என்னய்யா நடக்குது.. 100 வருட ரெக்கார்ட் பிரேக்.. பாம்பனில் புரட்டி எடுத்த மழை.. வெதர்மேன் ஆச்சர்யம்!
சென்னை: பாம்பன் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை காரணமாக கடந்த 100 வருடங்களில் இருந்த மழை ரெக்கார்ட் முறியடிக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் குறிப்பிட்டுள்ளார் .
தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. நேற்று சென்னையில் இரவு நேரத்தில் நல்ல கனமழை பெய்தது. அதேபோல் டெல்டா மாவட்டங்கள் உட்பட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.
இந்த நிலையில் வங்க கடலில் தற்போது மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதனால் தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.

என்ன போஸ்ட்
இந்த நிலையில் நேற்று பெய்த மழை தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது இணைய பக்கத்தில் செய்துள்ள போஸ்டில், இந்தியாவில் தென்மேற்கு பருவமழை காலத்தில் மிகவும் வறட்சியான பகுதி என்றால் அது ராமநாதபுரத்தில் இருக்கும் பாம்பன்தான். பாம்பனில் கடந்த ஆகஸ்ட் மாதம் பெய்த சராசரி மழை அளவு வெறும் 15 மிமீதான்.

வறட்சி
அதேபோல் தென்மேற்கு பருவமழை காலமான ஜூன் 1 முதல் செப்டம்பர் 30 வரையிலும் பாம்பன் பகுதியின் சராசரி மழை அளவு 66 மிமீ ஆக மட்டுமே இருந்து வந்துள்ளது. தூத்துக்குடியோடு சேர்த்து இந்த பாம்பன் பகுதிதான் இந்தியாவிலேயே தென்மேற்கு பருவமழை காலத்தில் அதிக வறட்சியான பகுதியாகும்.

ஆனால் நேற்று
ஆனால் பாம்பன் பகுதியில் எப்போதும் வடகிழக்கு பருவமழையின் போது நன்றாக மழை பெய்யும். சராசரியாக 1000 மிமீ வரை இங்கு பெய்யும். பாம்பன் பகுதியின் 90% மழை அக்டோபர் முதல் டிசம்பர் வரை பெய்யும். தென்மேற்கு பருவமழை சமயத்தில் இங்கு மிக மிக அரிதாகவே மழை பெய்யும்.

எவ்வளவு விசித்திரம்
ஆனால் நேற்று பாம்பன் - மண்டபம் பகுதியில் மிகவும் விசித்திரமான மழை இரவு நேரத்தில் பெய்தது. இன்று சில மணி நேரத்தில் 121.88 மிமீ மழை பாம்பன் பகுதியில் பெய்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் இரண்டு பெரிய ரெக்கார்ட்களை இந்த மழை முறியடித்து இருக்கிறது. பாம்பன் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த 121.88 மிமீ மழை இதற்கு முன் ஒரே நாளில் பெய்த 73.9 மிமீ மழையை முறியடித்து உள்ளது.
Recommended Video

ஆகஸ்ட் மாத மழை
1937 ஆகஸ்ட் 31ம் தேதி பெய்த 73.9 மிமீ மழையை கடந்த 24 மணி நேர 121.88 மிமீ மழை முறியடித்து உள்ளது. இதற்கு முன் ஆகஸ்ட் மாதத்தில் அதிகபட்சம் மழை 1910ல் பதிவானது. இதன் அளவு 103.6 மிமீ ஆகும். ஆனால் 100 வருடங்களுக்கு முன் பதிவான இந்த ஒரு மாத ரெக்கார்ட்டை சில மணி நேரத்தில் பாம்பன் மழை முறியடித்து உள்ளது, என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் குறிப்பிட்டுள்ளார்.
-
தமிழக நிதிநிலை கவலைக்கிடம்?.. கடன் வளர்ச்சி 14.3%.. வெள்ளை அறிக்கை தகவல் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு












Click it and Unblock the Notifications