மொத்த பாகிஸ்தான் ராணுவமும்.. ஸ்டன் ஆகி நிற்கிறதே.. இந்தியாவின் ஒரே மூவால்.. வரலாறே மாறுகிறது
டெல்லி: பாகிஸ்தான் ராணுவத்திற்குள் தற்போது விமானப்படையின் கை ஓங்க தொடங்கி உள்ளதாம். காலம் காலமாக அங்கே தரைப்படைதான் அதிக சக்தி வாய்ந்ததாக இருக்கும்.
அங்கே நாட்டை கட்டுப்படுத்துவதும் தரைப்படைதான். ஆனால் அது இப்போது மாற தொடங்கி உள்ளதாம். பாகிஸ்தானில் யார் ஆட்சியில் இருந்தாலும்.. உண்மையில் அந்நாட்டில் ஆட்சியில் இருப்பது என்னவோ ராணுவம்தான் என்ற கூற்று உள்ளது. கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக பாகிஸ்தான் அரசியல் வரலாற்றில் பிரதமர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவது பாகிஸ்தான் ராணுவம்தான்.
பாகிஸ்தானில் ராணுவ ஜெனரலாக இருப்பவர்கள் சொல்வதே அங்கு சட்டம் என்ற நிலை நிலவி வருகிறது. ஒருவேளை ஜெனரல்கள் சொல்வதை மீறினால் அங்கு ஆட்சியே கவிழும் நிலை கூட ஏற்பட்டு இருக்கிறது. பாகிஸ்தான் வரலாற்றில் இதற்கு முன் இப்படிப்பட்ட ஆட்சி மாற்றங்கள் பல ராணுவம் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பிரதமராக 2018ல் இம்ரான் கான் தேர்வான போதே அவர் தன்னை எதிர்த்த எல்லோரையும் எளிதாக சமாளிக்க காரணம் ராணுவம் என்றே கூறப்பட்டது. அந்நாட்டு ராணுவத்தின் செல்லப்பிள்ளையாகவே இம்ரான் கான் இருந்தார். ராணுவம் சொல்வதை எல்லாம் கேட்கும் தலையாட்டி பொம்மை என்று கூட இம்ரான் கான் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டன. ஆனால் அப்படிப்பட்ட இம்ரான் கானுக்கும் அந்நாட்டு ராணுவத்திற்கும் கடந்த 2022ம் வருடம் ஏற்பட்ட சில மோதல்கள் அவரின் ஆட்சிக்கே எதிராக திரும்பியது.

ராணுவத்தின் அழுத்தம் காரணமாக மெஜாரிட்டியை இழந்து இம்ரான் ஆட்சி கவிழ அதன்பின் ஊழல் புகாரில் இம்ரான் கான் சிறைக்கும் சென்றார்.
ஆட்சியை பலமுறை கவிழ்த்த தரைப்படை
இப்படி பாகிஸ்தான் ஆட்சியை அங்கே தரைப்படைதான் கட்டுப்படுத்தி வந்தது. ஆனால் தற்போது பாகிஸ்தானின் விமானப்படைக்கு அந்த அதிகாரம் வர தொடங்கி உள்ளதாம்.
இந்தியாவுடன் நடந்த மோதலில் தரப்படைக்கு வேலையே இல்லை. விமானப்படைதான் பெரிதாக எல்லா தாக்குதல்களையும் மேற்கொண்டது. இந்தியாவும் பாகிஸ்தானின் விமானப்படையேயே குறி வைத்தது. இந்திய ஏவுகணைகளால் மூன்று விமானப்படை தளங்கள் தாக்கப்பட்டதாக பாகிஸ்தான் இராணுவமே அறிவித்தது. 3 விமானப்படை தளங்கள் இந்திய ஏவுகணைகளால் தாக்கப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்தது. நூர் கான் தளம், முரித் தளம் மற்றும் ஷோர்கோட் தளம் ஆகியவை தாக்கப்பட்டது என்று பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் அகமது ஷெரீப் சவுத்ரி அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர்.
இப்படி பாகிஸ்தான் விமானப்படைதான் இந்த தாக்குதலில் லைம்லைட்டில் இருந்தது. இதனால் கொஞ்சம் கொஞ்சமாக பாகிஸ்தானின் ராணுவ பவர் விமானப்படை பக்கம் செல்ல தொடங்கி உள்ளதாம். அதாவது தரைப்படை தளபதி அசிம் முனீர் விட விமானப்படைத் தளபதி ஜாகீர் அகமது பாபருக்கு அதிக பவர் வர தொடங்கி உள்ளதாம்.
ஏனென்றால் இனி பாகிஸ்தான் ராணுவம் செய்யப்போகும் ராணுவ செலவுகள், கொள்முதல் எல்லாம் பெரும்பாலும் விமானப்படைக்கே இருக்கும் என்பதால் அங்கே விமானப்படை முடிவுகள் ஓங்கி உள்ளது. இதனால் வரலாற்று ரீதியாக இத்தனை காலம் கோலோச்சி இருந்த தரைப்படை இந்தியாவின் தாக்குதல்கள் காரணமாக சரிவை நோக்கி சென்று.. இப்போது விமானப்படை அங்கே அரசியலை கட்டுப்படுத்தும் சக்தியாக உருவெக்க தொடங்கி உள்ளதாம்.
-
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
ஜப்பானில் பாகிஸ்தான் கட்டிய மசூதி.. இடிக்க அதிரடியாக உத்தரவிட்ட அதிகாரிகள்.. என்ன காரணம்? -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம்












Click it and Unblock the Notifications