90ஸ்ல எப்படி இருந்த வேளச்சேரி! இப்போ டோட்டலாக இப்படி மாறுதே! ஆஹா சிஎம்டிஏ! அசத்தல் தமிழக அரசு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சார்பில் வேளச்சேரி மேம்பாலத்தின் கீழே உள்ள இடத்தை அழகுப்படுத்துவதற்கான பணிகளை மேற்கொள்ள கடந்த வாரம் திட்டமிடப்பட்டுள்ளது.

வேளச்சேரி மேம்பாலமானது தரமணி இணைப்பு சாலையையும் வேளச்சேரி பைபாஸ் சாலையையும் இணைக்கிறது. இது 190 மீட்டர் தூரம் ஆகும். இரண்டாம் அடுக்கு மேம்பாலத்தின் நீளம் 1200 மீட்டர் ஆகும். அங்கு 32 இடைவெளிகள் உள்ளன. அதாவது ஒரு தூணில் இருந்து மறு தூணுக்கு இருக்கும் மிகப் பெரிய கேப் இருக்கும்.

velachery cmda chennai

இந்த மேம்பாலம் கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு விடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக வேளச்சேரியில் ரூ 78 கோடியில் வேளச்சேரி புறவழிச்சாலை- வேளச்சேரி- தாம்பரம் சாலையை இணைத்து 640 மீட்டர் நீளத்தில் முதல் அடுக்கு மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இது 15 இடைவெளிகளை கொண்டது.

ரூ 4.5 கோடியில் வேளச்சேரி பேருந்து நிலைய பகுதியில் ஒரு பேருந்து நிலையம், பூங்கா அமைப்பது, உள்ளிட்ட பணிகள் அடங்கும். 6 பஸ்களை நிறுத்தும் அளவுக்கு பே அமைக்கப்படும். அது போல் பயணிகள் காத்திருக்கும் அறை, நடைபாதை, ஆண், பெண்களுக்கு கழிப்பறைகள், மாற்றுத்திறனாளிகளுக்கென கழிப்பறைகளையும் அமைக்கப்படும்.

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக பேருந்து நிலையத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். அது போல் பொதுமக்கள் புகார் அளிக்கும் மையமும் இருக்கும். பேருந்து நிறுத்தும் இடங்களில் நன்கு வெளிச்சம் தரக் கூடிய எல்இடி விளக்குகள் பொருத்தப்படும். சாலையின் தடுப்புச் சுவர்களில் குழந்தைகள் விளையாடும் பகுதி, திறந்த வெளி உடற்பயிற்சிக் கூடம், நடைப்பயிற்சிக்கான பாதைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேம்பாலத்தின் அடியில் உள்ள பகுதிகளில் நடைப்பயிற்சிக்கான பாதை அமைக்கப்படும். பூங்காவில் கலை வேலைப்பாடுகள், சிற்பங்கள் அமைக்கப்படும். பூங்கா இடங்களில் சுற்றுச்சுவர்கள் அமைக்கப்படும். அது போல் நடைபாதைகளில் நல்ல வெளிச்சம் கொடுக்கக் கூடிய எல்இடி விளக்குகள் வைக்கப்படும்.

நடக்கும் போது வழுக்காமல் இருக்கும்படியான டைல்ஸ்கள் ஒட்டப்படும். பூங்கா முழுவதும் நிறைய மரங்கள் , செடிகள், புற்கள் அமைக்கப்படும். நீருறுத்தும் அமைக்கப்பட்டு அதன் மூலம் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவது போல் ஏற்படுத்தப்படும்.

மேம்பால தூண்கள் மற்றும் கீழ் பகுதிகளிலும் அழகுக்காக ஓவியங்கள் வரையப்படும். இந்த மேம்பால அழகுப்படுத்தும் பணிகள் ரெட்டேரி, வில்லிவாக்கம், பாடி, வடபழனி ஆகிய மேம்பாலங்களின் அடியிலு் நடைபெறும். இந்த மேம்பாலங்கள் அனைத்தும் 11 கோடி ரூபாயில் அழகுப்படுத்தப்படும். இவற்றின் மொத்த தூரமே 3086 மீட்டர்கள் ஆகும்.

சென்னையை சிங்கார சென்னையாக மாற்றும் விதத்தில் கொண்டு வரப்பட்டதுதான் மேம்பாலங்கள். மேலும் போக்குவரத்தையும் இந்த மேம்பாலங்கள் குறைக்கப்படுகின்றன. பொது இடங்களில் பூங்காக்கள் அமைப்பது, சுவர்களில் ஓவியங்கள் வரைவது எல்லாமே சிங்கார சென்னை திட்டத்தில் இருப்பதுதான்.

தற்போது சிங்கார சென்னை 2.0 என்ற பெயரில் மேலும் சென்னை அழகுப்படுத்தப்படுகிறது. ஆங்காங்கே மின் விளக்குகள், செயற்கை நீருற்றுகள், என சென்னையே இரவு நேரத்தில் கூட ஜெகஜோதியாக காட்சியளிக்கிறது. அது போல் பொது இடங்களில் கட்டண கழிப்பிடம், ஏராளமான பூங்காக்கள், மெட்ரோ ரயில்கள் என நவீனமயமாகி வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+