அமெரிக்காவின் கான்ட்ராக்டை மீறி F-16 ஜெட்டை பயன்படுத்திய பாகிஸ்தான்.. தப்பு பண்ணிட்டியே சிங்காரம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாகிஸ்தான் ராணுவம் அமெரிக்காவின் ஒப்பந்த கட்டுப்பாடு ஒன்றை மீறி அமெரிக்காவிடம் வாங்கிய F-16 ஜெட்டை பயன்படுத்தியதாக புகார் வைக்கப்பட்டு உள்ளது.

இந்தியா பாகிஸ்தான் இடையே அறிவிக்கப்படாத போர் மூண்டு உள்ளது. வியாழன் இரவு மற்றும் வெள்ளி அதிகாலையில் இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. முன்னதாக ஜம்மு விமான நிலையம், சம்பா, ஆர்எஸ் புரா, ஆர்னியா உள்ளிட்ட பகுதிகளை நோக்கி பாகிஸ்தானில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் பாகிஸ்தானில் இருந்து வந்த 8 ஏவுகணைகளை தடுத்து எஸ்400 சுதர்சன் சக்ரா தடுப்பு அமைப்புகள் முறியடித்தது.

pakistan Jammu Kashmir

பாகிஸ்தானின் 8 ஏவுகணைகள் அடுத்தடுத்து தடுக்கப்பட்டு உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதான்கோட் விமான தளத்தில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயன்றது. இதற்கு இந்திய விமானப்படை பதிலடி கொடுத்துள்ளது. இதற்காக multi-layered air defence network முறை தடுப்பு நடவடிக்கை பயன்படுத்தப்பட்டு உள்ளது.

இதற்கு இந்தியா கடுமையான பதிலடியை தந்துள்ளது. அதன்படியே பாகிஸ்தானின் இருதயத்தில் அடித்தது இந்தியா. பாகிஸ்தானின் பஞ்சாப்பில் உள்ள லாகூரில் இந்தியா கடுமையான தாக்குதல்களை நடத்தியது. லாகூரில் ஏவுகணை மூலம் இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தியது. இஸ்லாமாபாத்தில் இந்தியா ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது. இது பாகிஸ்தானின் தலைநகர் ஆகும். பாகிஸ்தானின் பஞ்சாப்பில் உள்ள லாகூரில் இந்தியா கடுமையான தாக்குதல்களை நடத்தியது. லாகூரில் ஏவுகணை மூலம் இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தியது.

நேற்று இந்த தாக்குதல்களில் இந்திய எல்லைக்குள் அதாவது ஜம்மு மற்றும் பஞ்சாப் உள்ளே நுழைய முயன்ற ஒரு AWACS விமானம் காலி செய்யப்பட்டது. பாகிஸ்தானின் 3 விமானங்கள் நேற்று ஏவுகணைகள் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டு உள்ளன . இரண்டு F-16 விமானங்கள் மற்றும் ஒரு JF-17 போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் AWACS விமானம் ஒன்றும் காலி செய்யப்பட்டது. இதில் சுட்டு வீழ்த்தப்பட்ட இரண்டு F-16 விமானங்கள் அமெரிக்காவால் பாகிஸ்தானுக்கு விற்பனை செய்யப்பட்ட விமானம் ஆகும்.

ஒப்பந்தம்

இதை விற்பனை செய்யும் போது பாகிஸ்தானிடம் அமெரிக்கா முக்கிய ஒப்பந்தம் ஒன்றை செய்தது. இந்த விமானத்தை தாலிபான் உள்ளிட்ட அண்டை நாட்டு தீவிரவாதிகளை ஒடுக்க, உள்நாட்டு தீவிரவாதத்தை ஒடுக்க மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று ஒப்பந்தம் செய்தது. இந்தியா F-16 விமானங்களை பாகிஸ்தானுக்கு வழங்க கூடாது என்று கூறியதால் இந்தியாவை சமாதானம் செய்ய இந்த கட்டுப்பாடு பாகிஸ்தானுக்கு விதிக்கப்பட்டது.

ஆனால் நேற்று இந்தியாவை தாக்குவதற்கு பாகிஸ்தான் ராணுவம் அமெரிக்காவின் ஒப்பந்த கட்டுப்பாடு ஒன்றை மீறி அமெரிக்காவிடம் வாங்கிய F-16 ஜெட்டை பயன்படுத்தியதாக புகார் வைக்கப்பட்டு உள்ளது. அதாவது தீவிரவாதத்தை ஒடுக்க பாகிஸ்தான் வாங்கிய விமானங்களை இந்தியாவை தாக்க அந்த நாடு பயன்படுத்தி உள்ளது. இது கண்டிப்பாக அமெரிக்காவிற்கு கோபத்தை உண்டாக்கும். அமெரிக்கா இதற்கு கடுமையான எதிர்வினைகளை தர வாய்ப்புகள் உள்ளன.

ஒப்பந்தம் மீறல் விவகாரம் இது போன்ற நேரங்களில் கடுமையாக கவனிக்கப்படும். இதனால் பாகிஸ்தான் மீது அமெரிக்கா கடுமையான அத்துமீறல் நடவடிக்கைகளை எடுத்தாலும் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+