பான் கார்டு.. வெறும் 110 ரூபாய் கட்டணம்.. ஜஸ்ட் 2 நிமிஷத்தில் இதை செய்துவிடலாம்.. இல்லாட்டி சிக்கல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆதார் கார்டு செயலிழந்து விட்டால் எப்படி மீட்க வேண்டும் தெரியுமா? ஆதார் அட்டை போலவே பான் அட்டையும் செயலிழந்துவிடுமா? பான் அட்டையில் தவறு இருந்தால் அதை எப்படி சரி செய்ய வேண்டும் தெரியுமா?

இந்திய குடிமக்களுக்கு ஆதார் அட்டையை, அடையாள அட்டையாக பயன்படுத்தலாம். பான் போன்ற பிற அடையாள அட்டைகளுடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளதால், ஆதார் அட்டை மெதுவாக நாடு முழுவதும் ஏற்றுக்கொள்ளப்படும் ஒரே அட்டையாக இன்று மாறியுள்ளது.
ஆதார் அட்டையை அடையாள சான்றாகவும், முகவரி சான்றாகவும், வயது சான்றாகவும், எந்த அரசு பணிக்கும் விண்ணப்பிக்கும் போதும் பயன்படுத்தலாம். அதேபோல, இது அனைத்து அரசு தொடர்பான சேவைகள் மற்றும் திட்டங்களுக்கும் பயன்படுத்தப்படலாம்.

ஆதார் முக்கியத்துவம்: ஆதார் அட்டையின் மிக முக்கியமான பயன்களில் ஒன்று, உரிமையாளருக்கு அவர்/அவள் தகுதியுடைய அனைத்து அரசாங்க மானியங்களையும் பெற இது அனுமதிக்கிறது. பல்வேறு மானியங்கள் அல்லது திட்டங்களைப் பெறுவதற்கு அவர்கள் தங்கள் ஆதார் அட்டையை மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். வங்கிக் கணக்கு தொடங்கவும் ஆதார் அடிப்படை தேவையாகிவிட்டது..

PAN card corrections and do you know that your Aadhaar Card also expires how to fix

ஆதார் கார்டு போலவே, பான் கார்டும் தவிர்க்க முடியாதது.. ஆனால், ஆதார் கார்டு போலவே, பான் கார்டுகளும் காலாவதியாகுமா என்ற கலக்கம் பலருக்கு உள்ளது.. இதற்கு அச்சப்படவே தேவையில்லை.. ஒருமுறை பான் கார்டு உருவாக்கப்பட்டால், அது வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும்.. அதை மீண்டும் கட்ட வேண்டிய அவசியமில்லை. அதேசமயம், 2 பான் கார்டு வைத்திருந்தால் 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது.

அதேபோல, பான் கார்டு நம்பரை மாற்ற முடியாது. இருந்தாலும், பான் கார்டில் உள்ளிடப்பட்ட பிற தகவல்களை பான் கார்டு வைத்திருப்பவரால் புதுப்பிக்க முடியும்.

புதிய பான் கார்டு விண்ணப்பிக்க மற்றும் திருத்தம் செய்ய

http://www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html என்ற அரசின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்திற்கு செல்ல வேண்டும். இப்போது அந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள "Application Type" என்ற ஆப்ஷனை கிளிக் செய்து 'Changes or Correction in Existing PAN card' என்பதைத் தேர்வு செய்யவும்.

பிறகு, பான் கார்டு திருத்தம் செய்வதற்கான அடிப்படை விவரங்களை இந்தப் பக்கத்தில் பூர்த்தி செய்யவும். பின்னர் உங்கள் இ-மெயில் எண்ணிற்கு டோக்கன் எண் அனுப்பபடும். அதை சேமித்து வைக்கவும். உங்கள் டோக்கன் எண் இ-மெயிலுக்கு அனுப்பப்படும் என்பதால் இ-மெயில் ஐடி-யை சரியாக கொடுக்க வேண்டும். இதையடுத்து, விண்ணப்ப பக்கம் சென்று அடையாள சான்று, முகவரி சான்று மற்றும் டிஜிட்டல் கையெழுத்து உள்ளிட்ட விவரங்களைப் பதிவேற்ற வேண்டும்.

