ப சிதம்பரத்தை தூக்கி கொண்டு ஓடிய தொண்டர்கள்.. மருத்துவமனையில் என்னாச்சு? கார்த்தி சிதம்பரம் பரபர
சென்னை: குஜராத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்த ப. சிதம்பரத்திற்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து காங்கிரஸ் நிர்வாகிகள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். இது காங்கிரஸ் தொண்டர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்திய நிலையில், தனது தந்தைக்கு என்ன நடந்தது என்பது குறித்த தகவல்களை கார்த்தி சிதம்பரம் பகிர்ந்து கொண்டுள்ளார்.
குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் தேசிய மாநாடு ஒன்று நடைபெறுகிறது. இதில் நாடு முழுக்க இருந்த காங்கிரஸ் தலைவர்களும் தொண்டர்களும் பங்கேற்றுள்ளனர். அதன்படி முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப சிதம்பரம் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தார்.

ப. சிதம்பரம்
இதற்காக அவர் குஜராத் மாநிலம் அகமதாபாத் சென்றிருந்தார். இன்று காலை முதலே அவர் சோர்வாகக் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே இன்று மாலை திடீரென அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அங்குள்ளவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
ஷாக் வீடியோ
காங்கிரஸ் நிர்வாகிகள் ஆம்புலன்ஸ் வரை அவரை தூக்கிக் கொண்டு ஓடிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை தரப்பட்டு வருவதாக முதற்கட்ட தகவல்கள் வெளியானது. இதற்கிடையே ப. சிதம்பரத்திற்கு என்ன ஆனது.. அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட என்ன காரணம் என்பது குறித்த தகவல்களை அவரது மகனும் சிவகங்கை எம்பியுமான கார்த்தி சிதம்பரம் பகிர்ந்துள்ளார்.
என்னாச்சு
அதீத வெப்பம் மற்றும் நீரிழப்பு காரணமாக ப. சிதம்பரம் மயங்கியதாகவும் அவருக்கு இப்போது தொடர்ந்து சிகிச்சை தரப்பட்டு வருவதாக கார்த்தி சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில் மேலும், "என் தந்தை ப. சிதம்பரம் அகமதாபாத்தில் கடுமையான வெப்பம் மற்றும் நீரிழப்பு காரணமாக மயக்கம் அடைந்தார். அவர் இப்போது ஜைடஸ் மருத்துவமனையில் கண்காணிப்பில் உள்ளார். மருத்துவர்கள் அவரது உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர். இப்போது அவரது உடல்நிலை இயல்பாகவே இருக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.
கோடையைச் சமாளிப்பது எப்படி
இப்போது எல்லா இடங்களில் கோடைக் காலம் ஆரம்பித்துவிட்ட நிலையில், வெயில் அதிகமாகவே இருக்கிறது. மதிய நேரங்களில் வெளியே கூட செல்ல முடியாத சூழல் இருக்கிறது. வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் மதிய நேரங்களில் தேவையில்லாமல் வெளியே செல்வதைத் தவிர்ப்பது சிறந்தது. மேலும், உடலுக்கு நீரேற்றம் தரும் வகையில் தண்ணீர், ஜூஸ் உள்ளிட்டவற்றைத் தொடர்ந்து குடிக்கவும். அப்போது தான் உடலுக்குத் தேவையான நீர் கிடைக்கும்.
மேலும், கோடைக் காலம் என்பதால் வெளியே செல்லும் போது தளர்வான பருத்தி ஆடைகளை அணியவும். டைட்டான ஜீன்ஸ் போன்ற ஆடைகளைத் தவிர்க்கவும். இதுபோல சில அடிப்படை விஷயங்களைச் செய்தால் கோடை வெப்பத்தில் இருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளலாம்.
-
காங்கிரசுக்கு ராஜ்யசபா எம்பி சீட் காலி? மீனாட்சி நடராஜனின் மனு.. உச்ச நீதிமன்றம் நிராகரித்தது ஏன்? -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்!












Click it and Unblock the Notifications