மோடியை தினமும் பிறந்த நாள் கொண்டாட ஏன் சொன்னேன் புரிகிறதா.. டேட்டா வெளியிட்டு ப.சிதம்பரம் கிண்டல்
சென்னை: பார்த்தீர்களா, நான் சொன்னதே நடக்கிறது. பிரதமர் தினமும் பிறந்த நாள் கொண்டாடினால் தடுப்பூசி எண்ணிக்கை உயரும் என்று, டேட்டாவை வெளியிட்டு மீண்டும் ப.சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 17ம் தேதி, தனது 71வது பிறந்தநாளை நேற்றுக் கொண்டாடினார். இதையொட்டி நாடு முழுக்க கொரோனா தடுப்பூசி பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.
கிராமம் கிராமமாக சென்று பாஜக தொண்டர்கள், மக்களை தடுப்பூசி போடும் இடங்களுக்கு அழைத்து வந்தனர்.

பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்கள்
மேலும், பாஜக ஆளும் மாநிலங்கள் பலவும் கடந்த சில நாட்களாக தடுப்பூசி போடும் அளவை குறைத்துக் கொண்டு அந்த தடுப்பூசிகளை மொத்தமாக அன்றைய தினம் செலுத்தின. இதன் காரணமாக அன்று ஒரே நாளில் இரண்டரை கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இது ஒரு உலக சாதனை. ஏனெனில், ஒரே நாளில் இதுவரை எந்த நாடும் இந்த அளவுக்கு தடுப்பூசி செலுத்தவில்லை.

தினந்தோறும் பிறந்த நாள்
இந்த நிலையில்தான் பா.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், பிரதமர் நரேந்திர மோடி தினந்தோறும் தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டும் என்று கிண்டலாக கூறியிருந்தார். உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத் மற்றும் கர்நாடகா ஆகிய பாஜக ஆளும் மாநிலங்கள் பிரதமரின் பிறந்தநாள் தினத்தன்று தடுப்பூசி செலுத்தும் பணிகளில் சிறப்பாக செயல்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தினந்தோறும் செலுத்தும் தடுப்பூசி அளவைவிட நேற்று அதிக அளவுக்கு இந்த மாநிலங்கள் செலுத்தியுள்ளன. ஆனால் மற்ற நாட்களில் அவை செயல்படாத மாநிலங்களாக இருக்கின்றன. எனவே பிரதமர் நரேந்திர மோடி தினந்தோறும் தனது பிறந்தநாளை கொண்டாடும். இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்திருந்தார்.

சராசரி அளவு
இந்தியாவில் ஒரு நாளைக்கு சராசரியாக 70 முதல் 80 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. பிரதமரின் பிறந்தநாளை ஒட்டி அதைவிட சுமார் மூன்று மடங்கு அளவுக்கு ஒரே நாளில் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஆனால் மற்ற நாட்களில் ஒரு கோடி என்ற தினசரி சராசரி அளவுக்கு தடுப்பூசி போடும் பணிகள் வந்து சேரவில்லை என்பது விமர்சனமாக உள்ளது.

ப.சிதம்பரம் ட்வீட்
அதேநேரம், சிதம்பரம் வெளியிட்ட ட்வீட்டை பாஜகவைச் சேர்ந்த நெட்டிசன்கள் விமர்சனம் செய்தனர். நல்லது செய்ததை பாராட்டாமல் இப்படி பேசலாமா என்று கேள்வி எழுப்பினர். இதற்கு மீண்டும் ட்விட்டரில் பதில் அளித்துள்ளார் ப.சிதம்பரம். பார்த்தீர்களா நான் சொன்னதே நடந்துள்ளது என்று குறிப்பிட்டு, பிரதமர் தினமும் பிறந்த நாள் தினத்தன்று தடுப்பூசி எண்ணிக்கை உயர்ந்ததையும், அதற்கு முந்தைய தினங்களில் தினசரி 1 கோடிக்கும் குறைவாகவே டோஸ்கள் போடப்பட்டதையும் கிராப் ஒன்றின் மூலம் உறுதி செய்துள்ளார் ப.சிதம்பரம்.












Click it and Unblock the Notifications