கட்டணம்: விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்கள் எல்லாம் பூர்த்தி செய்தப் பின் படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு சேவை கட்டணமாக ரூ.110 செலுத்த வேண்டும். ஆன்லைனில் பணம் செலுத்தி படிவத்தை சமர்ப்பித்தால் உங்கள் பான் கார்டில் திருத்தம் செய்யப்பட்டு புதிய அட்டை வீட்டு முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

பான்கார்டில் உள்ள தவறுகளை திருத்தம் செய்வது எப்படி:

1. மத்திய அரசின் https://www.pan.utiitsl.com/ என்ற இணைய தளத்திற்கு செல்ல வேண்டும்
2. இந்த வெப்சைட்டின் கீழே, Change/Correction in PAN Card என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

3. இதில் 3 ஆப்ஷன்கள் இருக்கும், அதில் Apply for Change / Correction in PAN Card details என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

4. உங்களுடை பான் எண்-ஐ 2 முறை கொடுத்து உறுதி செய்யும் முன்பு, முதல் வரியில் physical மற்றும் Digital என்ற இரு ஆப்ஷன் இருக்கும்.

5. இதில் Digital ஆப்ஷனை தேர்வு செய்து அதன் பின் Aadhaar based e-KYC option என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

6. இப்போது, உங்கள் பெயர் முதல் தாய், தந்தை பெயர் என அனைத்தையும் கொடுத்து மாற்றிக்கொள்ள முடியும்.

7. இறுதியாக, ஆதார் எண் கொடுத்து, ஆதாரில் இருக்கும் பெயரை பதிவிட்டு அடுத்த படிக்கு செல்ல வேண்டும்.

8. இதன் பின்பு கொடுக்கப்பட்ட விபரங்களை உறுதி செய்து SUBMIT கொடுக்க வேண்டும்.

ஒருசிலர் தெரியாமல் 2 பான் கார்டுகளை வைத்திருக்க நேரிடுகிறது.. மேலும் சிலர் மோசடிக்காக பல பான் கார்டுகளை பயன்படுத்துகிறார்கள். எனினும் இது சட்டப்படி தவறாகும்.. உடனடியாக அதை ஒப்படைத்துவிட வேண்டும்.. இந்த பான் எண்ணை எப்படி ஒப்படைப்பது தெரியுமா? ஆன்லைன் + ஆஃப்லைன், இந்த இரண்டிலுமே பான் கார்டை சரண்டர் செய்ய விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் சரண்டர் செய்யும் முறை: PAN மாற்றம் கோரிக்கை விண்ணப்ப படிவத்தை முதலில் நிரப்ப வேண்டும். அதன்மேல், நீங்கள் பயன்படுத்தும் PAN எண்ணை பதிவிட வேண்டும்.. ITEM NO: 11ல், இரண்டாவது பான் எண்ணின் விவரங்களை தர வேண்டும். அதன் நகலையும் இணைத்து, NSDL வெப்செட்டிற்கு சென்று சமர்ப்பிக்க வேண்டும்.

ஆஃப்லைனில் சரண்டர் செய்யும் முறை: இதற்கு படிவம் 49A ஐ நிரப்ப வேண்டும். சமர்ப்பிக்க வேண்டிய பான் கார்டின் விவரங்களை படிவத்தில் குறிப்பிட வேண்டும்.. இந்த படிவத்தை உங்கள் அருகிலுள்ள UTI அல்லது NSDL TIN வசதி மையத்தில் சமர்ப்பித்துவிட வேண்டும்.. பிறகு அதற்கான ஒப்புகை ரசீதை வைத்துக்கொள்ளுங்கள்... உங்கள் அதிகார வரம்பில் உள்ள மதிப்பீட்டு அதிகாரிக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும்..

அதில், வருமான வரித் துறையின் வெப்சைட்டில், உங்கள் பகுதியின் அதிகார வரம்பு அதிகாரி யார்? என்பதை அறியலாம்.. இந்த கடிதத்தில், உங்கள் பான் கார்டில் உள்ள அனைத்து தகவல்களையும் தெரிவிப்பதுடன், சரணடைய வேண்டிய நகல் பான் கார்டின் விவரங்களையும் குறிப்பிட வேண்டும். டூப்ளிகேட் கார்டின் நகல் மற்றும் NSDL TIN இலிருந்து பெறப்பட்ட ஒப்புகை ரசீதையும் சான்றளித்து அதில் சமர்ப்பிக்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+