"ஆசிரியர்களுக்கு விரைவில் நல்ல செய்தி".. அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன குட் நியூஸ்!
சென்னை: பகுதிநேர ஆசிரியர்கள், திமுக அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களுக்கு விரைவில் நல்ல செய்தி வரும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு பள்ளிகளில் சுமார் 12,000 பகுதி நேர ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். 2012 முதல் பகுதி நேர ஆசிரியர்களாகப் பணியாற்றி வரும் இவர்களுக்கு தொகுப்பூதியமாக 12,500 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 2021 சட்டசபை தேர்தலின் போது பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் கடந்த நிலையிலும் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.
இந்த நிலையில் இந்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த 8 ஆம் தேதி முதல் சென்னை டிபிஐ வளாகத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று பகுதி நேர ஆசிரியர்கள் திடீரென டிபிஐ வளாகத்துக்கு எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆசிரியர்களின் போராட்டத்தை ஒட்டி ஏற்கனவே போலீசார், அவர்களை கைது செய்வதற்காக காவல்துறை வாகனங்களில் வந்திருந்தனர். அதன்படி, சாலை மறியலில் ஈடுபட்ட ஆசிரியர்களை குண்டுக்கட்டாக கைது செய்து வேனில் ஏற்றினர். இந்த போராட்டத்தின் போது ஒருசில ஆசிரியர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபடும் பகுதிநேர ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பகுதி நேர ஆசிரியர்களுக்கு விரைவில் நல்ல செய்தி வரும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி , "பகுதிநேர ஆசிரியர்கள் கடந்த சில நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களிடம் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையின்போது அவர்கள் சில கோரிக்கைகளை முன்வைத்தனர்.
அந்த கோரிக்கைகள் தமிழக முதலமைச்சரிடம் கொண்டு செல்லப்பட்டு பரிசீலனை செய்யப்படும். விரைவில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு நல்ல செய்தி வரும் என நம்புகிறோம். முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற நாள் முதல் பகுதி நேர ஆசிரியர்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் ஊதிய உயர்வு, வயது வரம்பு தளர்வு, பணிமாறுதல், கலந்தாய்வு உள்ளிட்டவற்றை செய்து வருகிறார்." என்று தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications