அணு ஆயுதத்தையே ஏந்தி செல்லும்.. போரில் பாகிஸ்தான் ஏவிய ஏவுகணையை தடுத்த எஸ்.400.. வெளியான சீக்ரெட்
சென்னை: கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த இந்தியா - பாகிஸ்தான் மோதலில் இந்தியா மீது பாகிஸ்தான் அணு ஆயுதத்தையே ஏந்தி செல்லும் திறன் கொண்ட ஏவுகணை ஒன்றை ஏவியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை இந்தியாவின் எஸ் .400 ஏவுகணை தடுப்பு அமைப்பு தடுத்து அழித்துள்ளது.
இந்திய ராணுவத்தின் மேற்கு கமெண்ட் பிரிவு அதிகாரிகள் வெளியிட்ட வீடியோ மூலம் இது உறுதியாகி உள்ளது. பாகிஸ்தான் தனது தாக்குதலில் சீன ட்ரோன்களை பாகிஸ்தான் பயன்படுத்தியதாகச் சொல்லப்பட்ட நிலையில், சீன ட்ரோன்களுடன் சேர்த்து துருக்கி ட்ரோன்களையும் பாகிஸ்தான் பயன்படுத்தியது. 36 இடங்களைக் குறிவைத்து சுமார் 300 முதல் 400 ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டன. இந்தியப் பாதுகாப்புப் படை கைனடிக் (kinetic) மற்றும் நான் கைனடிக் (non-kinetic) முறையில் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது. இவை துருக்கி மற்றும் சீனாவின் டிரோன்கள், என்று இந்திய ராணுவம் தெரிவித்தது.
இந்த தாக்குதலில் பாகிஸ்தானின் ஃபத்தா-1 ஏவுகணையை தடுத்து நிறுத்தியது இந்தியா பாதுகாப்பு படை. பாகிஸ்தானின் பாதுகாப்புத் துறையால் உருவாக்கப்பட்டது. இது பாகிஸ்தான் இராணுவ ஸ்ட்ராட்டஜிக் படைகள் கட்டளையின் (ASFC) கீழ் நேரடியாக இயக்கப்படுகிறது.

இதை பாகிஸ்தான் தனது பெருமைக்குரிய ஏவுகணையாக கருதுகிறது. முக்கிய இலக்கை நோக்கிச் சென்ற ஃபத்தா-1 ஏவுகணை தடுத்து அழிக்கப்பட்டது. மேற்குப் பகுதியில் இந்திய வான் பாதுகாப்புப் படையினரால் இடைமறித்து அழிக்கப்பட்டது. இந்த சம்பவம் எங்கே நடந்தது என்பது பற்றிய விவரங்கள் ராணுவ பாதுகாப்பு கருதி வெளியிடப்படவில்லை. மேற்குப் பகுதியில் முக்கிய இலக்கை நோக்கிச் சென்ற ஃபத்தா-1 ஏவுகணை அழிக்கப்பட்டதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானில் இருந்து வந்த ஏவுகணைகளை தடுத்து எஸ்400 சுதர்சன் சக்ரா, Akash Missile System உள்ளிட்ட தடுப்பு அமைப்புகள் முறியடித்தது.
இந்த நிலையில்தான் பாகிஸ்தான் Shaheen எனப்படும் தனது ஏவுகணை வகையை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. பாகிஸ்தானிடம் Shaheen 1 முதல் Shaheen 3 வரை உள்ளது. இதில் எந்த ஏவுகணையை அந்த நாடு பயன்படுத்தியது என்ற விவரம் வெளியாகவில்லை. இது நீண்ட தூரம் செல்ல கூடிய பாலிஸ்டிக் வகை ஏவுகணை ஆகும். அணு ஆயுதங்களை ஏந்தி செல்லும் திறன் கொண்டது.
ஆனால் அணு ஆயுதம் இல்லாமல் இதை வழக்கமான போர் ஆயுதங்களை வைத்து பாகிஸ்தான் ஏவியதாக கூறப்படுகிறது. இதை இந்தியாவின் S-400 Triumf தடுத்து அழித்தது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தானின் தாக்குதலை ஏற்கனவே எதிர்பார்த்த இந்தியா.. multi-layered air defence network எனப்படும் பல அடுக்கு வான் பாதுகாப்பு வலையமைப்பு முழுமையாக செயல்படுத்தி பாகிஸ்தானின் தாக்குதல்களை முறியடித்தது. அதாவது போர் விமானங்கள் ரோந்து செல்வது.. ஹெலிகாப்டர்கள் தாழ்வாக ரோந்து செல்வது, ட்ரோன்கள் ஏவுகணைகளுடன் தயாராக இருப்பது, எஸ் 400 , Akash Missile System போன்ற ஏவுகணை மற்றும் ஏவுகணை மறிப்பு சிஸ்டங்கள் தயார் நிலையில் இருப்பது என்று பல கட்ட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அது எல்லாம் கைகொடுத்த காரணத்தால் பாகிஸ்தானின் ஏவுகணைகளை மறித்து அழிக்க முடிந்தது.












Click it and Unblock the Notifications