"இளைஞர்கள் அனைவரும் மு.க.ஸ்டாலின் போல் உழைக்க வேண்டும்.." புகழ்ந்து தள்ளிய ப.சிதம்பரம்
சென்னை: தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ப.சிதம்பரம், பட்ஜெட் குறித்து சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
சென்னை தங்கசாலையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினர் பா சிதம்பரம் எம்பி மற்றும் சிபிஎம் ன் மத்தியகுழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் மற்றும் சிபிஐ யின் மாநில துணைச்செயலாளர் சுப்புராயன் எம்பி மற்றும் தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

ப. சிதம்பரம்
இந்த நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம், "ஒரு முதல்வர் எதற்கு அடையாளமாக நிற்கிறார் என்பது முக்கியம். அந்த அடையாளம் சிறந்ததாக இருந்தால் அம்மனிதர் சிறந்தவர் என அர்த்தம். பதவிக்கு வரும் முன்னர் என்ன சொன்னார் என்பது முக்கியம். அதேபோல பதவிக்கு வந்த பின் என்ன செய்தார் என்பதும் முக்கியம். தேர்தலுக்கு முன்பு, ஸ்டாலினின் சொல்லை வைத்து அவருக்கு வாக்களியுங்கள் என்றேன். இப்போது அவரது செயலை வைத்து வாக்களியுங்கள் என்பேன்.

முதல்வர் ஸ்டாலின்
ஸ்டாலின் முன்பு ஒரு முரசொலி நாளிதழில் கடைநிலை ஊழியன் பணியாற்றி வந்தார். அங்கு அச்சடிக்கப்படும் பேப்பர்களை பார்சல் கட்டிக்கொண்டு தமிழகம் முழுவதும் அனுப்பப்படும் வேலையை அவர் பார்த்து வந்தார். சிறுவயது முதலே அவர் கட்சியில் ஆர்வம் கொண்டிருப்பர். ஸ்டாலின் இயக்கி நடித்த மேடை நாடகமான சங்கே முழங்கு என்ற நாடகத்தில் நான் கருணாநிதி கதாபாத்திரத்தில் நடித்தேன். இதைக் குறிப்பிட்டு ஸ்டாலின் உங்களில் ஒருவன் புத்தகத்தில், நான் முழுவதுமாக தந்தை கருணாநிதி போன்று தன்னை மாற்றிக்கொண்டேன் எனக் குறிப்பிட்டு இருந்தது மிகவும் மகிழ்ச்சி அளித்து இருந்தது.

வேளாண் புரட்சி
மேலும், தமிழகத்தில் ஒரு வேளாண் புரட்சியை உருவாக்கி உள்ளார். கடனில் தத்தளிக்கும் விவசாயிகளைக் காப்பதற்காக ஏராளமான திட்டங்களை வழிவகுத்து அவர்களை முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு சென்றுள்ளார். இந்து அறநிலைத் துறை அமைச்சர் சேகர்பாபு ஆண்டவருக்காகப் பொருட்களைச் சேகரித்து வருகிறார். அவரை ஆண்டவன் பார்த்துக்கொள்வார். மேலும் தமிழகத்தில் இரண்டு பேர் முக்கியமாக வெற்றி பெற வேண்டும் என்று எண்ணியிருந்தேன் அதில் ஒருவர் தமிழக முதலமைச்சராகியுள்ளார் மற்றொருவர் அறநிலை துறை அமைச்சராக இங்கே அமர்ந்துள்ளார்.

உழைக்க வேண்டும்
மேலும் தமிழக பட்ஜெட் பற்றிக் கூறுகையில் கல்வி வளர்ச்சிக்காக இந்தியாவிலேயே அதிகப்படியான தொகையை ஒதுக்கி இருப்பது பாராட்டுக்குரியது. இளைஞர்கள் மு.க.ஸ்டாலின் போல் உழைக்க வேண்டும். மேலும், இன்று முதல்வர் நாற்காலியில் உள்ளார். முதல்வர் பொறுப்பு ஏற்ற பின்னர், அவர் மிகவும் சிறப்பான முறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்" என்றும் அவர் குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications