சென்னை பாரிமுனையில் மல்டிமாடல் வணிக மையம் .. பிராட்வேயில் தொடங்கிய பணி.. என்னென்ன வசதிகள்
சென்னை: சென்னை பாரிமுனை பஸ் நிலையத்தில் ஒருங்கிணைந்த வசதிகளை கொண்ட 'பல்நோக்கு ஒருங்கிணைந்த பஸ் வளாகம்' (மல்டி மாடல் வளாகம்) அமைக்கும் பணிக்கு திட்டமிடப்பட்டது. அப்போது பழுதான நிலையில் இருந்த குறளகம் கட்டிடத்தையும் இடித்து இத்திட்டத்துடன் இணைத்து பெரிய பஸ் நிலையமும், வணிக வளாகமும் கட்டலாம் என தமிழ்நாடு உள் கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் ஆலோசனை வழங்கியது. அதன்படியே ரூ.823 கோடி ரூபாயில் பல்நோக்கு ஒருங்கிணைந்த பஸ் வளாகம் அமைக்கப்படுகிறது. இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி உள்ளது.
சென்னையில் ஒரு காலத்தில் அனைத்து வெளியூர் பேருந்துகள் வந்து செல்லும் பேருந்து நிலையமாக இருந்தது பாரிமுனை. அண்ணா சாலை மொத்தமும் ஸ்தம்பிக்கும். போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, கோயம்பேட்டிற்கு பேருந்துநிலையம் மாற்றப்பட்டது.

அதன்பிறகு தற்போது கோயம்பேட்டிலும் பேருந்து நிலையம் இல்லை.. அங்குமே நெரிசல் ஏற்பட்டதால், கிளாம்பாக்கத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி எல்லையில் இருந்தே 15 கிமீ தள்ளி தான் கிளாம்பாக்கம் அமைந்துள்ளது. இந்நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் என்பது பாரிமுனையில் இருந்து 30 கிமீ தூரம் தள்ளி உள்ளது. பாரிமுனை பேருந்து நிலையம் புறநகர் பேருந்து நிலையமாக செயல்பட்டு வருகிறது.
அரசின் திட்டம் என்ன
இந்நிலையில் சென்னை பாரிமுனை பஸ் நிலையத்தில் ஒருங்கிணைந்த வசதிகளை கொண்ட 'பல்நோக்கு ஒருங்கிணைந்த பஸ் வளாகம்' (மல்டி மாடல் வளாகம்) உருவாக்க அரசு திட்டமிட்டது. இதன் அருகில் பழுதடைந்துள்ள குறளகம் கட்டிடத்தையும் இடித்து இத்திட்டத்துடன் இணைத்து பெரிய பஸ் நிலையமும், வணிக வளாகமும் கட்டுவதற்கு தமிழ்நாடு உள் கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் ஆலோசனை தந்தது.
823 கோடியில் ரெடியாகிறது
இதையடுத்து சென்னை மாநகராட்சி மூலம் பாரிமுனையில் உள்ள குறளகத்தை உள்ளடக்கிய பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்துக்கான பஸ் நிலையம் அமைக்க ரூ.823 கோடிக்கான திருத்திய நிர்வாக அனுமதி வழங்கி அரசு உத்தரவிட்டது.. இதற்கான பணியை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ஆகியவை இணைந்து மேற்கொள்ள உள்ளன. தற்போது இதற்கான ஆரம்ப கட்டப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
பாரிமுனை மல்டிமாடல் வணிக மையம்
சென்னை மாநகராட்சி அதிகாரிகள் இதுபற்றி கூறும் போது, சென்னை பாரிமுனையில் 27 மாடி மைய கோபுரத்துடன் மல்டிமாடல் வணிக மையம் அமைக்கப்படுகிறது. இந்த மையம் 4.42 ஏக்கர் பரப்பளவில் அமைகிறது. பாரிமுனையின் பல்வேறு பகுதிகளை ஆக்கிரமித்துள்ள விற்பனையாளர்களுக்கு 200-க்கும் மேற்பட்டேருக்கு மாற்று இடங்கள் வழங்கப்பட்டிருக்கிறது.
என்னென்ன வசதிகள்
அனைத்து ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டவுடன், மெட்ரோ நிறுவனம் ரூ.823 கோடி செலவில் மல்டி மாடல் வளாகத்தை கட்டுவதற்கான கட்டுமானத்தை தொடங்க திட்டமிட்டிருக்கிறது. இந்த வளாகத்தில் 2 அடித்தளங்களுடன் 10 தளங்களும், பஸ் நிலையத்திற்கு 2 தளங்களும், வணிக நிறுவனங்களுக்கு 6 தளங்களும் இருக்கும். இதில் இரு சக்கர வாகனங்கள் மற்றும் 4 சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடம், ஓய்வறைகள், டிக்கெட் பகுதி, காத்திருப்பு பகுதி மற்றும் பிற வசதிகளும் . சுரங்கப்பாதைகளுடன் ஐகோர்ட்டு மெட்ரோ ரெயில் நிலையம் மற்றும் குறளகத்துடன் இணைக்க்கப்பட உள்ளது. இதற்கான கட்டுமான பணி தொடங்குகிறது. தற்போது முதற்கட்டமாக மண் பரிசோதனை தொடங்கப்பட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது என்று அதிகாரிகள் கூறினார்கள்.
-
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்












Click it and Unblock the Notifications