சிலம்பம் என்பது.. வெறும் விளையாட்டு மட்டுமல்ல! 32 ஆண்டுகளாக இலவச பயிற்சி.. யார் இந்த பழனிவேல்
சென்னை: ஒவ்வொரு ஆண்டும் குடியரசுத் தினத்தையொட்டி பத்ம விருதுகள் அறிவிக்கப்படும். அந்த வகையில், 2026ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. தமிழகத்தை சேர்ந்த 5 கலைஞர்களுக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அதில் புதுச்சேரி சிலம்ப கலைஞர் பழனிவேல் கவனம் பெற்றிருக்கிறார்.
புதுச்சேரியின் பூரணாங்குப்பத்தை சேர்ந்த பழனிவேல்.. இப்பகுதி இளைஞர்களுக்கு கடந்த 32 ஆண்டுகளாக இலவசமாக சிலம்பம் கலையை கற்பித்து வருகிறார்.

"சிலம்பம் என்பது வெறும் விளையாட்டு மற்றும் கிடையாது. உடல் ஆரோக்கியம், மன தைரியம், நல்லொழுக்கம் இவற்றை மேம்படுத்தக்கூடிய ஒரு கலை. அதிலும் வீரத்துடன் கூடிய சிலம்பம், பயிற்சியை கற்கும் போது.. இன்னுமே தைரியம் அதிகரிக்கும் இது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை.
இந்த நவீன காலங்களில்.. சிலம்ப பயிற்சி என்பது மிகவும் அரிதாகவே இருக்கிறது. இதற்கான ஆசிரியர்களும் குறைந்த அளவிலே இருக்கின்றனர். எனவே, இந்த கலையை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல.. எங்களை போன்ற ஒரு சிலர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர்" என்று பழனிவேல் சிலம்பம் குறித்து கூறியிருக்கிறார்.
கடந்த 1994 ஆம் ஆண்டு முதல், கிராமத்தில் இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு சிலம்பம் பயிற்சியை இலவசமாக பழனிவேல் கற்றுக் கொடுத்து வருகிறார். அதிலும் கலந்த 24 ஆண்டுகளாக 45 நாட்கள் நடைபெறும் கோடைகால பயிற்சி முகாமை இலவசமாக நடத்தி வருகிறார். இந்த முகாமில் ஆண்டுதோறும் ஏறக்குறைய 100 பேர் வரை பயிற்சி வருகின்றனர் இதுவரை 13க்கும் அதிகமான மாஸ்டர்கள் உருவாகி இருக்கின்றனர்.
ஆண்டு தோறும் சிலம்பக் கலை விழா நடத்தி, பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றுகளும் விருதுகளையும் அளித்து அவர்களை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறார் பழனிவேல்.
டெல்லி, அந்தமான், லட்சத்தீவு போன்ற பல்வேறு இடங்களுக்கு சென்று.. நாட்டுப்புற கலைகளில் சிலம்ப கலையை கற்பித்து வருகிறார். கடந்த 2014 ஆம் ஆண்டு புதுச்சேரி அரசு இவருக்கு நாட்டுப்புற கலைமாமணி விருது வழங்கி சிறப்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications