ராஜகோபாலன் மீது பலமுறை புகாரளித்த மாணவிகள்.. கண்டும் காணாத பத்மா சேஷாத்ரி பள்ளி?.. என்ன நடந்தது?
சென்னை: பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார்கள் அடுக்கப்படுகின்றன. ஆனால் பள்ளி நிர்வாகம் இதில் நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
Recommended Video
பத்ம சேஷாத்ரி பள்ளியில் மாணவிகளுக்கு ஆசிரியர் ராஜகோபாலன் அங்கு படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தது அதிர்ச்சியை அளித்துள்ளது. இது தொடர்பாக அங்கு படித்த மாணவிகள் பலர் இணையத்தில் புகார்களை அடுக்கி வருகிறார்கள்.
முன்னாள் மாணவிகள் பலரும் தாங்கள் அனுபவித்து பாலியல் ரீதியான தொல்லைகளை பட்டியலிட்டு வருகிறார்க்ரல். சென்னை கேகே நகரில் உள்ள பத்மா சேஷாத்திரி பள்ளி மீது இப்படி வைக்கப்படும் புகார்களால் தமிழகமே அதிர்ந்து போய் உள்ளது.

சென்னை
இந்த நிலையில் பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் இப்போது மட்டுமல்ல இதற்கு முன்பே மாணவிகள் பலரிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார்கள் அடுக்கப்படுகின்றன. அதன்படி மாணவி ஒருவர் இணையத்தில் அளித்துள்ள புகாரின் படி, ராஜகோபாலன் , மாணவிகள் இருக்கும் வாட்ஸ் ஆப் குரூப் ஒன்றில் பாலியல் ரீதியான படம் ஒன்றின் லிங்கை இவர் அனுப்பி உள்ளார்.

எப்படி ?
மாணவிகளை மற்ற மாணவர்கள் முன்னிலையில் தவறாக பேசி உள்ளார். மாணவிகளின் உடல் அளவை வர்ணிக்கும் விதமாகவும் மாணவர்கள் முன்னிலையிலும், வகுப்பிலும் பேசி இருக்கிறார். இது தொடர்பாக அந்த மாணவி இணையத்தில் அளித்துள்ள புகாரில், எங்கள் பேட்ச் மட்டுமின்றி, எங்களுக்கு முந்தய பேட்ச் மாணவிகளும் இதேபோன்ற கொடுமைகளை அனுபவித்ததாக கூறப்பட்டுள்ளது.

புகார்
அதோடு அந்த மாணவி இது தொடர்பாக பள்ளியின் தாளாளரிடம் தெரிவித்து இருக்கிறார். ராஜகோபாலன் தவறாக நடந்து கொள்கிறார் என்று சில மாணவிகள் ஒன்றாக சேர்ந்து தாளாளரிடம் புகார் அளித்துள்ளனர். ஆனால் தாளாளர் தரப்பில் இருந்து இது தொடர்பாக எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஏன் விசாரணை கூட நடக்கவில்லை என்று மாணவிகள் தரப்பு கூறியுள்ளது.

நடவடிக்கை இல்லை
அதாவது ராஜகோபாலன் இதற்கு முன்பே இது போன்ற தவறுகளை செய்து இருக்கிறார். ஆனால் அப்போதெல்லாம் புகார் அளித்தும், பள்ளி நிர்வாகம் ஆசிரியர் பக்கமே நின்றது. இப்போது பிரச்சனை இணையம் முழுக்க பரவிய காரணத்தால் சஸ்பெண்ட் செய்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

அரசு நடவடிக்கை
இதனால்தான் போலீஸ் விசாரணைக்கும் இன்று பத்மா சேஷாத்ரி பள்ளி நிர்வாகம் சரியாக ஒத்துழைக்கவில்லை என்று கூறப்படுகிறது. பத்மா சேஷாத்ரி பள்ளி இந்த புகார் மட்டுமின்றி இன்னும் பல அடுக்கடுக்கான புகார்கள் வைக்கப்பட்டு வருகிறது. இதனால் தமிழக அரசு உடனடியாக இதில் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைக்க தொடங்கி உள்ளனர்.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு!












Click it and Unblock the Notifications