நாடாளுமன்ற தாக்குதல்- பாஸ் கொடுத்த பாஜக எம்பி அவைக்குள்ளே- கேள்வி கேட்ட நாங்கள் வெளியே-சு.வெங்கடேசன்
சென்னை: நாடாளுமன்றத் தாக்குதல் நடத்தியவர்களுக்கு பாஸ் கொடுத்த பாஜக எம்பி சபைக்குள் இருக்கிறார்; ஆனால் காரணம் கேட்ட நாங்கள் சபைக்கு வெளியே இருக்கிறோம் என சு.வெங்கடேசன் எம்பி காட்டமாக கேள்வி எழுப்பி இருக்கிறார்.
நாடாளுமன்ற லோக்சபாவுக்குள் அத்துமீறி தாக்குதல் நடத்தியது; நாடாளுமன்ற வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்தது உள்ளிட்ட சம்பவங்கள் நாட்டை பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. இச்சம்பவங்களில் தொடர்புடைய நபர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். தற்போது வரை மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்றத்துக்குள் தாக்குதல் நடத்தியவர்களுக்கு பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா பாஸ் கொடுத்தார் என்பது புகார். அதனால் பிரதாப் சிம்ஹா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; நாடாளுமன்றப் பாதுகாப்பு குறித்து பிரதமர் மோடி அல்லது மத்திய அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் விளக்கம் தர வேண்டும் என லோக்சபா, ராஜ்யசபாவில் எதிர்க்கட்சி எம்பிக்கள் வலியுறுத்தினர். இதனால் லோக்சபா, ராஜ்யசபா நடவடிக்கைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். மேலும் ராஜ்யசபா, லோக்சபாவில் அமளியில் ஈடுபட்டதாக மொத்தம் 14 எம்.பிக்கள் நடப்பு கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டு எம்பிக்களான கனிமொழி, ஜோதிமணி, சு.வெங்கடேசன் உள்ளிட்டோரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கைக்கு திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள் நேற்று நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்தி இருந்தனர்.
பாஸ் கொடுத்த பாஜக எம்பி அவைக்குள்ளே!
— Su Venkatesan MP (@SuVe4Madurai) December 15, 2023
பாதுகாப்பின்மைக்கு காரணம் யாரென கேட்ட நாங்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு அவைக்கு வெளியே!
அவையில் மட்டுமல்ல..
பார்வையாளர் மாடத்திற்கோ, வராந்தாவுக்கோ கூட நாங்கள் செல்லக்கூடாது.
ஆனால் பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா பார்வையாளர்களை இன்றும்… pic.twitter.com/sFoQFl7kqV
தமிழ்நாட்டு எம்பிக்களான கனிமொழி, ஜோதிமணி, சு.வெங்கடேசன் உள்ளிட்டோரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கைக்கு திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள் நேற்று நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்தி இருந்தனர்.
இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சு.வெங்கடேசன் எம்பி தமது எக்ஸ் பக்கத்தில் இன்று பதிவிட்டுள்ளதாவது: பாஸ் கொடுத்த பாஜக எம்பி அவைக்குள்ளே! பாதுகாப்பின்மைக்கு காரணம் யாரென கேட்ட நாங்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு அவைக்கு வெளியே! அவையில் மட்டுமல்ல.. பார்வையாளர் மாடத்திற்கோ, வராந்தாவுக்கோ கூட நாங்கள் செல்லக்கூடாது. ஆனால் பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா பார்வையாளர்களை இன்றும் அனுப்பிவைத்து அவைக்கு பெருமைசேர்க்கலாம். இது தான் பாஜகவின் பாராளுமன்ற மரபு. இவ்வாறு சு.வெங்கடேசன் எம்பி பதிவிட்டுள்ளார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications