தடுப்பூசிகளை பதுக்கி மொத்தமாக போடும் சாதனை.. மோடி ஹை.. நோபல் பரிசே கொடுக்கலாம்.. ப.சிதம்பரம் அட்டாக்
சென்னை: கொரோனா தடுப்பூசிகளை பதுக்கி வைத்துவிட்டு பின்னர் மொத்தமாக போடும் சாதனைக்காக மோடி அரசுக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசே கொடுக்கலாம் என்று மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் சாடியுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் போடும் பணி முனைப்பாக நடைபெற்று வருகிறது. திடீரென ஒரேநாளில் 88 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டதாக கொண்டாடியது மத்திய பாஜக அரசு. இதற்கு பிரதமர் மோடியும் பாராட்டு தெரிவித்தார்.

தடுப்பூசி சாதனை மீது சந்தேகம்
ஆனால் இந்த 88 லட்சம் கொரோனா தடுப்பூசி சாதனை நிகழ்த்தப்பட்ட மறுநாளில் சுமார் 50 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே போடப்பட்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் 88 லட்சம் சாதனை தடுப்பூசிகள் மீது சந்தேகங்கள் எழுந்தன.

பாஜக ஆட்சிகள்தான்..
இதன்பின்னர்தான், கொரோனா தடுப்பூசி நிகழ்த்தப்பட்டதாக தம்பட்டம் அடித்த 10 மாநிலங்களில் 7-ல் பாஜக ஆட்சி செய்வது தெரியவந்தது. பல லட்சம் தடுப்பூசி ஒரேநாளில் போடப்பட்டதற்கு முன்னதாக சொற்ப எண்ணிக்கையில்தான் தடுப்பூசிகள் போடப்பட்டிருந்தன. இதனால் பாஜக ஆளும் மாநிலங்கள், கொரோனா தடுப்பூசியை பதுக்கி வைத்திருந்தே மொத்தமாக போட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

பதுக்கி வைத்து போடுவதா?
இது தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்திகளை மேற்கோள் காட்டி ப.சிதம்பரம் இன்று தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: ஞாயிற்றுக்கிழமையன்று பதுக்கி வையுங்கள்; திங்கள்கிழமையன்று தடுப்பூசி போடுங்கள்; செவ்வாய்க்கிழமை பழைய நிலைமைக்கே செல்லுங்கள்.. இதுதான் ஒருநாள் கொரோனா தடுப்பூசி சாதனையில் ரகசியம்!
|
மோடி அரசுக்கு நோபல் பரிசு...
இந்த சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்கப்பட வேண்டும். ஏன் மோடி அரசுக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசும் கொடுக்கலாம். மோடி ஹை.. மும்ஹின் ஹை என்பதை மோடி ஹை மிராக்கிள் என மாற்றிப் படிக்க வேண்டும். இவ்வாறு ப.சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.
-
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம்












Click it and Unblock the Notifications