சிறார்களுக்கான பான் கார்டு.. 18 வயதுக்கு முன்பே பான் அட்டை பெறலாமா? அப்ப ஆதார் கார்டும் வாங்கலாமா?
சென்னை: 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பான் கார்டுகள் கட்டாயமாகும்.. அதேசமயம், 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு பான் கார்டுகள் அவசியமா?
பான் கார்டுகளை பொறுத்தரை, ரேஷன் கார்டுகளை போல ஒவ்வொரு குடிமகனுக்கும் தவிர்க்க முடியாத ஆவணமாகிவிட்டது.. வரி ஏய்ப்புகளை தடுப்பதில், பான் கார்டுகள் முக்கிய பங்காற்றுகின்றன..

அத்துடன், நாட்டிலுள்ள மொத்த வரி வருவாயை கணக்கிடுவதிலும் பான் கார்டு பிரதான கருவியாக வியங்குகிறது. இது ஒட்டுமொத்த வரி பங்களிப்புகளை மதிப்பிடுவதற்கும் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கும் உதவுகிறது..
வருமான வரி: சுருக்கமாக சொல்ல வேண்டுமானால்,அனைத்து வரி பரிவர்த்தனைகள், வருமானத்தின் மீதான வருமானம், TDS/TCS கிரெடிட்கள், கடித பரிமாற்றங்கள், குறிப்பிட்ட பரிவர்த்தனைகளை இணைக்க பேருதவி புரிவது இந்த பான் கார்டுகள்..
அதைவிட முக்கியமாக, கடன் வாங்குவது வங்கி கணக்கு தொடங்குவது, பங்கு வர்த்தக கணக்கு தொடங்குவது, வீட்டுக்கடன் வாங்குவது, மோட்டார் வாகனக்கடன் வாங்குவது போன்ற நிதி தொடர்பான வேலைகளில் பான் கார்டுகள் முக்கிய பங்காற்றி வருகின்றன..
இந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பான் கார்டை 18 வயது நிறைவடைந்த நபர்கள் மட்டுமல்லாது, 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் பெறலாம். அவ்வளவு ஏன்? 6 மாத குழந்தைக்கும், பான் கார்டுகளை முன்கூட்டியே பதிவு செய்து வைத்து கொள்ளலாம்.
பான் கார்டுகள்: குழந்தைகளால் நேரடியாக தங்களது பெயரில் பதிவு செய்து கொள்ள முடியாது என்பதால், பெற்றோர்கள் அல்லது பாதுகாவலரின் உதவியுடன் அவர்களின் சார்பாக விண்ணப்பிக்கலாம். அப்படி 18 வயதுக்கு கீழுள்ள நபர்கள் பான் கார்டுக்கு விண்ணப்பிக்கும்போது, பெற்றோர் அல்லது பாதுகாவலரின் அடையாள சான்றிதழ், முகவரி சான்றிதழை காட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
அதேபோல, அடையாளச் சான்றாக பெற்றோர் / பாதுகாவலரின் டிரைவிங் லைசென்ஸ், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, இந்திய கடவுச்சீட்டு போன்றவற்றில் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தலாம். முகவரி சான்றாக பெற்றோர் / பாதுகாவலரின் டிரைவிங் லைசென்ஸ், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, தொலைபேசி கட்டண ரசீது, கடவுச்சீட்டு, வீட்டு வரி ரசீது, ஆதார் கார்டு இவைகளில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தலாம்.
எப்படி விண்ணப்பிப்பது தெரியுமா? இந்த பான் கார்டினை, ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.. NSTL என்ற வெப்சைட்டில், https://www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html என்ற இணைப்பை கிளிக் செய்ய வேண்டும்..
இப்போது ஸ்கிரீனில் தோன்றும் விண்ணப்பத்தை பிழையின்றி பூர்த்தி செய்ய வேண்டும். பிறகு மைனர் வயது சான்றிதழ், பெற்றோரின் போட்டோ உள்ளிட்ட பிற முக்கிய ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். பெற்றோரின் கையொப்பங்களை பிறகு தனியே பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அதேபோல, குழந்தைகளுக்கும் இப்போதெல்லாம் ஆதார் எடுக்க சொல்கிறார்கள்.. குழந்தை ஆதார் அட்டை அதாவது "பால் ஆதார்" (Baal Aadhaar) அல்லது நீல ஆதார் அட்டை என்பார்கள்.
ஆதார் மையம்: இந்த ஆதார் கார்டு பார்ப்பதற்கு நீல கலரிலேயே இருக்கும்.. இதிலும் 12 இலக்க நம்பர்கள் தரப்பட்டிருக்கும்.. நீல ஆதார் அட்டை பெற வேண்டுமானால், நேரடியாக ஆதார் மையத்துக்கு மட்டுமே செல்ல வேண்டும்.
பிறப்பு சான்றிதழ் அல்லது மருத்துவமனை டிஸ்சார்ஜ் சீட்டு, பெற்றோரின் ஆதார் அட்டைகள் போன்றவற்றை ஆவணங்களாக கொண்டு செல்ல வேண்டும்,.. ஆதார் மையத்திலேயே விண்ணப்ப படிவத்தை நிரப்பி தந்து, ஆவணங்களையும், குழந்தையின் போட்டோவையும் தர வேண்டும்.
விண்ணப்பங்கள்: இதெல்லாம் சரிபார்க்கப்பட்டு, 60 நாட்களுக்குள் நீல நிற ஆதார் அட்டை வழங்கப்படும். பிறந்த குழந்தைக்கு கூட நீல நிற ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால், இதற்கு குழந்தையின் பிறந்த சான்று, மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ரசீதுகள் கட்டாயம் தேவைப்படும். ஆன்லைனிலும் இந்த பால் ஆதார் கார்டுக்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ள முடியும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications