
இப்படிப்பட்ட சூழலில்தான், கேரளா வியக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகிறது.. பெருமளவில் அவர்கள் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்துகொண்டிருக்கிறார்கள்.. இந்த விஷயம் என்றில்லை, எப்போதெல்லாம் தங்கள் மாநிலத்தில் இடர்பாடுகள் வருகிறதோ, அப்போதெல்லாம் பக்காவாக ஸ்கெட்ச் போட்டு வேலை பார்க்கிறது கேரள அரசு.

நிப்பா வைரஸ்
இப்படித்தான் கொஞ்ச நாளைக்கு முன்னாடி, நிப்பா வைரஸ் அந்த மாநிலத்தை தாக்கியபோது, பினராயி தலைமையிலான அரசு செயல்பட்ட விதத்தை பார்த்து நாடே வியந்தது.. கேரளா மாடல் என்று அந்தந்த மாநிலங்கள் இதே பாணியை கடைப்பிடித்தனர்.. கடந்த வருடம் கொரோனா தொற்று நாட்டுக்குள் நுழைந்தபோதும், ஐநாவையே தங்கள் செயலால் திரும்பி பார்க்க வைத்தவர் பினராயி விஜயன்.

ஆக்சிஜன்
இதற்கெல்லாம் காரணம், ஒவ்வொன்றையும் முன்கூட்டியே ஆலோசித்து, அதற்குரிய தேவையான திட்டமிடல்களுடன் அம்மாநிலம் எதிர்கொண்டு வருவதுதான்.. இப்டித்தான் ஆக்ஸிஜன் விஷயத்திலும் நடந்துள்ளது.. ஆக்ஸிஜன் உற்பத்தியை போன வருஷமே அதிகரிக்க ஆரம்பித்துவிட்டார்களாம். ஆக்ஸிஜன் உற்பத்தியில் கேரளம் முன்மாதிரியாகத் திகழ்கிறது என டெல்லி ஹைகோர்ட்டே பாராட்டி இருக்கிறது..

வார் ரூம்
இப்போதைக்கு தேவையான ஆக்ஸிஜன்கள் கையில் உள்ளது.. அதேபோல, கொரோனா வார்டுகளில் பல படுக்கைகள் காலியாக உள்ளன.. இதுபோக ஆக்ஸிஜன் சப்ளையை ஒழுங்குப்படுத்துவதற்காகவே, வார் ரூம் என்ற ஒன்றை மாவட்டங்களில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 80 இடங்களில் இத்தகைய சிறப்பு ரூம் திறக்கப்பட்டுள்ளன. இதில் ஆக்ஸிஜன் இருப்பு எவ்வளவு உள்ளது, எங்கு எவ்வளவு தேவை என்பதை வரையறுத்து திட்டமிட்டு செயல்படுத்த துவங்கி உள்ளது.

ஆம்புலன்ஸ்
ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லாவிட்டாலும், ஆக்ஸிஜனைக் கொண்டு செல்லும் வாகனங்களுக்கு யாராவது இடையூறு செய்தாலும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகங்கள் தெளிவுபடுத்தியுள்ளன.. ஆக்ஸிஜனை கொண்டு செல்லும் ஆம்புலன்ஸ்கள் வந்தால், அதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும், என்பன உட்பட பல்வேறு விதிகமுறைகளையும் அம்மாநில அரசு வகுத்துள்ளது

இடதுசாரி
பொதுமருத்துவம், கல்வி போன்றவை இடதுசாரிகளின் திட்டத்தில், அதிமுக்கியத்துவம் பெற்று இருந்து வருகின்றன.. எப்போதுமே, மருத்துவக் கட்டமைப்பு என்ற விஷயத்தில் இடதுசாரி அரசுகள் ஆழமாக வேரூன்றி யோசித்து செயல்படும்.. இதைதவிர, இயல்பாகவே அந்த மக்களிடம் அரசியல் விழிப்புணர்வு அதிகம்... எனவேதான், அரசு ஒரு திட்டம் போட்டால், அதை சக்சஸ் செய்து காட்டிவிடுகிறார்கள் அந்த மாநில மக்கள். இந்த வார் ரூம் உட்பட, பினராயி விஜயன் அரசின் திட்டமிடலும், செயல்பாடும் மக்கள் மீதான அக்கறையும் அனைவரையும் வியக்க வைத்து வருகிறது..!
-
வேட்பாளர் லிஸ்டில் பெயர் இல்லை.. அண்ணாமலை இன்று மாலையே முக்கிய மூவ்.. வியந்து போன வானதி.. அசத்தல் -
தேர்தல் பரப்புரையில்.. துரந்தர், கேரளா ஸ்டோரி, காஷ்மீர் ஃபைல்ஸ் பற்றி பேசிய மோடி! கேரளாவில் சலசலப்பு -
Annamalai: தமிழக சட்டசபை தேர்தல்.. ஒரு வழியாக பாஜகவின் "அந்த" பட்டியலில் இடம்பெற்ற அண்ணாமலை பெயர்! -
கேரளா தேர்தலை பாதிக்கும் வளைகுடா போர்.. இரண்டிற்கும் என்ன சம்பந்தம்? ரொம்பவே கஷ்டம் தான் -
"அண்ணாமலை சட்டசபைக்குள் வரக்கூடாது என பிளான் போட்ட முக்கிய தலைகள்”.. போட்டு உடைத்த திருச்சி சூர்யா! -
அண்ணாமலை போட்டி இல்லை! கோவை வடக்கில் வானதி, மயிலாப்பூரில் தமிழிசை.. பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு -
அண்ணாமலைக்கு புதிய ‘ரோல்'..தேர்தல் நெருங்கும் வேளையில் பாஜக கொடுத்த முக்கிய ‘அசைன்மென்ட்' -
மாமியாருக்கு பதில் மருமகள்.. வாரிசு அரசியல் பேசிவிட்டு இப்படியா? மொடக்குறிச்சி பாஜக வேட்பாளரின் பின்னணி -
அண்ணாமலைக்கு 'கல்தா'.. எடப்பாடியின் செல்லப்பிள்ளைகளுக்கு 'சீட்' .. பாஜகவின் திடீர் முடிவு.. ஏன்? -
நேரில் வாங்க அண்ணாமலை.. பாஜக மேலிடம் போட்ட திடீர் உத்தரவு.. சென்னையில் மோடியுடன் முக்கிய மீட்டிங் -
ஊருக்கு முன்பே வேட்புமனு தாக்கல் செய்த தஞ்சை பாஜக நிர்வாகி முரளீதரன்! நயினார் எடுத்த ஆக்ஷன்! -
ஆதரவாளர்களுக்கு சீட்.. அண்ணாமலை வைத்த டிமாண்ட்.. பாஜக வேட்பாளர் பட்டியல் தாமதமாவதன் பின்னணி!












Click it and Unblock the Notifications