விந்துவை குடிக்கும் சிறுவர்கள்.. சாம்பியா மக்களின் நம்பிக்கையை பாருங்க.. அதிர வைக்கும் பின்னணி
சென்னை: பப்புவா நியூ கினியாவில் உள்ள பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள் தங்களின் ஆண் குழந்தைகளுக்கு உயிரணுக்களை குடிக்க வைத்து வளர்க்கும் வினோத பழக்கத்தை பின்பற்றி வருகின்றனர். இவர்கள் ஏன் இப்படி செய்கின்றனர்? பின்னணி என்ன? என்பது பற்றிய விபரம் வருமாறு:
உலக நாடுகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் ஒவ்வொரு கலாசாரம், பாரம்பரியத்தை பின்பற்றி வாழ்ந்து வருகின்றனர். இதில் சிலரது நடைமுறைகள் என்பது மிகவும் வித்தியாசமாக இருக்கும். குறிப்பாக பழங்குடியினத்தை சேர்ந்த மக்கள் இன்னும் கூட தங்களின் மூதாதையோர் பின்பற்றிய பழக்க வழக்கங்களை அப்படியே பின்பற்றி வருகின்றனர்.

இந்தியாவில் வசிக்கும் பழங்குடியின மக்களில் பெரும்பாலானவர்கள் நாகரீகமான வாழ்க்கைக்கு மாறிவிட்டனர். ஆனால் வெளிநாடுகளில் குறிப்பாக ஆப்பிரிக்கா உள்ளிட்ட ஏழை நாடுகளில் வசிக்கும் சில பழங்குடியினத்தவர்கள் இப்போது கூட ஆடை அணியாமல் இருக்கின்றனர். மேலும் தங்களின் முன்னோர்கள் காட்டியப்படி வனப்பகுதிக்குள் வேட்டையாடி வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.
உயிரணுக்களை குடிக்க வைத்து: அந்த வகையில் தான் பசிபிக் பெருக்கடலில் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள தீவு நாடான பப்புவா நியூ கினியாவில் வசிக்கும் சாம்பியா பழங்குடியினத்தவர்கள் பின்பற்றும் பழக்கம் என்பது அனைவரையும் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் உள்ளது. அதாவது இந்த பழங்குடியினத்தை சேர்ந்த சிறுவர்கள் உயிரணுக்களை (விந்து) குடிக்க வைத்து வளர்க்கப்படுகின்றனர். இந்த சாம்பியா பழங்குடியின மக்கள் பப்பூவா நியூ கினியாவின் கிழக்கு ஹைலேண்ட்ஸ் மாகாணத்தில் கூட்டம் கூட்டமாக இவர்கள் வாழ்ந்து வருகின்றனர். வேட்டையாடுதல், விவசாயம் செய்வதை தொழிலாக கொண்டுள்ளனர். இந்த மக்களிடம் தான் இந்த வினோத பழக்கம் இருக்கிறது.
காரணம் என்ன: இந்த பழங்குடியினத்தை சேர்ந்த மக்கள் தங்களது சமுதாயத்தில் உள்ள ஆண்களை மிகவும் வலிமையானவர்களாக வளர்க்க விரும்புகின்றனர். இதற்காக அவர்கள் சில விஷயங்களை தொடர்ந்து பின்பற்றி வருகின்றனர். அதில் ஒன்று தான் உயிரணுக்களை (விந்தணுக்கள்) குடித்தல். அதாவது உயிரணுக்களை சிறுவர்கள் குடிப்பதன் மூலம் அவன் தனது இளமை காலத்தில் ஆண்மை தன்மை அதிகம் உள்ள நபராக இருப்பார் என அவர்கள் நம்புகின்றனர்.
ஓரினச்சேர்க்கை: இதற்காக சாம்பியா பழங்குடியினத்தில் பிறக்கும் ஆண் குழந்தைகள் 6 வயது வரை மட்டுமே தாயுடன் இருப்பார்கள். அதன்பிறகு 6 முதல் 15 வயது வரை அவர்கள் தாய் உள்பட குடும்பத்தில் இருக்கும் பெண்களிடம் இருந்து பிரிந்து செல்வார்கள். பெண்கள் என்பவர்கள் ஆண்களுக்கு எதிரியாக இருப்பார்கள் என இவர்கள் நம்புகின்றனர். இதனால் தான் பெண்களை விட்டு சிறுவர்களை தனியே அழைத்து செல்கின்றனர். மேலும் ஒரு ஆண் எப்படி பெண் துணையின்றி வீரமாக வாழ்வது என்பது இந்த காலத்தில் கற்றுக்கொடுக்கப்படும்.
இந்த பருவ காலத்தில் சிறுவர்கள் தங்களின் தந்தை மற்றும் உறவுக்கார ஆண்களுடன் தனியே வசிப்பார்கள். அப்போது தான் சிறுவர்களுக்கு உயிரணுக்கள் கொடுக்கப்படுகிறது. சில வேளைகளில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட வைக்கின்றனர்.
6 கட்டங்களாக விழா: இது அங்கு விழா போன்று நடத்தப்படுகிறது. மொத்தம் 6 கட்டங்களாக இது நடக்கிறது. இதில் முதல் கட்டம் மூக்கின் நாசிப்பகுதியில் குச்சியை சொருகுதல் என்ற நடைமுறையாகும். அதாவது மூக்கின் நாசிப்பகுதியில் குச்சியை வைத்து துளையிடுவார்கள். அதில் இருந்து ரத்தம் கொட்டும்போது அதிக வலி ஏற்படும். இது மிகவும் கொடுமையானது. இந்த வலி என்பது ஒருவனுக்கு அனைத்து வலிகளையும் தாங்கும் திறனை அளிக்கும் என அவர்கள் நம்புகின்றனர்.
போர்வீரன் மனநிலை: அதன்பிறகு அடுத்தடுத்து பிற கொடூரங்கள் சிறுவர்களுக்கு அரங்கேற்றம் செய்யப்படுகிறது. இந்த பயிற்சி என்பது வலி மற்றும் சகிப்புத்தன்மையை அவர்களுக்கு வழங்கும். இதன்மூலம் போர் வீரனுக்கான மனநிலையை இளம்வயதிலேயே தங்கள் இனத்தை சேர்ந்த இளைஞர்கள் பெறுவார்கள் என நம்புகின்றனர். இதனால் இதுபோன்ற பழக்கத்தை அவர்கள் தொடர்ந்து பின்பற்றி வருகின்றனர். அதன்பிறகு அவர்கள் திருமணம் செய்து கொள்கின்றனர்.
கிளம்பூம் எதிர்ப்பு: சாம்பியா மக்களின் இத்தகைய பழக்க வழக்கங்களுக்கு எதிர்ப்பு என்பது கிளம்பி உள்ளது. குச்சியை வைத்து நாசியில் துளையிடுதல் மற்றும் உயிரணுக்களை குடிக்க வைப்பது உள்ளிட்டவை சிறுவர்களை துன்புறுத்தும் செயலாக நாம் பார்த்தாலும் கூட சாம்பியா மக்கள் அதனை அப்படி பார்ப்பது இல்லை. தங்களின் கலாசாரத்தை பின்பற்றி ஆண் குழந்தைகளை வீரனாக வளர்க்க இப்படி செய்கிறோம் என மாறுபட்ட கருத்தை முன்வைத்து வருகின்றனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications