5 வருடமாக பாலியல் தொல்லை.. பல "கருப்பு ஆடுகள்" உள்ளனர்.. பத்மா சேஷாத்ரி ராஜகோபால் பரபர வாக்குமூலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பத்மா சேஷாத்ரி பள்ளியில் பல கருப்பு ஆடுகள் இருப்பதாக ஆசிரியர் ராஜகோபாலன் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Recommended Video

    பத்மசேஷாத்திரி பள்ளி ஆசிரியர் Rajagopalan மீது பாலியல் புகார்.. நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    பத்ம சேஷாத்ரி பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லைகள் கொடுக்கப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக இணையத்தில் அடுக்கடுக்காக புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

    முக்கியமாக பத்ம சேஷாத்ரி பள்ளியில் ஆசிரியர் ராஜகோபாலன் அங்கு படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தது அதிர்ச்சியை அளித்துள்ளது. இது தொடர்பாக அங்கு படித்த மாணவிகள் பலர் இணையத்தில் புகார்களை அடுக்கி வருகிறார்கள். போலீசார் தற்போது ராஜகோபாலனிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விசாரணை

    விசாரணை

    போலீசார் இன்று மாலை 4 மணியில் இருந்து ராஜகோபாலனிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதில் ராஜகோபாலன் பல முக்கியமான தகவல்களை வாக்குமூலமாக தெரிவித்துள்ளார். அதன்படி இப்போது இல்லை இதற்கு முன்பில் இருந்தே ராஜகோபாலன் மாணவிகளிடம் இப்படி தவறாக நடந்து கொண்டதாக கூறியுள்ளார்.

    புகைப்படம்

    புகைப்படம்

    கடந்த 5 வருடமாக இப்படி செய்துள்ளதாக அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார். அதிலும் மாணவிகளிடம் அந்தரங்க புகைப்படங்களை அனுப்புவது. அவர்களிடம் தவறாக நடந்து கொள்வது. தவறாக மெசேஜ் அனுப்புவது என்று 5 வருடமாக பல்வேறு மாணவிகளிடம் மோசமாக நடந்து இருக்கிறார். 27 வருடமாக இந்த பள்ளியில் இருக்கிறேன்.

    இப்படித்தான் பேசினார்

    இப்படித்தான் பேசினார்

    நான் பல மாணவிகளிடம் இப்படி பேசி இருக்கிறேன். எனக்கு இந்த பள்ளியில் இப்படி பல கருப்பு ஆடுகள் இருப்பது தெரியும். நான் மட்டும் இல்லை, பலர் இப்படி இருக்கிறார்கள் என்று போலீசாரிடம் ராஜகோபாலன் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.

    நேரடி புகார்

    நேரடி புகார்

    இவர் மீது போலீசாரிடம் இன்னும் நேரடியாக புகார் அளிக்கவில்லை. இணையத்தில் வெளியான புகாரின் அடிப்படையில் மட்டுமே இவர் விசாரிக்கப்பட்டு வருகிறார். இதனால் இவரை இன்னும் முறையாக கைது செய்ய முடியவில்லை.

    ஸ்கிரீன் ஷாட்

    ஸ்கிரீன் ஷாட்

    ஏனென்றால் மாணவிகளிடம் இவர் தவறாக பேசிய பல ஸ்கிரீன் ஷாட்களை டெலிட் செய்துள்ளார். இவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. வலுவான ஆதாரம் சிக்கியதும் நாளைக்குள் இவர் முறையாக கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+